நோய் நலம் விசாரிப்போம் !



இன்பம், துன்பம் என்று எதுவாக இருந்தாலும் எல்லா நேரத்திலும் எப்படி நடந்து கொள்ள வேண்டும்? என்று இஸ்லாமிய மார்க்கம் நமக்கு நல்லமுறையில் கற்றுத்தந்துள்ளது. அவ்வகையில், நோயாளிகளை நலம் விசாரிக்கச் செல்லும் போது கடைபிடிக்க வேண்டிய ஒழுங்குமுறையை போதிக்க இஸ்லாம் மறந்துவிடவில்லை. 
நோயாளியை சந்திக்கச் செல்லும் முஸ்லிம்கள் அவருக்காக துஆ செய்ய வேண்டும் என்று வழிகாட்டியுள்ளது. நோயாளிகளை நலம் விசாரிக்கச் சென்ற அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவர்களுக்காக பிரார்த்தனை புரிந்துள்ளார்கள். அந்தப் பிரார்த்தனைகள் எவையெவை? எனும் விவரங்களை அடுத்து வரவிருக்கும் செய்திகள் மூலம் நாம் தெளிவாக தெரிந்துகொள்ளலாம். 


அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "ஒரு நோயாüயிடம் (உடல் நலம் விசாரிக்கச்) சென்றால்' அல்லது "நோயாü ஒருவர் நபி (ஸல்) 
அவர்கüடம் கொண்டுவரப்பட்டால்' அவர்கள், "அத்ஹிபில் பஃஸ் ரப்பந் நாஸ் இஷ்ஃபி, வ அன்த்தஷ் ஷாஃபி, லா ஷிஃபாஅ இல்லா ஷிஃபாஉக்க, ஷிஃபாஅன் லா யுஃகாதிரு சகமன்'' என்று பிரார்த்திப்பார்கள். 

பொருள்: மனிதர்களைப் படைத்துப் பராமரிப்பவனே! நோயைப் போக்கி அறவே நோயில்லாதவாறு குணமüப்பாயாக. நீயே குணமüப்பவன். உன் நிவாரணத்தை தவிர வேறு நிவாரணம் இல்லை.
அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி), நூல் : புகாரி (5675)

நபி (ஸல்) அவர்கள் (நோயுற்றிருந்த) ஒரு கிராமவாசியிடம், அவரை நலம் விசாரிக்கச் சென்றார்கள். நபி (ஸல்) அவர்கள் ஒரு நோயாüயிடம் நலம் விசாரிக்கச் சென்றால், "கவலைப்பட வேண்டாம். 
இறைவன் நாடினால் 
(இது உங்கள் பாவத்தை நீக்கி) உங்களைத் தூய்மைப்படுத்திவிடும்'' என்று கூறுவார்கள். (தமது அந்த வழக்கப்படியே) நபி (ஸல்) அவர்கள் கிராமவாசியிடம், "கவலை வேண்டாம். இறைவன் நாடினால் உங்களைத் தூய்மைப்படுத்தும்'' என்று சொன்னார்கள். (இதைக்கேட்ட) அந்தக் கிராமவாசி, "நான் தூய்மை பெற்றுவிடுவேனா? முடியாது. இதுவோ வயது முதிர்ந்த பெரியவரைப் பீடிக்கின்ற சூடாகிக் கொதிக்கின்ற காய்ச்சலாகும். அது அவரை மண்ணறைகளைச் சந்திக்க வைக்கும்'' என்று சொன்னார். 
உடனே நபி (ஸல்) அவர்கள், "அப்படியென்றால் ஆம். (அப்படித் தான் நடக்கும்.)'' என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி),நூல் : புகாரி (3616) (5656) (7470)

