ஆஷூரா தினத்தன்று நோன்பு



இப்னு அப்பாஸ்(ரலி) கூறினார்.
நபி(ஸல்) அவர்கள் மதீனாவுக்கு வருகை தந்தபோது யூதர்கள் (முஹர்ரம் 10-ஆம் நாளான) ஆஷூரா தினத்தன்று நோன்பு நோற்பதைக் கண்டார்கள். யூதர்களிடம் அதுபற்றிக் கேட்கப்பட்டபோது அவர்கள், 'இந்த நாள் தான் ஃபீர்அவ்னுக்கெதிராக மூஸா(அலை) அவர்களுக்கும் இஸ்ரவேலர்களுக்கும் அல்லாஹ் வெற்றியளித்த நாள். எனவே, நாங்கள் மூஸா(அலை) அவர்களைக் கண்ணியப்படுத்தும் விதத்தில் அதில் நோன்பு நோற்கிறோம்" என்று கூறினார்கள். அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள், 'மூஸா(அலை) அவர்களைக் கண்ணியப்படுத்திட நாங்களே அதிக உரிமையுடையவர்கள்" என்று சொல்லிவிட்டு அந்நாளில் (தாமும் நோன்பு நோற்று) நோன்பு நோற்கும்படி (முஸ்லிம்களுக்கு) உத்தரவிட்டார்கள்.
ஸஹீஹ் புகாரி ஹதீஸ்No:3943(Volume :4 Book :63)

பாபர் மஸ்ஜித் நிஜங்களும்-போராட்டங்களும்

கி.பி.1526 - முதல் பாணிபட் போர் டெல்-க்கு அருகே (இன்றைய ஹரியானா மாநிலத்தில்) பாபருக்கும் அப்போது டெல்-யை ஆண்ட இப்ராஹிம் லோடிக்கும் இடையே நடந்தது. லோடி கொல்லப்பட்டு பாபர் வெற்றி பெறுகிறார். இந்தியாவின் வரலாறு மாறுகிறது. பாபர் முகலாயப் பேரரசின் தலைவராக அறியணை ஏறுகிறார்.

எழுந்து நின்று மரியாதை செய்தல் பற்றி இஸ்லாம்!!!


வயதில் பெரியவர், ஆசிரியர், தலைவர்கள், முதலாளிகள், நிர்வாகிகள், மேலதிகாரிகள் போன்றோருக்காக மற்றவர்கள் எழுந்து நின்று மரியாதை செய்வதை உலகமெங்கும் காண்கிறோம்.
மேல் நிலையில் உள்ளவர்கள் இந்த மரியாதையை உளமாற விரும்புவதையும் நாம் காண்கிறோம். ஆனால் இஸ்லாத்தில் இதற்கு அனுமதி இல்லை.

இஸ்லாத்தின் பார்வையில் அநீதி, அபகரித்தல் மற்றும் மோசடி!


அளவு நிறுவை மோசடி குறித்து அல்-குர்ஆன்!
“அளவு (எடையில்) மோசம் செய்பவர்களுக்கு கேடுதான். அவர்கள் மனிதர்களிடமிருந்து அளந்து வாங்கும் போது நிறைவாக அளந்து வாங்குகின்றனர். ஆனால், அவர்கள் அளந்தோ, நிறுத்தோ கொடுக்கும்போது குறை(த்து நஷ்டமுண்டா)க்குகிறார்கள். நிச்சயமாக அவர்கள் எழுப்பப்படுபவர்களென்பதை அவர்கள் கருத்தில் கொள்ளவில்லையா? (அல்-குர்ஆன் 83:1-4)

சகுனம் பற்றி இஸ்லாம்




அல்லாஹ்வின் திருப் பெயரால்
மனித வரலாற்றில் சகுனம் தொடர்ந்தேர்ச்சியான ஒரு தொற்று நோயாகவே காணப்படுகின்றது. அதனை வைத்து சிலர் வயிறு வளர்ப்பதையும் நாட்டு நடப்புக்கள் எமக்கு எடுத்துக் கூறுகின்றன. அறிவியல் வளர்ச்சியடைந்த இந்த நவீன யுகத்திலும் படித்தவர்கள், பாமரர்கள் என வேறுபாடின்றி அனைவரும் சாத்தானிய சகுனத்தின் சாக்கடை வெள்ளத்தில் அடிபட்டுச் செல்பவர்களாகவே இருக்கின்றனர்.

