சாதனை மாணவன் !
புகையும் நுரையீரல்கள்
இலவச விமானப்பயணம்
அறிவியல்
புறம் பேசுதல்
ஒரே ஒரு இறைவன்
இறந்தவர்களுக்குச் செய்யும் கடமைகள்
அன்புச் செல்வங்களுக்கு....
உளத்தூய்மையின் முக்கியத்துவம்!
இணையத்தளம் மூலம் மின் கட்டணம் செலுத்தும் வசதி :
தமிழ்நாடு மின்சார வாரியத்தின் சார்பில் மின் கட்டணத்தை இன்டர்நெட் வழியாக
இஸ்லாமிய ஏழை மாணவர்களுக்கு இலவசக் கல்வி
2010 – 2011 கல்வி ஆண்டுக்கான சேர்க்கை தற்போது ஆரம்பமாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயில விரும்பும் ஏழை மாணவர்களுக்கு ( தமிழ் மொழியுடன் உருது / ஆங்கிலம் மீடியம் ) இலவசக் கல்வியும் தங்குமிடமும் இங்கு அளிக்கப்படுகிறது.
ஆர்வமுள்ள மாணவர்கள் பின்வரும் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
அரசு மதரஸா ஆஜம் மேல்நிலைப்பள்ளி
779 அண்ணா சாலை
எல்.ஐ.சி. எதிரில்
சென்னை 600 002
போன்: 0091-44-2841 2742
பூர்த்தி செய்த விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் மே 30ம் தேதியாகும்.
இந்தத் தகவலை ஏழை மாணவர் இல்லத்தைச் சேர்ந்த டாக்டர் சையத் எம்.எம். அமீன் தெரிவித்துள்ளார். அவரைத் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண் – 0091-44-2848 1344
கத்தரில் உருவாகும் உலகின் முதல் குர்ஆன் தோட்டம்!
எதிர்காலத்தினை நிர்ணயிக்கும் சக்திகளான மாணவர் சமுதாயத்தினை மேம்படுத்தும் வகையில் கத்தரில் எஜுகேஷன் ஸிட்டியில் இத்தோட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.இந்நகரத்
இதற்கான அதிகாரப்பூர்வமான அடிக்கல் நாட்டு விழா சென்ற வாரம் நடைபெற்றது. இதனை கத்தர் நாட்டு அரசரின் மனைவியான ஷேக்கா மோஜா நாஸர் அல் மிஸ்னாத் துவங்கி வைத்துள்ளார்.
Heart -காய்கறி பழங்களின் வியப்பூட்டும் மருத்துவ குணங்கள்
காய்கறி பழங்களின் வியப்பூட்டும் மருத்துவ குணங்கள்
நம் உடம்பிலுள்ள இரத்த நாளங்களில் கொழுப்பு படிந்து இருதய அடைப்பு ஏற்படுகிறது. இந்த இருதய அடைப்பு மாரடைப்புக்கு வழிவகுத்து இறுதியில் மரணத்தின் பிடியில் கொண்டு போய் சேர்த்துவிடும்.இந்த இருதய அடைப்பை உடைக்க முடியாதா? நிச்சயம் முடியும்.
இயற்கை வழியில் செல்லும் எவரும் இருதய அடைப்பு என்ற அபாயத்திலிருந்து தப்பித்துவிடலாம்.காரட்: தினமும் காரட்டை அதிக அளவில் சேர்த்துக் கொண்டால் (பச்சையாக) இரத்தத்தின் கொலஸ்ட்ரால் அளவு குறைகிறது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.
முட்டைக்கோசு: மாரடைப்பு நோய் வரும் வாய்ப்பினைக் குறைக்கிறது.
பீட்ரூட்:ஃபோலிக் ஆசிட், இரும்புச் சத்து பீட்ரூட்டில் உள்ளதால் தொடர்ந்து உண்போர்க்கு இரத்தசோகை நோய் வருவதில்லை. இரத்தக் குழாய்களில் படியும் கொலஸ்ட்ராலைக் குறைக்கிறது.இஞ்சி: கணுக்கள் சிறிதாக உள்ள இஞ்சியைத் தேர்ந்தெடுங்கள். இஞ்சி இரத்தக் குழாய்களில் ஏற்படும் இரத்த உறைவைத் தடுத்து மாரடைப்பு வராமல் பாதுகாக்கிறது. இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது. வாய்வுத் தொல்லையைப் போக்குகிறது. மூட்டு வலியைக் குறைக்கிறது.
வெங்காயம்: வெங்காயத்தைத் தொடர்ந்து உண்டு வந்தால் இரத்தத்தின் கொலஸ்ட்ரால் அளவு குறைவதோடு இரத்தத்தின் உறை தன்மையும், ஒட்டும் தன்மையும் குறைவதால் மாரடைப்பு நோய் வரவே வராது.மாரடைப்பு போன்ற இருதய நோய்கள் வராமல் தடுக்கும் சக்தி வெங்காயத்திற்கு உண்டு என்று பல ஆராய்ச்சிகள் மூலம் தெளிவாக்கப்பட்டுள்ளது.
இரத்தக் குழாய்களில் அடைப்பு ஏற்பட்டு மாரடைப்பு வந்தவர்களும் கூட தினமும் 100 கிராம் வெங்காயத்தைத் தொடர்ந்து உண்டு வந்தால் படிப்படியாக இருதய ரத்த நாளங்களில் உள்ள அடைப்புகள் கரைந்து மறைந்துவிடுவதாக நிரூபிக்கப்பட்டுள்ளது.