நன்மையை நாடி நோயாளியை நலம் விசாரிக்கச் செல்பவர்கள், முன்சென்ற சம்பவங்களை மனதில் பசுமையாக பதியவைத்து கொண்டு அதற்கேற்ப நடந்து கொள்ள வேண்டும். ஏனெனில், நலம் விசாரிக்க சென்றுவிட்டு நோயின் வீரியத்தைச் சொல்லிச்சொல்லி பயமுறுத்தி நோயாளியை மனதால் பலவீனப்படுத்திவிடக் கூடாது; பழங்கதைகளைத் தேடிப்பிடித்துப் பேசித் தொல்லைகளைத் தரக்கூடாது. மாறாக, மனமுடைந்து இருப்பவரின் மனதை திடப்படுத்தும் விதத்தில் நமது வார்த்தைகளும் செயல்பாடுகளும் இருக்க வேண்டும். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நோயாளிகளிடம் சொன்னது போன்று, அல்லாஹ்வின் அருளால் மட்டுமே நலம் கிடைக்கும் என்பதை மனம் குளிர வைக்கும் வார்த்தைகள் மூலம் விளக்கப்படுத்த வேண்டும். அவருக்கு அல்லாஹ்வின் ஆற்றலை,
அவன் அளிக்கும் சோதனையை எடுத்துரைப்பதோடு அவருக்காக 
அல்லாஹ்விடம் பிரார்த்திக்க வேண்டும். 

நலம் விசாரிப்பதின் பயன் :

நோயாளிகளை நலம் சந்திப்பதின் மூலம் நமக்கு என்ன நன்மைகள் கிடைக்க போகிறது? நம்முடைய நேரம்தானே விரையமாகிறது? நமக்குதானே வீண்அலச்சல் ஏற்படுகிறது? என்று நினைப்பது பெருந்தவறு. முதலில் இதை ஒவ்வொருவரும் புரிந்து கொள்ள வேண்டும். காரணம், இக்காரியத்தில் ஈடுபடுவது மூலம் இம்மையிலும் மறுமையிலும் நமக்கு பலவிதமான நன்மைகள் கிடைக்கின்றன. இம்மையில் கிடைக்கும் பயன் என்ன? கண்ணில்லாதவர்கள் படும் கஷ்டத்தைப் பார்த்து நமக்கு தரப்பட்ட கண்ணின் மகத்துவத்தை புரிந்து கொள்கிறோம், இல்லையா? அதுபோலவே ஆரோக்கியம் இல்லாமல் துயரப்படுபவர்களைப் சந்தித்து அவர்களின் துயரத்தை நேரிடையாக காண்பதன் மூலம் நமக்கு கிடைத்திருக்கும் இறையருளான ஆரோக்கியத்தின் மகத்துவத்தைப் புரிந்து கொள்ளலாம்; மிகைத்தவனின் மகிமையை நினைவுபடுத்திக் கொள்ளலாம்; பொலிவிழந்து, வலுவிழந்து, பட்டுபோன இறையச்சத்தை புதுப்பித்துக் கொள்ளலாம். இன்னும் சொல்வதெனில், உலகமோகத்தில் மூழ்கி சீர்கெட்டுப்போன நினைவலைகளை, அறிவாற்றலை இறைநினைவால் சீர்படுத்திக் கொள்ளலாம். இக்கருத்தை பின்வரும் செய்தியின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ் மறுமை நாளில் (ஒரு மனிதரிடம்), "ஆதமின் மகனே! (மனிதா!) நான் நோயுற்றிருந்தபோது என்னை உடல்நலம் விசாரிக்க நீ வரவில்லையே (ஏன்)?'' என்று கேட்பான். அதற்கு மனிதன், "என் இறைவா! நீயோ அகிலத்தாரின் அதிபதியாயிருக்க, உன்னை நான் எவ்வாறு உடல்நலம் விசாரிப்பேன்?'' என்று கேட்பான். அதற்கு அல்லாஹ், "உனக்குத் தெரியுமா? என் அடியானான இன்ன மனிதன் நோய்வாய்ப்பட்டிருந்தபோது அவனிடம் சென்று நீ நலம் விசாரிக்கவில்லை. தெரிந்துகொள்: அவனை உடல்நலம் விசாரிக்க நீ சென்றிருந்தால் அவனிடம் என்னைக் கண்டிருப்பாய்'' என்று கூறுவான். (நீண்ட ஹதீஸின் ஒரு பகுதி)
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி), நூல் : முஸ்லிம் (5021)

இவ்வாறு, நோயாளிகளைச் சந்திக்கச் செல்வதன் மூலம் இம்மையில் பெற்றுக் கொள்ளும் பேறுகள், பலன்கள் ஒரு பக்கம் இருக்கட்டும். 