கழிவறை ஒழுங்குகள் பற்றி இஸ்லாம்


நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நமக்குக் கற்றுத் தந்த கழிப்பறை ஒழுக்கங்கள் பல உள்ளன.

* கழிவரையில் நுழையும்போது முதலில் இடது காலை வைத்து நுழைய வேண்டும். கழிவரையில் இரு பாதங்கள் வைக்குமிடத்தில் முதலில் வலது காலை வைத்து உட்கார வேண்டும். எழுந்திருக்கும்போது இடது காலை எடுத்து வைத்து வர வேண்டும். (நூல்:இப்னு மாஜா)

* முடிந்தவரை குனிந்து ஆடைகளைத் திறக்க வேண்டும்.
(நூல்: அபூதாவூது)

கண்ணா தப்ப தட்டி கேக்க ஆசையா?????????


உங்க ஊரு நியாய விலை கடை , அதான் பா “ரேஷன் கடை” ல இருக்க அங்கிள்/ஆண்ட்டி ஸ்டாக் முடிஞ்சி போச்சின்னு சொல்றாங்களா?..
அவங்க பொய் சொல்றாங்கன்னு நீங்க/ஊர்ல வேற யாரும் நினைக்கிறாங்களா? ..வாங்க பாத்துடுவோம்.
உங்க மொபைல் ல இருந்து
[PDS] [மாவட்டகுறியீடு] [கடைஎண்] //உதாரணத்துக்கு PDS 10 AA001 (இங்க 10 சேலம் மாவட்ட எண்,AA001 கடை எண்) அப்படின்னு டைப் பண்ணி 9789006492, 9789005450 இந்த ரெண்டு நம்பர் ல எதாச்சும் ஒண்ணுக்கு அனுப்புங்க. உங்களுக்கு தகவல் உடனே கிடைக்கும்.
#மாலை 5 மணிக்குள்ள அனுப்ப முயற்சி பண்ணுங்க..
அப்புறம் என்ன நீங்களும் ரமணா தான்..
மேலும் தகவலுக்கு இந்த வலைபக்கத்தை பாருங்க..
http://www.consumer.tn.gov.in/

நபி (ஸல்) அவர்களுடன் பன்னிரண்டு போர்களில் கலந்துகொண்ட நபித்தோழர் !




1995. நபி (ஸல்) அவர்களுடன் பன்னிரண்டு போர்களில் கலந்துகொண்ட அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் நபி (ஸல்) அவர்களிடமிருந்து நான்கு செய்திகளைச் செவியுற்றேன். அவை என்னைக் கவர்ந்தன. அவை: “ஒரு பெண் தன் கணவன் அல்லது மணமுடிக்கத் தகாத நெருஙகிய உறவினர் ஒருவர் தம்முடன் இருக்கும் நிலையில் தவிர, (மற்ற நிலைகளில்) இரண்டு நாட்கள் தொலைவுள்ள பயணத்தை மேற்கொள்ளக் கூடாது! நோன்புப் பெருநாள், ஹஜ்ஜுப்பெருநாள் (ஈதுல் ஃபித்ர், ஈதுல் அள்ஹா) ஆகிய இரு நாட்களில் நோன்பு நோற்கக் கூடாது! சுப்ஹுக்குப் பிறகு சூரியன் உதிக்கும் வரையும் அஸ்ருக்குப் பிறகு சூரியன் மறையும் வரையும் தொழக் கூடாது! (அதிக நன்மையைப் பெற நாடி) மஸ்ஜிதுல் ஹராம் (மக்கா), பைத்துல் முகத்தஸ் (ஜெருசலேம்), எனது இந்த (மஸ்துதுந் நபவீ) பள்ளி வாசல் ஆகிய மூன்று பள்ளி வாசல்களைத் தவிர வேறெதை நோக்கியும் பயணம் மேற்கொள்ளக் கூடாது!”

