புங்க மர விதையில் பயோ டீசல்: பள்ளி மாணவியர் சாதனை



மயிலாடுதுறை: மயிலாடுதுறை அருகே, பள்ளி மாணவியர், புங்க மர விதையில் இருந்து எடுக்கப்பட்ட பயோ டீசலை கொண்டு, கார் இன்ஜினை இயக்கிக் காண்பித்தனர்.
நாகை மாவட்டம், மயிலாடுதுறை அடுத்த வடகரையில் உள்ள ஹாஜா சாரா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில், பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவியர், பள்ளி நிர்வாகி ஜியாவுதீன் மற்றும் முதல்வர் குணசேகரன் ஆகியோர் உதவியுடன், புங்க மர விதையிலிருந்து எடுக்கப்பட்ட பயோ டீசலை கொண்டு, வாகன இன்ஜின்களை இயக்க முடியும் என கண்டுபிடித்துள்ளனர். ஹாஜா சாரா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில், நேற்று நடந்த நிகழ்ச்சியில், நாகை கலெக்டர் முனுசாமி முன்னிலையில், மாணவியர் செயல் முறை விளக்கம் காண்பித்தனர்

இஸ்லாத்தை ஏற்ற முதல் இந்தியரும் - தமிழரும்



சேரமான் பெருமாள் பாஸ்கர ரவிவர்மா ( Cheraman Perumal )என்பவர் இஸ்லாம் மார்க்கத்தை ஏற்ற முதல் இந்தியரும்,தமிழரும் ஆவார். இவரது ஆணைப்படியே முதல் இந்திய மசூதி கேரள மாநிலம் கொடுங்கலூரில் கட்டப்பட்டது. சேரமான் பெருமாள் ஜும்மா மசூதி என்று அழைக்கப்படும் இந்த மசூதியே உலகின் இரண்டாவது ஜுமா மசூதி ஆகும்.

கட்டுமான அமைப்பு

இந்த மசூதி இந்தியாவின் முதல் மசூதி என்பதற்கு இதன் அமைப்பே ஒரு உதாரணமாக உள்ளது. இந்து கட்டிடக்கலையை ஆதாரமாக கொண்டு கட்டப்பட்ட இந்த மசூதி, மற்ற உலக மசுதிகளில் இருந்து வேறுபட்டு கிழக்கு நோக்கி கட்டப்பட்டு இருந்தது. (ஆனால் தற்போது இந்த மசூதி திருத்தி மேற்கு நோக்கி கட்டப்பட்டுள்ளது).

காதல் பற்றி இஸ்லாம்



மேற்கத்திய உலகில் சீரழிந்து போன கலாசாரத்தின் சிந்தனையால் உருவானது தான் "காதல்"

”ஒருவனுக்கு ஒருத்தி” என்ற நிலை மாறி 
”ஒருவருக்கும், ஒருத்திக்கும் பலபேர்” என்று சாதாரணமாகிவிட்டது.

அதனை பிரதிபலித்துக் காட்டுவதுதான் மேற்கத்திய உலகின் ‘காதல்'
கற்பு, கன்னித்தன்மை பற்றி அங்கேயாரும் அலட்டிக் கொள்வதில்லை. பரஸ்பரம் உடம்புகளை பரிமாறிக் கொள்வதில், கண்டவர் உடன் கூடிக் கொள்வதில் அலாதியான திருப்தி அவர்களுக்கு! இளம்பெண்களின் உடைகளை உரித்தெடுத்து பவனிவரவிடுவதும் அதற்கு புள்ளிகள் போட்டு கிரீடம் சூட்டுவதும் அவர்களுடைய பொழுதுபோக்கு! அழகு ராணி எனும் பெயரில் பெண்களின் அங்கங்களை அலந்துபார்த்து ரசிப்பதும் ருசிப்பதும் அவரக்களுடைய கௌரவமான பொழுதுபோக்கு! பெண்ணின் கற்பை மயக்கமருந்தாக உட்கொள்வதற்கான அத்தனை வாய்ப்புக்களையும் வழிகளையும் தாராளமாக ஏற்படுத்தி கொள்கிறார்கள். அதற்காகவே பல தினங்களை பல சந்தர்ப்பங்களை ஏற்டுத்துகிறார்கள்..

இஸ்லாத்தில் பிரிவுகள் இல்லை !!!





(இறைவனின்) தெளிவான ஆதாரங்கள் தங்களிடம் வந்த பின்னரும், யார் தங்களுக்குள் பிரிவை யுண்டுபண்ணிக் கொண்டு, மாறுபாடாகி விட்டார்களோ, அவர்கள் போன்று நீங்களும் ஆகிவிடாதீர்கள்; அத்தகையோருக்கு கடுமையான வேதனை உண்டு. (அல்குர்ஆன் 3:105) 


தாடி வளர்பதை பற்றி இஸ்லாம்


முஸ்லிம்களில் மிகப் பெரும்பாலோர் தாடியை மிகவும் கேவலமான ஒன்றாக கருதிக் கொண்டு (பெண்களைப் போல்) முகத்தை வைத்து கொள்ள விரும்புகின்றனர். இஸ்லாமியர்கள் இந்த நடைமுறையை கைவிட்டு விட்டதால், நீதி மன்றங்களும் கூட தாடி வைக்கத் தடை விதிப்பதை நாம் காண்கிறோம். ஆண்களுக்கு மட்டுமே அல்லாஹ் வழங்கியுள்ள தாடியைச் சிரைத்து கொள்வது இன்று நாகரீகமாகக் கருதப்படுகின்றது.

