பாங்கைச் செவியுற்றவர் மீது பள்ளிக்கு வருவது கடமை என்பது பற்றிய பாடம்.


 
கண் பார்வையற்ற ஒரு மனிதர் நபி ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்களிடம் வந்து, அல்லாஹ்வின் தூதர் அவர்களே! நிச்சயமாக என்னை பள்ளிக்கு அழைத்து வரும் உதவியாளர் யாரும் எனக்கில்லை (எனக் கூறி) தனக்கு வீட்டில் தொழுது கொள்ள அனுமதி வழங்குமாறு கேட்கிறார். அதைக் கேட்ட அல்லாஹ்வின் தூதர் நபி ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்கள், அவருக்கு அனுமதியும் வழங்கிவிட்டனர். அனுமதி பெற்று அவர் திரும்பியபோது அவரை அழைத்து தொழுகையின் அழைப்பை (பாங்கை) செவியுறுகிறீரா? என்று கேட்டனர். அதற்கவர் ஆம்! என்றார். (அதற்கு) பதில் கூறுவீராக! (பள்ளியில் வந்து தொழுவீராக!) என்று கூறினர்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா ரளியல்லாஹ் அன்ஹு. 

ஜனாஸாவின் போது செய்யக்கூடாதவை.....!!




 தன் குடும்பத்தில், பந்தத்தில் யாருக்காவது "மரணம்" சம்பவித்த போது கன்னங்களில் அடித்துக்கொண்டவர்களும் அல்லது பாக்கெட்(சட்டை)களை கிழித்துக் கொண்டவர்களும் நம்மைச் சார்ந்தவரல்ல என்பது பற்றிய பாடம்...!!

(முஸ்லிம் :464) “கன்னங்களில் அடித்துக் கொண்டவர்களும் அல்லது பாக்கெட்(சட்டை)களை கிழித்துக் கொண்டவர்களும் அல்லது அறியாமை கால வார்த்தைகளைக்கூறி அதன்பால் அழைத்தவரும் நம்மைச் சார்ந்தவரல்லர்” என அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக அப்துல்லாஹ் பின் மஸ்ஊது ரளியல்லாஹ் அன்ஹுமா அவர்கள் அறிவிக்கிறார்கள்.

குர்ஆன் என்னும் பெயர்


வானவர் ஜிப்ரில் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் மூலம், நபியவர்களுக்கு வல்லவன் அருளிய இந்த நன்மறைக்கு எத்தனையோ பெயர்கள் இருந்த போதிலும், இந்த மாமறையிலே பல இடங்களிலும் குறிப்பிடப்படும் “குர்ஆன்” என்ற பெயரே சிறப்பு பெயராக விளங்கி வருகிறது

“குர்ஆன்” என்ற அரபிச் சொல்லுக்கு “ஓதப்பட்டது”, “ஓதக்கூடியது”, ஓதவேண்டியது என்று பொருள்படும். அண்ணல் நபி அவர்களுக்கு ஜிப்ரில் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் மூலமாக “ஓதப்பட்ட” இவ்வேதம், மனித சமுதாயம் தன் மேன்மையைக் கருதி “ஓதவேண்டியது” என்ற பொருளையே தன் பெயராகக் கொண்டிருப்பதும், இவ்வேதமே இவ்வுலகில் அதிகமான மக்களால் “ஓதப்படுவதும்” சிந்தித்து நயக்கத்தக்கதாக இருக்கிறது.

ஒரு நாள் பூமி வெடிச்சுச் சிதறப் போகுது பாருங்க...! இஸ்லாம் எப்போதோ சொன்னதை இப்போது கண்டு பிடித்திருக்கும் கலிபோர்னிய விஞ்ஞானிகள்.



நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் பூமி பரப்பானது நேற்று இருந்தது போல் இன்றில்லை. இன்று இருப்பது போல் நாளை இல்லை என்ற நிலையில் புதுப்புது மாற்றங்களால் நிறைந்து கொண்டே போகிறது.. இந்த மாற்றங்கள் ரசிப்புக்குரியதோ வியப்புக்குரியதோ அல்ல... இந்த பூமிப் பந்தானது பெரும் பிரளயத்தை நோக்கிச் சென்று கொண்டே இருக்கிறது என்பதன் வெளிப்பாடுதான் இது என்கிறது அறிவியல் உலகம்...

மனிதர்களில் சிலர்தான் அல்லாஹ்வின் அருட்கொடைகளுக்கு நன்றி செலுத்தாதவர்களாக இருக்கின்றனர்.






அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்தஹீ....