இன்டர்நெட் நட்பால் சீரழியும் மாணவிகள்: செக்ஸ் காட்சிகளை தயாரித்து பணம் பறிக்கும் கும்பல்

மார்க்கம் அறியாத பெற்றோர்கள்தங்கள் பிள்ளைகளுக்கும் மார்க்கத்தை கற்றுக்கொடுக்காமல். வீட்டிலும் மார்க்கத்தை பேணாமல்.  தங்களின் பொறுப்பை மறந்து..,.   தங்களது பிள்ளைகளுக்கு செல்லம் "பாசம்” ஃபேஷன்என்ற பெயரில் சுதந்திரம் கொடுத்து. பிள்ளைகளின் ஆசைகளை பூர்த்தி செய்வதாக கருதி அவர்கள் வழிகெட காரணமாகிறார்கள்.

உங்களுக்கு 40 வயது ஆகிவிட்டதா?

40 முதல் 60 வயது வரையிலான பருவம் மனித வாழ்க்கையில் மிகமுக்கியமானதுஇந்த காலக் கட்டத்தில்தான் பலவிதமான நோய்கள்மனிதர்களைத் தேடி வரும்அதற்கு இடம் கொடுத்து, உடலில் உட்காரவைத்துவிட்டால், ஆரோக்கியத்தை ஒட்டுமொத்தமாக கெடுத்து ஆளையே வீழ்த்திவிடும். நாம் கவனமாக இருந்தால் நோயை அண்டவிடாமல் தடுத்து, முழு ஆரோக்கியத்துடன் வாழலாம்.
என்னென்ன நோய்கள் வரும்?

மார்க்சியவாதியின் பார்வையில் குர்ஆன்


என்.குணசேகரன், மாநிலக் குழு உறுப்பினர், CPI(M)

உழைக்கும் மக்கள் சார்ந்த மனித நேயம், உறுதியான சமூக நல நோக்கு கொண்ட ஒரு கருத்துக் கருவூலம் குர்ஆன்.

ஆனால், சாதாரண மக்கள் குர்ஆன் போதிக்கும் கருத்துக்களை உள்வாங்கிடவில்லை.

அதன் முக்கியத்துவம் உணர்த்தப்படாதது மட்டுமல்லாது, தவறான புரிதல்கள் பலவும் நிலவுகின்றன.

மார்க்சியப் பார்வையில் குர்ஆனை பயில்கிற போது, மார்க்சியவாதிகளும், இஸ்லாமிய நம்பிக்கை கொண்டோரும் இணைந்து பணியாற்றும் பொதுவான பாதைகள் புலப்படுகின்றன.

வாக்களர் அடையாள அட்டை - ஆன்லைனில்

அஸ்ஸலாமு அலைக்கும்,

வாக்காளர் அடையாள அட்டை இல்லாதவர்கள் புதிதாக தங்களின் பெயரை இணைக்க புகைப்படத்துடன் ஆன்லைனில் அப்ளை செய்ய தமிழ்நாடு தேர்தல் ஆணையம் கடந்த 2010 முதல் இந்த சேவையை அறிமுகம் செய்துள்ளது.

தற்போது நேரில் இந்த சேவை எண்ணற்ற அரசு பள்ளிகளிலும்  நகராட்சி அலுவலங்களிலும்  நடைபெற்று வருகிறது. அவற்றில் இந்த சலுகையை தவறவிட்டவர்கள் ஆன்லைனில் அப்பளை செய்து தங்களின் பெயரை இணைத்துக்கொள்ளவும்.

இணைய முகவரி: http://www.elections.tn.gov.in/eregistration/
 

ஹஜ்ஜை பரிபூரணமாக ! ஏற்றுக்கொள்ள வல்ல இறையோனிடமே இரு கரம் ஏந்தி இறைஞ்சுவோமாக !

a.jpg
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ் மத்துல்லாகி வ பரக்காத்துஹூ....
இனிய நாளில் என் இஸ்லாமிய சொந்தங்கள் பகிர்ந்துக் கொண்ட 
நல் வாழ்த்துக்களுக்கு ! இதயம் நிறைந்த நன்றிகள் ...

முகப்பு

Related Posts Plugin for WordPress, Blogger...