ஆப்பிள்: இதில் உள்ள `பெக்டின்’ என்ற நார்ச்சத்து இரத்தத்தின் கொலஸ்ட்ரால் அளவைக் குறைப்பது ஆய்வுகளின் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது.
இரத்தத்தில் கொலஸ்ட்ரால் அதிகம் உள்ளவர்கள் தினம் இரண்டு ஆப்பிள் பழங்களைத் தொடர்ந்து மூன்று மாதங்கள் சாப்பிட்டு வந்தால், கொலஸ்ட்ரால் அளவு 10லிருந்து 15 சதவிகிதம் வரை குறைந்துவிடுகிறது. ஆப்பிள் பழத்தில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமுள்ளது.
அன்னாசி: இரத்தக் குழாய்களில் ஏற்படும் அடைப்பை நீக்குவதில் அன்னாசி சிறந்து விளங்குகிறது. மேலும், அன்னாசிப் பழத்தை தொடர்ந்து உண்டு வந்தால் இரத்தத்தில் உறையும் தன்மை குறைவதோடு, இரத்தக் குழாய்களில் உள்ள அடைப்புகளும் நீங்கும்.
எலுமிச்சம்பழம்: உடம்பிலுள்ள சிறிய இரத்தக் குழாய்களின் சுவர்களை எலுமிச்சையில் உள்ள சத்துக்கள் உறுதிப்படுத்துவதோடு சிறுநீரகங்களில் இரத்த ஓட்டத்தையும் அதிகரிக்கிறது. எலுமிச்சையில் `பெக்டின்’ சத்து உள்ளதால் இரத்தத்திலுள்ள கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்கிறது.
பூண்டு: இதில் `சாலிசிலிக்’ என்ற இரசாயனப் பொருள் உள்ளது. நாம் சாப்பிடும் உணவின் மூலம் இரத்தக் குழாய்களில் அதிக அளவு கொழுப்பு சேர்ந்து அடைப்பை உண்டாக்கும் போது பூண்டிலுள்ள `சாலிசிலிக்’ என்ற சத்து அந்த அடைப்பை உடைத்துவிடுகிறது.
சுரைக்காய்: இரத்தக் குழாய்களில் படிந்துள்ள அடைப்பை நீக்குவதில் சுரைக்காய் பலே கில்லாடி! சுரைக்காய் சாற்றை வெறும் வயிற்றில் 200 மிலி மூலம் தொடர்ந்து ஒரு மாதம் குடித்து வந்தால் இரத்தக் குழாய்களில் படிந்துள்ள அடைப்புகள் தவிடு பொடியாகிவிடும்.
வெள்ளரிக்காய்: இரத்தத்திலுள்ள யூரிக் ஆசிட்டைக் கணிசமாக குறைத்து, இதயத்தின் செயல்பாட்டைச் சுறுசுறுப்பாக இயக்க வல்லது. இரத்தக் குழாய்களில் ஏற்படும் அடைப்பை நீக்குவதில் இதற்கும் பங்கு உண்டு.
தர்ப்பூசணி: இதயத்தைக் குளிரச் செய்து இரத்தக் குழாய்களின் அடைப்பைப் போக்கி இரத்த ஓட்டத்தைச் சீர்படுத்துகிறது.
முள்ளங்கி, வெண்டைக்காய்: இந்தக் காய்களைத் தினசரி காலையில் பச்சையாகச் சாப்பிட்டு வந்தால் இரத்தக் குழாய்களில் படிந்துள்ள அடைப்புகள் மூன்றே மாதங்களில் 80 சதவிகிதம் ஒழிக்கப்பட்டுவிடும். ஆனால் தொடர்ச்சியாக சாப்பிட வேண்டும்.
எனவே, காய்களையும் பழங்களையும் நிறையச் சாப்பிட்டு இரத்தக் குழாய்களில் படிந்துள்ள அடைப்புகளைப் போக்கி மாரடைப்பு நம்மைத் தாக்காத வண்ணம் இன்புற்று வாழலாம்.
தொப்பை குறைக்க அன்னாசி
தொப்பை குறைக்க அன்னாசி
ஒரு நாளைக்கு தேவையான மாங்கனீஸ் உப்பைப் பெற ஒரு கப் பழத் துண்டுகளைச் சாப்பிட்டு வந்தால் போதும் அல்லது அரைப்பழம் . பழம்
புதிய பழமாக இருக்க வேண்டும்.பொட்டாசியம்,கால்சியம் போல உடல் நலத்திற்குத் தேவையான உப்பு குளுகோஸ் வளர்சிதை மாற்றத்தில் பங்கு வகிக்கிறது.
அன்னாசி பித்தக் கோளாறுகளை விரைந்து குணமாக்குகிறது.அன்னாசியில் கொழுப்பு குறைவு, நார்ச்சத்து அதிகம்,அன்னாசியில் புரதம்
தாராளமாக இருப்பதால் ஜீரணக் கோளாறு உடலில் வீக்கம் போன்றவை எதிர்ப்படாது.
