குஜராத் கலவரம் மோடிகேடி அரசாங்கம் தலைமை ஏற்று நடத்தியது


குஜராத்  கலவரம் மோடிகேடி அரசாங்கம் தலைமை ஏற்று நடத்தியது 

இன்னுமா இந்த சமுதாயம் துங்கிகொண்டு இருக்கு 


இலங்கையில்,முஸ்லிம் பள்ளிவாசல் மீது நூற்றுக்கணக்கானவர்கள் தாக்குதல்

Audio

00:00
02:30


grandpasasadasr3

ஒலி வடிவில் இலங்கையில், தலைநகர் கொழும்பில் கிராண்ட்பாஸ் சுவர்ண சைத்திய வீதியிலுள்ள முஸ்லிம் பள்ளிவாசல் மீது நூற்றுக்கணக்கானவர்கள் தாக்குதல் நடத்தியமை பற்றி சம்பவ இடத்திலிருந்து

ஜகாத்துல் ஃபித்ர் எனப்படும் நோன்புப் பெருநாள் தர்மம்!


நோன்புப் பெருநாளுக்காகவென்றே பிரத்தியேகமாக ஒரு தர்மத்தை இஸ்லாம் முஸ்லிம்கள் மீது கடமையாக்கியுள்ளது. இதன் நோக்கம் பெருநாள் தினத்தில் ஏழைகள் பட்டினி கிடக்கக்கூடாது என்பதாகும். நோன்பின்போது ஏற்பட்ட தவறுகளுக்குப் பரிகாரமாகவும் இது அமைந்துள்ளது.
முஸ்லிமான ஆண்கள், பெண்கள், பெரியவர், சிறியவர், அடிமை, அடிமையில்லாதவர் ஆகிய அனைவர் மீதும் ரமளானில் நோன்புப் பெருநாள் தர்மமாக பேரித்தம் பழம், கோதுமை ஆகியவற்றில் ஒரு "ஸாவு" கொடுப்பதை நபி(ஸல்) கடமையாக்கினார்கள். அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி) நூல்கள்: புகாரி, முஸ்லிம், அஹ்மத், அபூதாவூத், நஸயீ, திர்மிதி, இப்னுமாஜா

நீர் அருந்தும் முறையும், நீர் அருந்தும் முன்னும் பின்னும் மொழிய வேண்டிய இறை நினைவும்!

அபூஸயீது(ரழி)அவர்கள் மர்வான் அரசரிடம் சென்றனர்। “பாத்திரங்களில் ஊதுவதைப் பற்றி நபி (ஸல்) அவர்கள் தடைசெய்ததைத் தாங்கள் அறிவீர்களா?’ என்று மன்னர் கேட்டார். “ஆம்’, “ஒரே மூச்சில் தண்ணீர் குடிப்பதால் தாகம் நமக்குத் தீருவதில்லை’ என்றும், “பாத்திரத்தில் மூச்சு விடலாமா?’ என்றும் ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம் வினவினார். “உம் வாயைவிட்டு பாத்திரத்தை நகர்த்திக் கொண்டு பிறகு மூச்சு விடவும்’ என்று நபி(ஸல்) அவர்கள் கூறினர். “தண்ணீரில் தூசிகள் இருக்கக் காண்கிறேன். வாயால் ஊதி அதனை ஒதுக்கி விடலாமா? என்று அவர் மேலும் கேட்டார்.

“அதை(சிறிது) கீழே ஊற்றுவதால் அது போய் விடும்’ என்று நபி(ஸல்) அவர்கள் எடுத்துரைத்தார்கள். அறிவிப்பாளர்: அபுல் முஸன்னல் ஜுஹ்னிய்யீ ஆதாரம்: முஅத்தா, அபூதாவூத், திர்மிதீ.

“உங்களில் எவரும் எதையாவது அருந்தினால், அதன் பாத்திரத்தில் மூச்சு விட வேண்டாம்” என்று நபி(ஸல்) அவர்கள் கூறினர். அறிவிப்பார்: அபூ கதாதா(ரழி) நூல்: புகாரி, முஸ்லிம், திர்மிதீ, நஸயீ.

“நபி(ஸல்) அவர்கள் எதையாவது குடிக்கும் பொழுது (தம் வாயை அருந்தும் பாத்திரத்திலிருந்து எடுத்து) 3 முறை மூச்சு விட்டு வந்தனர்”அறிவிப்பாளர்: அனஸ்(ரழி) நூல்:புகாரி, முஸ்லிம்,அபூதாவூத், திர்மிதீ.

“ஒட்டகம் தண்ணீர் குடிப்பது போன்று, ஒரே மூச்சில் நீங்கள் நீர் அருந்தாதீர்கள் என்றாலும், இரண்டு மூன்று முறை மூச்சு விட்டு அல்லது எடுத்து எடுத்து தண்ணீர் அருந்துங்கள். மேலும், நீர் அருந்தும் போது “பிஸ்மி’யும் கூறுங்கள். நீர் அருந்தி விட்டால் “அல்ஹம்துலில்லாஹ்’ என்றும் கூறுங்கள்’ என நபி(ஸல்) அவர்கள் கூறினர். அறிவிப்பாளர்: இப்னு அப்பாஸ்(ரழி) நூல்: திர்மிதீ

எவரைத் திட்டி ஏசிப் பேசினீர்களோ, அவருக்காக ஓதும் துஆ!

அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: அண்ணல் நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு துஆ ஓதியதை நான் கேட்டேன்.

اَللّهُمَّ فَأيٌما مُؤمِنٍ سبَبتهُ فَاجعَل ذَالِكَ لَهُ قُربَةٌ إلَيكَ يَوم القِيَامَةِ

”அல்லாஹும்ம பFஅய்யமா முஃமினின் ஸபப்தஹு பFஅஜ்அல் தாலிக லஹு குர்பதன் இலைக்க யவ்மல் கியாமா”

பொருள்: ’யா அல்லாஹ்! எந்த முஸ்லிமை நான் திட்டிப் பேசி விட்டேனோ அவருக்கு அந்த ஏச்சுப் பேச்சை மறுமை நாளில் உன் பக்கம் நெருங்கி வருவதற்கான சாதனமாக ஆக்குவாயாக.!’

ஆதார நூல்கள்: புகாரியின் விரிவுரை ஃபத்ஹுல்பாரி பாகம்-11 பக்கம்-171

முஸ்லிம் பாகம்-4 பக்கம்-2007.

முஸ்லிமில் இடம் பெற்றுள்ள வார்த்தை இதுவாகும்.

فَاجعَلحَا لَهُ زَكَاةً وٌَرَحمَةً
'பFஅஜ்அல்ஹா லஹு ஜகாதன் வ ரஹ்மா”

பொருள்: அதனைத் தூய்மைக்கும் கிருபைக்கும் உரிய சாதனமாக ஆக்குவாயாக!

ரமளானிற்குப் பின் ஒரு முஃமினின் நிலை


வழங்குபவர்: மவ்லவி K.L.M. இப்ராஹீம் மதனீ நாள்: 02.08.2013 இடம்: இஸ்லாமிய அழைப்பு மையம், ஸனவழங்குபவர்: மவ்லவி K.L.M. இப்ராஹீம் மதனீ
நாள்: 02.08.2013
இடம்: இஸ்லாமிய அழைப்பு மையம், ஸனய்யியா, ஜித்தா (சவூதி அரேபியா)

முகப்பு

Related Posts Plugin for WordPress, Blogger...