ஜனாஸாவின் போது செய்யக்கூடாதவை.....!!




 தன் குடும்பத்தில், பந்தத்தில் யாருக்காவது "மரணம்" சம்பவித்த போது கன்னங்களில் அடித்துக்கொண்டவர்களும் அல்லது பாக்கெட்(சட்டை)களை கிழித்துக் கொண்டவர்களும் நம்மைச் சார்ந்தவரல்ல என்பது பற்றிய பாடம்...!!

(முஸ்லிம் :464) “கன்னங்களில் அடித்துக் கொண்டவர்களும் அல்லது பாக்கெட்(சட்டை)களை கிழித்துக் கொண்டவர்களும் அல்லது அறியாமை கால வார்த்தைகளைக்கூறி அதன்பால் அழைத்தவரும் நம்மைச் சார்ந்தவரல்லர்” என அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக அப்துல்லாஹ் பின் மஸ்ஊது ரளியல்லாஹ் அன்ஹுமா அவர்கள் அறிவிக்கிறார்கள்.

மற்றொரு அறிவிப்பில் கிழித்துக் கொண்டு அழைத்தவன் நம்மைச் சார்ந்தவனல்ல என வந்துள்ளது.

உயிரோடிருப்பவர் அழுவதால் மய்யித்து தண்டிக்கப்படுகிறது!!

(முஸ்லிம் :465) “உயிரோடிருப்பவர் அழுவதன் காரணமாக நிச்சயமாக மய்யித்து தண்டிக்கப்படுகிறது” என அப்துல்லாஹ் பின் உமர் ரளியல்லாஹ் அன்ஹு அவர்கள், ஆயிஷா ரளியல்லாஹ் அன்ஹா அவர்களுக்கு கூறியதை (தாம்) கேட்டதாக அம்ரா பின்த் அப்துர்ரஹ்மான் அறிவிக்கிறார். (ஆனால் இதைக் கேட்ட) ஆயிஷா ரளியல்லாஹ் அன்ஹா அவர்கள் அபூ அப்துற்ரஹ்மான் அவர்களை அல்லாஹ் மன்னிப்பானாக! நிச்சயமாக அவர் பொய் கூறவில்லை, எனினும் அவர் மறந்திருக்கலாம், அல்லது அவர் தவறு செய்திருக்கலாம் என்றனர்.

(நடந்த நிகழ்ச்சி யாதெனில்) ஒரு யூதர் பெண்ணின் கப்ர் அருகாமையில் நபி ஸல்லல்லாஹ் அலைஹிவஸல்லம் அவர்கள் சென்ற பொழுது அவளுக்காக அழப்படுவதை (சிலர் அழுவதைப் பார்த்த) அவர்கள், அவளுக்காக அவர்கள் (அச்சிலர்) அழுகின்றார்கள். நிச்சயமாக அவளது கப்ரில் அவள் தண்டிக்கப்பட்டுக்கொண்டிருக்கிறாள் என்றார்கள்.

அறிவிப்பவர் : (அம்ரா பின்த் அப்துற்ரஹ்மான் ரளியல்லாஹ் அன்ஹுமா)
 —

முகப்பு

Related Posts Plugin for WordPress, Blogger...