இளம்பெண்கள் உட்பட அனைவரின் தொப்பையும் கரைக்கும் சக்தி அன்னாசிக்கு உண்டு.ஓர் அன்னாசிப்பழத்தைச் சிறு துண்டுகளாக நறுக்கி
நான்கு தேக்கரண்டி ஓமத்தை பொடி செய்து அதில் போட்டு நன்றாகக் கிளறி ஒரு ட்ம்பர் தண்ணிர் ஊற்றிக் கொதிக்கவிடவும் .இரவில் அதை
அப்படியே வைத்திருந்து மரு நாள் காலையில் அதைப் பிழிந்து சாறு எடுத்து வெறும் வயிற்றில் சாப்பிடவும்.
இந்த முறைப்படி பத்து நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உங்கள் தொந்தி கரைய ஆரம்பிக்கும்
மூட்டுவலியினால் முடங்க வேண்டாம்
மூட்டுவலியினால் முடங்க வேண்டாம்
முன்பெல்லாம் கால் வலி, முட்டி வலி என்று பெரியவர்கள் தான் புலம்புவார்கள். ஆனால் தற்போதெல்லாம் 30 வயதைக் கடந்துவிட்டாலே அனுபவத்தை விட இதுபோன்ற வலிகள்தான் அதிகம் வருகின்றன.
இப்போதிருக்கும் உணவு முறை, உடல் எடை போன்றவற்றால் இளைஞர்களுக்குக் கூட மூட்டு வலி வர அதிக வாய்ப்புகள் உள்ளன என்று ஆராய்ச்சிகள் கூறுகின்றன.
பெரும்பாலானவர்களுக்கு மூட்டு வலி வருவதற்கு உடல் எடை அதிகமாக இருப்பதே முக்கியக் காரணமாகும். கால்சியம் சத்துக் குறைவு, நோய் எதிர்ப்புத் தன்மை இல்லாமை, உடலில் தோன்றும் ரசாயன மாற்றங்கள், இளம் வயதில் உடற்பயிற்சி செய்யாமை போன்றவையும் மூட்டுவலிக்கு காரணமாக அமைகின்றன.
மூட்டு வலி வந்த பிறகு அதற்கு சிகிச்சை மேற்கொள்வதை விட, வராமல் தடுக்க முன்னெச்சரிக்கையாக இருப்பதே சிறந்தது.
உண்மையிலேயே மூட்டு வலியா?
முட்டி வலித்தாலே அது மூட்டு வலி என்று நினைத்துக் கொள்ள வேண்டாம்.
மூட்டுகளில் கடுமையான வலியும் வீக்கமும் காணப்படும். மூட்டுகள் உஷ்ணமாக இருக்கும். மூட்டு வலி ஏற்பட்டால் உடல் சோர்வு அசதி, காய்ச்சல் போன்ற அறிகுறிகளும் காணப்படும்.
மூட்டு வலிகளுக்கு உடனடியாக சிகிச்சை பெற வேண்டியது அவசியம். அவ்வாறு இல்லையெனில் மூட்டு வலி தீவிரமடையும். பிறகு கால்களை நீட்டக் கூட முடியாத நிலை ஏற்படலாம்.
மூட்டு வலி ஏற்படாமல் இருக்க வேண்டும் என்றால், நமது அன்றாட பழக்க வழக்கங்களை மாற்றிக் கொண்டாலேப் போதும். அதாவது, நன்கு நேராக நிமிர்ந்து, உட்கார, நிற்க பழக வேண்டும். இந்த தவறைத்தான் பெரும்பாலானவர்கள் செய்கிறார்கள். அதாவது, கூன் போட்டபடி அமர்வதாலேயே பெரும்பாலானவர்களுக்கு மூட்டுகள் பலமிழக்கின்றன.
நிற்கும்பொழுது பாதங்களை சற்று அகற்றி வைத்து நிற்பதால் உடல் எடை சமமாகப் பரவும். தோள்களை சரியான நிலையில் வைப்பதாலும், முதுகுத் தண்டை நிமிர்த்தியபடி உட்காருவதாலும் நல்ல பலன் கிடைக்கும்.
குதிகால் செருப்புகளைப் பயன்படுத்துவதை பெண்கள் தவிர்க்க வேண்டும். இது இடுப்பு மற்றும் கால் மூட்டுகளில் அழுத்தத்தை ஏற்படுத்தும்.
நடக்கும் போதும், உடற்பயிற்சி செய்யும்போதும் அதற்கென உள்ள காலணிகளைப் பயன்படுத்த வேண்டும். கண்டிப்பாக வருடத்திற்கு ஒருமுறை காலணிகளை மாற்ற வேண்டும்.
எந்த வேலையையும் ஒரேடியாக செய்யாமல் சிறிது இடைவெளி விட்டு செய்யலாம். அலுப்பு தோன்றாமல் இருக்க தங்களுக்குப் பிடித்த பாடல்களை கேட்டுக்கொண்டே வேலை செய்யலாம். அதிக நேரம் உட்கார்ந்தபடி பணியாற்றுபவர்கள், அவ்வப்போது எழுந்து காலார நடந்துவிட்டு வந்து உட்கார்ந்து வேலைகளைச் செய்யலாம்.
பெண்கள் எந்தப் பொருளையும் குனிந்த நிலையில் இருந்து தூக்கக் கூடாது. காலை மடக்கி உட்கார்ந்த நிலையில்தான் பொருளைத் தூக்க வேண்டும். தரையில் உட்கார்ந்து வேலை செய்பவர்கள், தாங்கள் அமரும் இருக்கையை மிருதுவாக இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டியது அவசியம்.
மூட்டு வலி வந்தவர்கள்..