இன்னொரு பக்கம் இதன்மூலம், எந்த வாழ்க்கையில் வெற்றி பெறவேண்டும் என்று முஸ்லிம்களாகிய நாம் ஏங்குகிறோமோ எதிர்ப்பார்க்கிறோமோ 
அந்த நிலையான மறுமைநாளிலும் அளவற்ற வெகுமதிகளை, நன்மைகளைப் பெற்றுக் கொள்ளலாம். காரணம், இவ்வாறு நலம் விசாரிப்பதற்கு செல்பவர்கள், தாங்கள் திரும்பி வரும்வரை நன்மையான பாதையில் இருக்கிறார்கள். அந்த நொடிகள் அனைத்திலும் அவர்களுடைய நன்மைத்தராசின் எடை கூடிக்கொண்டே இருக்கிறது. எல்லாவற்றுக்கும் மேலாக, இது இறைவனின் அருளை நேசத்தைப் பெற்று எளிதாக சொர்க்கம் செல்வதற்குரிய அருமையான வாய்ப்பாக, சிறந்தவொரு சந்தர்ப்பமாக மாறிவிடுகிறது என்பதை பின்வரும் செய்திகள் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

நோயாளியை நலம் விசாரித்துக் கொண்டிருப்பவர், திரும்பிவரும்வரை சொர்க்கத்தின் கனிகளைப் பறித்துக்கொண்டிருக்கிறார் என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : ஸவ்பான் (ரலி), நூல் : முஸ்லிம் (5017)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "நோயாளியை நலம் விசாரிக்கச் சென்றவர் சொர்க்கத்தின் "குர்ஃபா'வில் இருக்கிறார்'' என்று கூறினார்கள். அப்போது "அல்லாஹ்வின் தூதரே! சொர்க்கத்தின் "குர்ஃபா' என்றால் என்ன?'' என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், "அதன் கனிகளைப் பறிப்பதாகும்'' என்று பதிலளித்தார்கள்.
அறிவிப்பவர் : ஸவ்பான் (ரலி), நூல் : முஸ்லிம் (5020)

அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: (ஒரு நாள்) 
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (எங்களிடம்), "இன்று உங்களில் நோன்பு நோற்றிருப்பவர் யார்?'' என்று கேட்டார்கள். அபூபக்ர் (ரலி) அவர்கள் "நான்' என்றார்கள். "இன்றைய தினம் உங்களில் ஜனாஸாவை (பிரேதம்) பின்தொடர்ந்து சென்றவர் யார்?'' என்று கேட்டார்கள். 

அபூபக்ர் (ரலி) அவர்கள் "நான்' என்றார்கள். "இன்றைய தினம் ஓர் ஏழைக்கு உணவளித்தவர் உங்களில் யார்?'' என்று அவர்கள் கேட்க, அதற்கும் அபூபக்ர் (ரலி) அவர்கள் "நான்' என்றார்கள். "இன்றைய தினம் ஒரு நோயாளியை உடல் நலம் விசாரித்தவர் உங்களில் யார்?'' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கேட்க, அதற்கும் 
அபூபக்ர் (ரலி) அவர்கள் "நான்' என்றார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "எந்த மனிதர் (நல்லறங்களான) இவை அனைத்தையும் மொத்தமாகச் செய்தாரோ அவர் சொர்க்கத்தில் நுழையாமல் இருப்பதில்லை'' என்றார்கள்.
நூல் : முஸ்லிம் (1865),(4758)