மனிதர்களில் சிலர்தான் அல்லாஹ்வின் அருட்கொடைகளுக்கு நன்றி செலுத்தாதவர்களாக இருக்கின்றனர். ஆனால் இப்பிரபஞ்சத்தில் காணப்படும் அனைத்தும் இறைவனுக்கு நன்றி செலுத்துகின்றன

புவி ஈர்ப்பு சக்தியும் புனிதக் குர்ஆனும்





article_4மரத்தி­ருந்து பழம் தரையில் விழுகின்றது! இது நியூட்டனின் சிந்தனைப் புயலைக் கிளப்புகின்றது! இது எப்படி இவ்வளவு வேகமாக பூமியை நோக்கி விரைகின்றது? என்ற சிந்தனை ஓட்டம் அதன் பின்னே விரைகின்றது. அதனால் விளைந்த அறிவியல் பலன் தான் புவி ஈர்ப்பு சக்தி என்ற கண்டு பிடிப்பு! சுற்றிக் கொண்டிருக்கும் புவியைச் சுற்றி ஒரு போர்வையாக புவி ஈர்ப்பு சக்தி ஒன்று சுற்றிக் கொண்டிருக்கின்றது என்ற பேருண்மை உலகத்திற்குத் தெரிய வருகின்றது. இந்த புவி ஈர்ப்பு விசையைக் கண்டுபிடித்த ஐசக் நியூட்டனின் காலம் கி.பி. 1642-1727.

அல்ஜீரியாவில் அமைக்கப்படவுள்ள உலகின் மிக உயரமான பள்ளிவாசல். (படங்கள் இணைப்பு)



அல்ஜீரியாவில் அமைக்கப்படவுள்ள உலகின் மிக உயரமான பள்ளிவாசலின் கட்டுமானப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

அல்ஜீரியாவில் அமைக்ப்படவுள்ள உலகின் மிக உயரமான பள்ளிவாசலுக்கு அத்திவாரமிடும் பணிகள் கடந்த மே மாதம்  நடுப்பகுதியில் ஆரம்பிக்கப்பட்டது.மக்காவின் புனித மஸ்ஜிதுல்ஹரம், மதீனாவின் புனித மஸ்ஜிதுன் நபவி ஆகிய பள்ளிவாசல்களுக்கு அடுத்தபடியாகௌலகின் மூன்றாவது பெரிய பள்ளிவாசலாகவும் இது அமையவுள்ளது.

நன்றி உணர்வே நல்வாழ்வின் அடிப்படை...





நீங்கள் நன்றி செலுத்தினால் உங்களுக்கு அதிகமாக வழங்குவேன். நீங்கள் நன்றி மறந்தால் எனது வேதனை கடுமையானது (அல்குர்ஆன் 14:7)

ஓர் இறை நம்பிக்கையாளரின் விவகாரத்தைப் பார்க்கும் போது அது ஆச்சரியத்தை அளிக்கின்றது. அவரது காரியம் அனைத்தும் நன்மையாகவே அமைகின்றது

இஸ்லாத்தின் பார்வையில் தாடி.




நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இணைவைப்பாளர்களுக்கு மாறு செய்யுங்கள், தாடிகளை வளரவிடுங்கள். மீசையை ஒட்ட நறுக்குங்கள்.

அறிவிப்பவர்: உமர் (ரழி) , ஆதாரம்: புஹாரி 5892

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மீசையை ஒட்ட கத்தரியுங்கள். தாடியை வளர விடுங்கள். மஜூசி (நெருப்பு வணங்கிகளுக்கு)களுக்கு மாறு செய்யுங்கள்.

ஜம் ஜம் நீரூற்று மாபெரும் அற்புதம்.........



மக்காவில் தெளிவான அத்தாட்சிகள் உள்ளன என்று இவ்வசனம் 3:97 கூறுகிறது. தெளிவான் அத்தாட்சி என்றால் யாருக்கும் எந்தச் சந்தேகமும் ஏற்படாத வகையில் மக்கள் கண்டு களிக்கும் வகையிலும் எந்தச் சோதனைக்கு உட்படுத்தப்பட்டாலும் அத்தாட்சி என்பது நிரூபணமாகும் வகையிலும் இருக்க வேண்டும். மனிதன் இன்னும் கண்டறியாத சான்றுகள் பல இருக்கலாம். மனிதன் கண்டறிந்த சான்றுகளில் முதன்மையானது ஜம்ஜம் எனும் கிணறாகும்.

முகப்பு

Related Posts Plugin for WordPress, Blogger...