வலியின் தன்மை, வலி கூடும், குறையும் நேரம், உடற்பயிற்சி செய்யும் அளவு, எடுத்துக் கொள்ளும் மாத்திரைகள் போன்றவற்றை மருத்துவரிடம் செல்லும்போது தெரிவிக்க வேண்டும்.
நிம்மதியான தூக்கம் உடலை அமைதியாகவும், தளர்வாகவும் ஆக்குகிறது. தூங்கும்போது மூட்டுகளும் தளர்வடைகின்றன. 7 முதல் 9 மணி நேர தூக்கம் கட்டாயம் தேவை. பகல் உணவுக்குப் பின் 10-20 நிமிடங்கள் ஓய்வெடுப்பது வலியை நன்கு குறைக்கும்.
அசைவ உணவைத் தவிர்த்து அதிக காய்கறி, பழங்களை சேர்த்துக் கொள்ள வேண்டும். கால்சியம் சத்து நிறைந்த பால் பொருட்களை தேவைக்கேற்ப எடுத்துக் கொள்ளலாம். உப்பைக் குறைத்துக் கொள்வது மிகவும் நல்லது.
மூட்டு வலி உடையவர்கள் செய்ய வேண்டிய உடற்பயிற்சிகளை செய்யலாம். உடற்பயிற்சிகள் தசைகளை வலிமைப்படுத்துகிறது. எளிமையான உடற்பயிற்சிகளை மேற்கொண்டாலே நல்ல மாற்றத்தை உணர முடியும்.
காரட், பீட்ரூட் போன்ற காய்களை பச்சையாக சாப்பிடலாம், சூப் செய்தும் சாப்பிடலாம். வாழைப் பழங்களை அதிகமாக உண்ணுங்கள்.
காபி, டீ போன்றவற்றையும், பொரித்த உணவுகளையும் தவிர்த்துவிடுவது நல்லது.
நடைப்பயிற்சி, உடற்பயிற்சி எதுவாக இருந்தாலும் அளவோடு இருக்க வேண்டும்.
வலியை மறப்பதற்கு மற்ற விஷயங்களில் கவனத்தை திசை திருப்ப வேண்டும். மனதை எப்போதும் லேசாக வைத்துக் கொள்வதும் அவசியம். வலியைப் பற்றியே நினைத்துக் கொண்டிருப்பதும் நல்லதல்ல
உடலின் பாதுகாப்புத்தன்மையின்மையால்
உடலின் பாதுகாப்புத்தன்மையின்மையால் நோய்க் குள்ளாகி ஆஸ்பத்திரிக்கு அலைவதை விட …
உடலின் பாதுகாப்புத்தன்மையின்மையால் நோய்க் குள்ளாகி ஆஸ்பத்திரிக்கு அலைவதை விட நாம் உண்ணும் உணவுகளே பிரதான நோய் தடுக்கும் ஆற்றலைக் கொடுக்கிறது.
அரைக்கீரையின் பயன்களும் அப்படித்தான்/ நோய் தீர்க்கும் அரும் மருந்தாக உதவுகிறது. அரைக்கீரை அதிக அளவிலும்/ தமிழக மக்கள் அதிகமாக பயன்படுத்தும் கீரையுமாகும். அரைக்கீரை இதன் விதை இரண்டுமே உணவாகப் பயன்படுகின்றன. இந்த கீரையில் அற்புதம் தரும் பயன்கள் உள்ளன. இதில் வைட்டமின்களும்/ தாது உப்புகளும் குறிப்பிடத்தக்க அளவில் உள்ளன. பல்வேறு பக்குவங்களில் இக்கீரையைச் சமைத்து சாப்பிடலாம். அபார ருசியையும்/பசியையும் உண்டுபண்ணும் இக்கீரை குழந்தை பெற்ற தாய்மார்களுக்கு முக்கிய உணவாகும்.
பிரசவித்த பெண்களுக்கு சீதளம் வராமல் பாதுகாக்கும்.உடலுக்கு பலத்தையும், சக்தியையும் கொடுக்கும். கீரையின் சத்துக்கள் பெருமளவில் தாய்ப்பாலில் கலப்பதால, குழந்தையையும் நோய்களிலிருந்து பாதுகாக்கிறது. இக்கீரையை மிளகு ரசத்துடன் கலந்து உட்கொண்டால் உடல் நலமடையும். அரைக்கீரையை பழைய புளியுடன் கடைந்து சாப்பிட்டு வந்தால் பித்த சுரம்/ வாய் ருசியற்றுப்போதல், பசி இல்லாத நிலை போன்றவை குணமாகும். அரைக்கீரையுடன் பூண்டு, மிளகு, பெருகாயம் ஆகியவற்றை சோத்து மசியல் , குழம்பு, பொரியல் செய்து சாப்பிட வாதம், வாய்வு தொடாபான உடல் வலிகள் நீக்கி விடும்.
நாள்தோறும் இக்கீரையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் நோய்கள் எதுவும் ஆகாது. நரம்பு சம்பந்தப்பட்ட நோய் களுக்கு இந்தக் கீரையை மருந்தாகப் பயன்படுத்துகிறார்கள். பிடா வலி, மண்டை பீனிச நரம்பு வலி, ஜன்னி தலை வலி, கன்ன நரம்பு புடைப்பு ஆகியவற்றையும் இந்தக் கீரை குணப்படுத்தும். இக்கீரை மலமிளக்கியாகவும் திகழ்கிறது. குழந்தைகளுக்கும் மலச்சிக்கல் தீர, உணவாக இக்கீரையை கொடுக்கலாம். அரைக்கீரை விதைகளை இடித்துக் கூழ் போல காய்ச்சி உணவாக உட்கொள்கின்றனா. இக்கீரை விதை யில் தயாரிக்கப்படும் தைலம் கண்ணுக்கு குளிர்ச்சியைத் தருவதுடன் தலைமுடி மின்னி கருமையாகவும், செழித்து வளரவும் செய்கிறது. இத்தனை அற்புதங்களை அரைக்கீரை தரும்போது இதனை உணவில் யாரும் சோக்கவா மறப்பார்கள்> எங்க கிளம்பிட்டீகளா அரைக்கீரையை வாங்கவா..