ஜோதிடம் , நல்ல நேரம் & கெட்ட நேரம் பற்றி இஸ்லாம்


நமது வீடுகளில் நடைபெறும் திருமணம் மற்றும் பிற சுப காரியங்களுக்கான தினத்தை முடிவு செய்யும் போது அறிந்தோ அல்லது அறியாமலோ செய்யும் தவறு என்னவெனில் நல்ல நாள் மற்றும் நல்ல நேரம் பார்த்து அந்த தேதிகளை முடிவு செய்வதாகும்.
மார்க்கத்தில் போதிய தெளிவு இல்லாமை, சினிமா மற்றும் கேபிள் டி.வி.க்கள் இவற்றின் முலமாக சிந்திக்கும் ஆற்றல் மழுங்கடிக்கப்பட்டு வரும் இவ்வேளையில் நமது இஸ்லாமிய சகோதர சகோதரிகளும் நல்ல நேரம், கெட்ட நேரம் பார்ப்பது, ஜோதிடம், சகுனம் பார்த்தல் போன்ற இஸ்லாத்திற்கு எதிரான மூடநம்பிக்கைகளுக்கு ஆட்பட்டு அவைகளை நம்பி தமது பொருளாதாரரத்தையும், பொன்னான நேரத்தையும் வீணடித்து வருவது மிகவும் வருத்தத்தற்குரிய விஷயமாகும்.

மனைவியிடத்தில் நல்ல முறையில் நடப்பதும் நல்லறமே!


பேசுவதற்கும் நேரம் ஒதுக்குங்கள்

மனைவியிடத்தில் சிறிது நேரத்தையாவது ஒதுக்கி பேசுவதுகூட நல்லறமே.

நபி (ஸல்) அவர்கள் தம் மனைவியரிடம் பேசுவதற்கு 
நேரம் ஒதுக்கியதை நாம் ஒதுக்கிறோம்.

இறைநம்பிக்கையாளர்களின் அன்னை ஆயிஷா (ரலி)
அவர்கள் கூறியதாவது:

நோய் நலம் விசாரிப்போம் !



இன்பம், துன்பம் என்று எதுவாக இருந்தாலும் எல்லா நேரத்திலும் எப்படி நடந்து கொள்ள வேண்டும்? என்று இஸ்லாமிய மார்க்கம் நமக்கு நல்லமுறையில் கற்றுத்தந்துள்ளது. அவ்வகையில், நோயாளிகளை நலம் விசாரிக்கச் செல்லும் போது கடைபிடிக்க வேண்டிய ஒழுங்குமுறையை போதிக்க இஸ்லாம் மறந்துவிடவில்லை. 
நோயாளியை சந்திக்கச் செல்லும் முஸ்லிம்கள் அவருக்காக துஆ செய்ய வேண்டும் என்று வழிகாட்டியுள்ளது. நோயாளிகளை நலம் விசாரிக்கச் சென்ற அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவர்களுக்காக பிரார்த்தனை புரிந்துள்ளார்கள். அந்தப் பிரார்த்தனைகள் எவையெவை? எனும் விவரங்களை அடுத்து வரவிருக்கும் செய்திகள் மூலம் நாம் தெளிவாக தெரிந்துகொள்ளலாம். 

பெருநாள் தொழுகைக்கு அனுமதி கேட்டபொழுது சிறை அதிகாரிகள் அடித்து உதைத்தார்கள்: விடுதலையான முஸ்லிம் இளைஞர்கள்

பெருநாள் தொழுகைக்கு அனுமதி கேட்டபொழுது சிறை அதிகாரிகள் அடித்து உதைத்தார்கள்: விடுதலையான முஸ்லிம் இளைஞர்கள்


12 Dec 2011 
புதுடெல்லி:ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நடந்த குண்டுவெடிப்பை தொடர்ந்து அநியாயமாக கைது செய்யப்பட்ட 14 முஸ்லிம் இளைஞர்கள் விரைவு நீதிமன்றத்தால் குற்றமற்றவர்கள் என விடுதலைச் செய்யப்பட்டனர். இதில் 3 பேர் அஹ்மதாபாத் குண்டுவெடிப்பு வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளதால் சபர்மதி சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

விடுதலையான 11 பேரும் ராஜஸ்தான் முன்னாள் முதல்வர் பா.ஜ.கவின் வசுந்தரா ராஜே உள்பட தங்கள் மீது அநியாயமாக பழி சுமத்தி சிறையில் அடைத்த அதிகாரிகள் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்போவதாக அறிவித்துள்ளனர்.

 ராஜஸ்தானில் முந்தைய பா.ஜ.க அரசின் பாதையை பின்தொடர்ந்து தங்களை குண்டுவெடிப்பு வழக்கில் குற்றவாளிகளாக சித்தரித்த முதல்வர் அசோக் கெலாட் மன்னிப்புக் கோரவேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஜெய்ப்பூர் குண்டுவெடிப்பில் கைது செய்யப்பட்டவர்களுக்கு டெல்லி பாட்லா ஹவுஸ் என்கவுண்டரில் தொடர்புள்ளதாக ப.சிதம்பரம் பேட்டியளித்ததற்கு பிறகு சிறை அதிகாரிகள் தங்களை கொடூரமாக சித்திரவதை செய்ததாக விடுதலையான முஸ்லிம் இளைஞர்கள் கூறுகின்றனர்.

முகப்பு

Related Posts Plugin for WordPress, Blogger...