பேசுவதற்கும் நேரம் ஒதுக்குங்கள்
மனைவியிடத்தில் சிறிது நேரத்தையாவது ஒதுக்கி பேசுவதுகூட நல்லறமே.
நபி (ஸல்) அவர்கள் தம் மனைவியரிடம் பேசுவதற்கு
நேரம் ஒதுக்கியதை நாம் ஒதுக்கிறோம்.
இறைநம்பிக்கையாளர்களின் அன்னை ஆயிஷா (ரலி)
அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (முதுமையடைந்த பின்) உட்கார்ந்து (இரவுத் தொழுகை) தொழுதிருக்கிறார்கள்.அப்போத
சிறு உதவிகள் செய்யுங்கள்
அஸ்வத் பின் யஸீத் அவர்கள் கூறியதாவது: "தம் வீட்டாரிடம் இருக்கும்போது நபி (ஸல்) அவர்கள் என்ன செய்வார்கள்?'' என்றுநான் (அன்னை) ஆயிஷா (ர) அவர்கடம் கேட்டேன். அவர்கள், "தம் வீட்டாருக்காக (வீட்டு) வேலைகளை நபி (ஸல்) அவர்கள் செய்து வந்தார்கள். தொழுகை (நேரம்) வந்து விட்டால் தொழுகைக்காக எழுந்து (சென்று) விடுவார்கள்'' என்று பதிலத்தார்கள்.
நூல் : புகாரி 6039
நாட்டின் ஜனாதிபதியும் ஆன்மீகத் தலைவருமான நபிகள் நாயகம் (ஸல்) அவர்களே தன் வேலைகளை தானே செய்பவர்களாக இருந்துள்ளார்கள். மனைவியிடத்தில் நல்ல முறையில் நடப்பதற்கு நன்மை என்று கூறி அதை நடைமுறைப்படுத்தியும் காட்டியுள்ளார்கள்.