தயிர்
1850ஆம் ஆண்டு நியூயார்க்கில் ஒருவர் மதுக்கடை ஒன்றும் அதன் அருகிலேயே யோகர்ட் கடை ஒன்றும் (தயிர் போன்றது) திறந்தார். யோகர்ட் கடையில் வியாபார் பிய்த்துக்கொண்டு போக, பலவிதமான இனிப்புச் சுவை சேர்க்கப்பட்ட தயிரைத் தயாரித்து பெரும் கோடீஸ்வரரானார்!
இன்று உலகெங்கிலும் தயிர் சாப்பிடுவது அதிகரித்து வருகிறது. பால் சாப்பிட்டால் ஒரு மணி நேரம் கழித்து 32%பால்தான் ஜீரணமாகியிருக்கும். ஆனால், தயிர் சாப்பிட்ட ஒரு மணி நேரத்தில் 91% உடனே ஜீரணிக்கப்பட்டிருக்கும்.
தயிரில் உடலுக்கு அழகைத் தரும் ‘அழகு வைட்டமின்’ என்று சொல்லப்படும் ரிஃபோபிளவின் உள்ளது. இது உடலைப் பளபளப்பாக்க வல்லது. கண்வலி, கண் எரிச்சல் முதலியவை இருந்தால் அப்போது தயிர் சாப்பிட வேண்டும். அப்படிச் சாப்பிட்டு வந்தால் போதுமானது! கண் நோய்களும் குணமாகும்.
பெண்களுக்கு மிகமிக முக்கியமான உணவாகத் தயிரே விளங்குகிறது. கரு நன்கு முதிர்ச்சி அடையவும், பிரசவத்தின் போது உடல் நலமாக இருந்து எளிதாகப் பிரசவம் ஆகவும், குழந்தைக்குத் தாய்ப்பால் நன்கு உற்பத்தியாகிப் பால் கிடைக்கவும் தயிரில் உள்ள கால்சியம் உதவுகிறது. எனவே இவர்கள் தினமும் இரண்டு வேளையாவது நன்கு கட்டியான தயர் சாப்பிடுவது நல்லது.
பூப்படையத் தாமதம், மாதவிலக்குக் கோளாறுகள் முதலியவற்றையும் தயிர் மாமருந்தாக இருந்து குணப்படுத்துகிறது. மகாராஷ்டிராவிலும், குஜராத்திலும் உள்ள பெண்களுக்கு பிறப்பு உறுப்பு சம்பந்தமான நோய்களே மிகவும் குறைவு. காரணம், காலையில் தயிர் சேர்த்து சப்பாத்தி, ரொட்டி இவற்றைச் சாப்பிடுவதுதான் என்கிறார்கள். கொழுப்பு குறைவாக இருக்கும் விதத்தில் கோதுமைமாவுடன் பருப்பு மாவைக் கலந்து ரொட்டி சுடுகின்றனர். மிஸி ரொட்டி என்ற பெயருள்ள இந்த ரொட்டியைத் தயிரில் தவறாமல் தோய்த்து எடுத்துச் சாப்பிடுகின்றனர்.
தினமும் தவறாமல் இரண்டு அல்லது மூன்று கப் தயிர் சாப்பிட்டு வந்தால் குடல் கோளாறுகள் முற்றிலும் குணமாகும். முதிய வயதிலும் விரும்பிய உணவை அளவுடன் ருசித்துச் சாப்பிடலாம்.
கால்சியத்தினால் பற்களும் உடம்பும் எண்பது, தொண்ணூறு வயதுக்குப் பிறகும் உறுதியாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கும். இந்த உண்மையை நோபல் பரிசை வென்ற ரஷ்ய பாக்டீரியாலஜிஸ்ட்டான பேராசிரியர் எலிக் மெட்ச்ஜிக்கோப் கண்டுபிடித்தார்.
மேலும் இவர் பல்கேரியாவில் பலர் 100 வயதுக்கு மேல் வாழ்வதைப் பார்த்து அதிசயித்து அவர்களின் உணவு விபரங்களைக் கேட்டார். எல்லோரும் டீ, காபி சாப்பிடுவது போல ஒரு நாளைக்கு ஐந்து அல்லது ஆறு தடவை உப்புச் சேர்க்காத தயிரைச் சாப்பிடுவதாகச் சொன்னார்கள்.
தயிரில் உள்ள லாக்டிக் அமிலமே உடல் தசை, வயிறு, குடல் முதலியவற்றில் உள் அமிலத்தன்மையைச் சரிசெய்து ஆரோக்கியம், இளமை முதலியவற்றை எப்போதும் புதுப்பித்துப் பாதுகாத்து வருகிறது.