பொதுவாகவே மனிதர்களில் பலர் தங்களுக்கு சிரமங்கள் பிரச்சனைகள் வரும்போது மட்டும் இறைவனை அதிகமாக நினைப்பார்கள். குறிப்பாக தங்களின் உடல்நலம் பாதிக்கப்பட்டு படுத்தப் படுக்கையாக கிடக்கும்பேது விழுந்து விழுந்து இறைவணக்கம் புரிவார்கள். ஆரோக்கியமாக இருக்கும் போது ஆன்மீகத்தில் அலட்சியமாக இருந்தவர்கள் இந்த தருணத்தில் அதில் அதிக அக்கறையைச் செலுத்துவார்கள். இதனால்தான், கிறிஸ்தவ மிஷினரிகள் தங்களது மதத்தை வேர்விட்டு வளர்ப்பதற்கு மருத்துவனைகள் அமைத்தல், நோயாளிகளைச் சந்தித்தல் போன்ற காரியங்களில் அதிக அக்கறையைச் செலுத்துகிறார்கள். 

"நோயாளிகளிடம் அன்பும் பரிவும் காட்டுகிறோம்; அவர்களுக்கு அமைதியான வழியைக் காட்டுகிறோம்'' என்று பிதற்றிக் கொண்டு தினந்தோறும் பல மக்களை அசத்தியத்தின் பக்கம் அணிசேர்த்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், நோயாளிகளைச் சந்தித்து நலம் விசாரிப்பது பற்றி அதிகம் போதித்துள்ள பரிசுத்த மார்க்கத்தைப் பின்பற்றும் முஸ்லிம்களோ இந்த விஷயத்தில் போதிய கவனமின்றி கோட்டைவிட்டு குறட்டைவிட்டு தூங்கிக் கொண்டிருக் கிறார்கள். இனியாவது முஸ்லிம்கள் இந்த விஷயத்தில் விழித்தெழ வேண்டும். 

நோயாளிகளைச் சந்தித்து உடல்நலம் விசாரித்து அவர்களிடம் 
அல்லாஹ்வின் ஆற்றலை எடுத்துரைத்து மார்க்கத்தைத் தெளிவுபடுத்தித் திருந்தச் செய்தவன் மூலம் அளவிலா நன்மைகளை அள்ளிக்கொள்ள தயாராக வேண்டும். ஒருவரை நேர்வழியின் பக்கம் அழைத்து வந்ததற்குரிய மகத்தான கூலியை பெற்றுக்கொள்ள போட்டிப்போட வேண்டும். 

இஸ்லாம் கூறும் விதத்திலே நோய்நலம் விசாரிப்பதன் மூலம் மனிதசமுதாயத்திற்கு ஏரளாமான பயன்கள் கிடைக்கின்றன. குறிப்பாக, இதன் மூலம் மனிதர்களுக்கு மத்தியிலே இணக்கம் ஏற்படுகிறது. நெடுங்காலமாக பகைமையில் இருப்பவர் நோய்நொடியால் வாடிக்கொண்டிருக்கும் வினாடி
களில் மற்றவர்கள் அவரைத் தேடிச்சென்று நலம் விசாரிக்கும்போது, காலம் காலமாக தேக்கிவைத்திருந்த கோபத்தை, குரோதத்தைக்கூட மறந்து அவர் மன்னிக்கும் மாண்பினை மேற்கொள்ளலாம். பகைமை மறைந்து பரஸ்பர பாசம் பெருகலாம். 

இதற்குச் சான்றாக பல நிகழ்வுகள் சமுதாயத்தில் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. 

ஆனால், இத்தகைய மாறுதல் நமது வாழ்வில் இருக்கிறது? என்று நாம் சிந்திக்கக் கடமைப்பட்டுள்ளோம். ஆக, மனிதர்களுக்கு மத்தியில் மக்கதான மாற்றத்தை ஏற்படுத்துகிற நோய்நலம் விசாரிக்கும் பண்பினை கடைபிடித்து இரு உலகிலும் வெற்றி பெறுவோமாக

முகப்பு

Related Posts Plugin for WordPress, Blogger...