
அல்ஜீரியாவில் அமைக்ப்படவுள்ள உலகின் மிக உயரமான பள்ளிவாசலுக்கு அத்திவாரமிடும் பணிகள் கடந்த மே மாதம் நடுப்பகுதியில் ஆரம்பிக்கப்பட்டது.மக்காவின் புனித மஸ்ஜிதுல்ஹரம், மதீனாவின் புனித மஸ்ஜிதுன் நபவி ஆகிய பள்ளிவாசல்களுக்கு அடுத்தபடியாகௌலகின் மூன்றாவது பெரிய பள்ளிவாசலாகவும் இது அமையவுள்ளது.
இப்பள்ளிவாசலை அமைப்பதற்கு 1பில்லியன் யூரோக்கள் செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.பள்ளிவாலுடன் அமைக்கப்படவுள்ள உயரமான மினாரத்,ஈபிள் கோபுரத்தை ஒத்த உயரத்தை கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அதவாது பள்ளிவாசல் மினாரத்தானது 270மீற்றர்(880அடி) உயரத்தையுடையதாக அமைக்கப்படவுள்ளது. மோரோக்கோவின் கஸ்பலங்கா நகரில் அமைந்துள்ள ஹஸ்ஸான் பள்ளிவாசலே, தற்போது உலகின் மிக உயரமான பள்ளிவாசலாக விளங்குகின்றது.இப்பள்ளிவாசலின் மினாரத் 210மீற்றர் உயரமுடையது.

அல்ஜீரியாவின் தலைநகர் அல்ஜியஸில் அமைக்கப்படவுள்ள இப்பள்ளிவாசலானது அல்ஜியஸ் பெரியபள்ளிவாசல் எனக் குறிப்பிடப்படுகின்றது.இது 20ஹெக்டயர் நிலப்பரப்பில்,சீன பொறியியல் கட்டுமான கூட்டுத்தாபத்தினால் கட்டப்படவுள்ளதுடன், இதனால் 17,000தொழில்வாய்ப்புக்கள் உருவாக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றதுடன் இவற்றிலதிகமான தொழில்வாய்ப்புக்கள் அல்ஜீரிய நாட்டவர்களுக்கு வழங்கப்படவுள்ளது.
இப்பள்ளிவாசலின் கட்டுமானப் பணிகள் 2015ஆம் ஆண்டில் பூர்த்தியாக்கப்படும்.மேலும் உலகின் மிகௌயரமான பள்ளிவாசலில் ஒரே தடவையில் 120,000 பேருக்கு தொழக்கூடியவகையில் அமைக்கப்படவுள்ளதுடன்,பள்ளிவாசலுடன் இணைந்ததாக வாசிகசாலை மற்றும் கலைஅருங்காட்சியகம் என்பன அமைக்கப்படவுள்ளது.