கல்லீரல் கோளாறு, மஞ்சள் காமாலை, சொறி சிரங்கு, தூக்கமின்மை, மலச்சிக்கல் முதலியவை தயிரும் மோரும் சேர்த்தால் விரைந்து குணமாகும்.
தயிர்சாதம் சாப்பிட்டால் மூளை சுறுசுறுப்பாகும். காரணம், இவற்றில் உள்ள கால்சியமும், பாஸ்பரஸும்தான்.
சூப்பர் உணவான தயிரைத் தினமும் சுறுசுறுப்பான டீ, காபி போன்று கருதி அடிக்கடி சாப்பிட்டு வந்தால் மூளையும் விழிப்புடன் இருந்து சாதனைகள் புரியவும் வழி காட்டும்
ரத்த குழாய்களில் ஏற்படும் அடைப்பை நீக்குவதற்கு, அதிநவீன லேசர் சிகிச்சையை
ரத்த குழாய்களில் ஏற்படும் அடைப்பை நீக்குவதற்கு, அதிநவீன லேசர் சிகிச்சையை பிரிட்டன் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்
ரத்த குழாய்களில் ஏற்படும் அடைப்பை நீக்குவதற்கு, அதிநவீன லேசர் சிகிச்சையை பிரிட்டன் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
உலக அளவில் ரத்த குழாய்களில் ஏற்படும் அடைப்புகளால், பாதிக்கப்படும்லட்சக்கணக்கானோர் திடீர் மரணங்களை தழுவும் ஆபத்துடன் வாழ்கின்றனர்.ரத்த குழாய்அடைப்பை நீக்குவதற்கு, பல சிகிச்சை முறைகள் உள்ளன. இருப்பினும், நிரந்தரதீர்வுக்கு, பை-பாஸ் அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது.ஆனால், இந்த அறுவைசிகிச்சை செய்ய பல மணி நேரம் தேவைப்படும். ஆபத்து களும் அதிகம். நோயாளிகள்குணமாக நீண்ட காலம் தேவைப்படுகிறது.இந்த நிலையில், ரத்த குழாய் அடைப்பை உடனடியாக நீக்கும் வகையில், புதிய லேசர் சிகிச்சையை பிரிட்டன் விஞ்ஞானிகள்கண்டுபிடித்துள்ளனர்.ரத்தக் குழாயில் அடைப்பு ஏற்பட்டுள்ள பகுதிக்குள்,“கதீட்டர்’ என்ற நுண்ணிய குழாயை செலுத்தி, அதன் வழியாக சக்தி வாய்ந்த லேசர்கற்றைகள் பாய்ச்சப்படும்.வெப்பம் காரணமாக அடைப்பு ஏற்பட்டுள்ள, பகுதிக்குள்படிந்திருக்கும் தேவையில்லாத படிமங்கள் பொடிப் பொடியாக சிதறி விடும். இந்தலேசர் சிகிச்சைக்கு, “எக்சைமர்’ என பெயரிடப்பட்டுள்ளது.
கடந்த ஜூலை மாதம், இரண்டு நோயாளிகளுக்கு இந்த லேசர் சிகிச்சை அளிக்கப்பட்டு,சோதனை நடத்தப்பட்டது.இந்த சோதனை வெற்றிகரமாக அமைந்தது. மேலும், அந்த நோயாளிகள்சிகிச்சை அளிக்கப்பட்ட மறு நாளே, மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ்செய்யப்பட்டனர்.இந்த சிகிச்சை மூலம் நோயாளிகள் ஆச்சர்யமளிக்கும் வகையில் மிகவிரைவில் பூரண குணமடைந்தனர். இந்த சிகிச்சைக்கான இறுதி கட்ட பரிசோதனைகள் நடந்துவருகின்றன. இந்த அதிநவீன லேசர் சிகிச்சை நடைமுறைக்கு வந்தால், ரத்தக் குழாய்அடைப்பால், பாதிக்கப்படும் லட்சக்கணக்கானோர் பயனடைய வழி பிறக்கும்.
கடவுச்சீட்டு (பாஸ்போர்ட்) பெறுவது எப்படி?
கடவுச்சீட்டு (பாஸ்போர்ட்) பெறுவது எப்படி?
கடவுச்சீட்டு! இந்தியாவில் மேதகு குடியரசுத் தலைவர் பரிந்துரைக்கும் ஓர் ஆவணமாக மட்டுமே செல்லுபடியாகும்.
அதீத முக்கியத்துவம் வாய்ந்த பாஸ்போர்ட் பெறுவது எப்படி? தேவையான தகவல்களைச் சொல்கிறார், மண்டல கடவுச்சீட்டு அலுவலர்(பொறுப்பு) தவ்லத் தமீம்.என நான்கு விதமான பாஸ்போர்ட்கள் வழங்கப்படுகின்றன. Ordinary பாஸ்போர்ட் சாதாரண குடிமக்களுக்கும், Official அரசாங்க ஊழியர்களுக்கும், Diplomatic முதல்வர், பிரதமர் போன்ற உயர்மட்டத் தலைவர்களுக்கும், Jumbo வியாபார நிமித்தமாக அடிக்கடி வெளிநாடு செல்பவர்களுக்கும் வழங்கப்படும்!¼br /> பாஸ்போர்ட் பெறுவதில் இரண்டு முறைகள் உள்ளன. ஆர்டினரி, தட்கல் ஆகியவை. இதில் எந்த வகையில் விண்ணப்பிப்பதாக இருந்தாலும், சென்னையைச் சேர்ந்தவர்கள் ஆன்லைன் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பித்து, அந்தப் படிவத்தை ‘பிரின்ட் – அவுட்’ எடுத்துக்கொள்ள வேண்டும். அதை பாஸ்போர்ட் அலுவலகத்தில் அளிக்க வேண்டும். அவர்கள் குறிப்பிடும் ஒரு தேதியில் வந்து டோக்கன் எடுக்க வேண்டும். பின்னர், நிர்ணயிக்கப்பட்ட கவுன்ட்டர்களில் செக் இன் செய்ய வேண்டும். சென்னையில் உள்ளவர்கள் தங்கள் கைப்பட பாஸ்போர்ட் விண்ணப்பத்தைப் பூர்த்திசெய்து கொண்டுவந்தால் அது ஏற்கப்பட மாட்டாது!¼br /> அதே சென்னைக்கு வெளியே பிற ஊர்களில் இருப்பவர்கள் தங்கள் கைப்பட பூர்த்திசெய்யப்பட்ட விண்ணப்பத்தை அந்தந்த மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள பாஸ்போர்ட் பிரிவுகளிலோ அல்லது ஸ்பீடு போஸ்ட் சென்டர்களிலோ சமர்ப்பிக்க வேண்டும். சில மெட்ரோ நகரங்களில் காவல் துறை நிலையங்களில் பாஸ்போர்ட் மையங்கள் இருக்கும். அங்கும் விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்கலாம்.¼br /> தட்கல் முறையில் பாஸ்போர்ட் பெற கட்டாயம் மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்துக்கு நேரடியாக வந்து விண்ணப்பிக்க வேண்டும். அத்துடன், அரசாங்கம் அங்கீகரித்த ஏதேனும் மூன்று அடையாளச் சான்றிதழ் களைச் சமர்ப்பிக்க வேண்டும். அந்த மூன்றில் ஒன்று புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டையாக இருக்க வேண்டும். பொதுவாக, வாக்காளர் அடையாள அட்டை, ரேஷன் கார்டு, டிரைவிங் லைசென்ஸ் ஆகியவற்றின் நகல்களை இணைக்கலாம்.
ஆர்டினரிக்கு, புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை, பிறந்த தேதி குறிப்பிடப்பட்டு இருக்கும் சான்றிதழ், குடியுரிமை ஆவணம் ஆகியவற்றின் நகல்கள் தலா இரண்டு இணைக்க வேண்டும்.
புதிய ஆர்டினரி பாஸ்போர்ட்டுக்கு 1,000, தட்கல் மூலம் என்றால் 2,500 கட்டணம். ஆர்டினரி, தட்கல் என இரு முறைகளிலும் பெறப்படும் பாஸ்போர்ட்டுகள் 10 ஆண்டு களுக்குச் செல்லுபடி ஆகும். 10 ஆண்டுகள் முடிவதற்கு ஓர் ஆண்டுக்கு முன்னாலோ அல்லது பத்தாவது ஆண்டிலோ நீங்கள் அதைப் புதுப்பிக்கலாம். புதுப்பிக்க ஆர்டினரிக்கு 1,000 மற்றும் தட்கலுக்கு 500 கட்டணம். பெயர், முகவரி மாற்றம், திருமணம் ஆனவுடன் உங்கள் மனைவியின் பெயரை உங்கள் பாஸ்போர்ட்டில் குறிப்பிடுதல் போன்ற சின்னச் சின்ன திருத்தங்கள் மேற்கொள்ளவும், பாஸ்போர்ட்டைப் புதுப் பித்துக்கொள்ளவும் ஆன் லைனில் விண்ணப்பிக்கத் தேவை இல்லை. இவற்றில் ஆர்டினரி, தட்கல் இரண்டுக்கும் 1,000 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இவற்றுக்கு ஃபார்ம் 2ஐப் பயன்படுத்த வேண்டும். பாஸ்போர்ட் தொலைந்துபோனால் காவல் துறையினரிடம் புகார் செய்து, எஃப்.ஐ.ஆர். பெற வேண்டும். அவர்கள் ‘non traceable’ சான்றிதழ் தருவார்கள். அதை ஒப்படைத்தால் டூப்ளிகேட் பாஸ்போர்ட் வழங்கப்படும். இதற்கு ஆர்டினரிக்கு 2,500 மற்றும் தட்கலுக்கு 5,000 கட்டணம்.
சர்க்கரை நோயாளிகளுக்கு நல்ல உணவு வேர்க்கடலை!
சர்க்கரை நோயாளிகளுக்கு நல்ல உணவு வேர்க்கடலை!
மகாத்மா காந்திக்கு மிகவும் பிடித்தமான உணவு ஆட்டுப் பாலும் வேர்க்கடலையும். வேர்க்கடலையில் அப்படியென்ன இருக்கிறது? என்று கேட்கிறீர்களா? உங்களுடைய கேள்விகளுக்கான பதிலை பிரபல ஊட்டச்சத்து நிபுணர் அனிதா அவர்கள், “சர்க்கரை வியாதி, இரத்த அழுத்தம், புற்றுநோய், நரம்புமண்டல நோய்கள், ஞாபக மறதி நோய் போன்ற பல நோய்களைத் தடுக்கும் சக்தி வேர்க்கடலைக்கு உள்ளது” என்றார்.தஞ்சை “பாரத் காலேஜ் ஆஃப் சயின்ஸ் அண்ட் மேனேஜ்மென்ட்” – இல் 5 ஆண்டுகளுக்கும் மேலாக ஊட்டச்சத்துத் துறையில் பேராசிரியராகப் பணிபுரிந்த அவர், தற்போது இருப்பது வேலூர் பாகாயம் பகுதியில். ஊட்டச் சத்து ஆலோசகரான அவரிடம் பேசியதிலிருந்து…வேர்க்கடலையில் கொழுப்புச் சத்து அதிகமாக இருக்கிறதே, அது எப்படி பிளட் பிரஷரைத் தடுக்கும்?வேர்க்கடலை, கடலை எண்ணெய் என்றதுமே முதலில் எல்லாருக்கும் ஞாபகத்துக்கு வருவது அதில் உள்ள கொழுப்புச் சத்துதான். வேர்க்கடலை, கடலை எண்ணெயைப் பயன்படுத்தினால் இரத்த அழுத்த நோய் வரும், இதய நோய்கள் வரும் என்ற பயம் பரவலாக உள்ளது. ஆனால் இந்தப் பயத்திற்கு எந்தவித ஆதாரமுமில்லை.வேர்க்கடலையில் கொழுப்புச் சத்து இருக்கிறது. ஆனால் அது நல்ல கொழுப்பு. உடம்புக்குத் தேவையான கொழுப்பு. வேர்க்கடலையை ஏழைகளின் புரதம் என்று கூடச் சொல்லலாம். அந்த அளவுக்குப் புரதச் சத்து அதிகமாக உள்ளது. அது மட்டுமல்ல, 30 விதமான ஊட்டச் சத்துகள் வேர்க்கடலையில் உள்ளன. சர்க்கரை வியாதிக்காரர்களுக்கு வேர்க்கடலை நல்ல உணவு.சர்க்கரை வியாதிகாரர்களுக்கு வேர்க்கடலை எப்படி நல்ல உணவாகிறது?நாம் சாப்பிடும் உணவுப் பொருட்கள் ஒவ்வொன்றிலும் இருந்து எந்த அளவுக்கு சர்க்கரை ரத்தத்தில் சேர்கிறது என்பதைக் கண்டறிந்து அளந்து வைத்திருக்கிறார்கள். அதை கிளைசெமிக் இண்டெக்ஸ் என்பார்கள்.வேர்க்கடலையில் கிளைசெமிக் இண்டெக்ஸ் குறைவு. அதாவது, வேர்க்கடலை சாப்பிட்டால் அதில் இருந்து உடம்பில் சேரும் சர்க்கரையின் அளவு மிக மிகக் குறைவு. எனவே சர்க்கரை வியாதிக்காரர்கள் வேர்க்கடலையை எந்தவிதப் பயமுமின்றித் தாராளமாகச் சாப்பிடலாம். மேலும் வேர்க்கடலையில் உள்ள மெக்னீசியத்திற்கு இன்சுலினைச் சுரக்கும் ஹார்மோன்களைத் துரிதப்படுத்தும் தன்மையும் உள்ளது. இதுவும் சர்க்கரை வியாதிக்காரர்களுக்கு நல்லது.வேறென்ன மருத்துவ குணங்கள் வேர்க்கடலையில் உள்ளன?ரத்த அழுத்தத்தை அதிகப்படுத்தும் தன்மை சோடியத்துக்கு உள்ளது. வேர்க்கடலையில் சோடியத்தின் அளவு குறைவு. எனவே வேர்க்கடலை சாப்பிடுவதால் ரத்த அழுத்தம் அதிகரிக்காது. குறையும்.வேர்க்கடலையில் நார்ச்சத்து அதிகம். வேர்க்கடலை சாப்பிட்டால் மலச்சிக்கல் ஏற்படாது. உடல் பருமன் குறையும்.இன்னொரு விஷயம், வேர்க்கடலை சாப்பிட்டவுடன், “சாப்பிட்டது போதும்” என்ற திருப்தி மிக விரைவில் வந்துவிடும். எனவே வேர்க்கடலையைச் சாப்பிட்டு முடித்தவுடன் அடுத்து எதையாவது சாப்பிட வேண்டும் என்று தோன்றாது. இதனால் சாப்பிடும் இடைவெளி அதிகரிக்கும். அடிக்கடி எதையாவது சாப்பிட்டு, எதையாவது கொறித்து உடல் எடையை அதிகரித்துக் கொள்ளமாட்டீர்கள்.வேர்க்கடலையில் வைட்டமின் ஏ, நீரில் கரையக் கூடிய வைட்டமின் பி3 போன்றவை அதிகமாக உள்ளன. இந்த வைட்டமின்கள் கர்ப்பிணிகளுக்கு மிகவும் அவசியமானது. இந்தச் சத்துப் பொருட்கள் குறைந்தால் பிறக்கும் குழந்தை நரம்புக் கோளாறுகளுடன் பிறக்க வாய்ப்புள்ளது. எனவே கர்ப்பிணிகள் வேர்க்கடலையை அதிகம் சாப்பிட வேண்டும்.வேர்க்கடலையில் சில உயிர் வேதிப் பொருட்கள் உள்ளன. அவை மனித உடலில் புற்றுநோய் உருவாகக் காரணமாக உள்ள செல்களை அழித்துவிடுகின்றன. குறிப்பாக மார்பகப் புற்றுநோய், மலக்குடல் புற்றுநோய், நிணநீர்ப்பை புற்றுநோய் போன்றவை உருவாகக் காரணமாகும் செல்களை வேர்க்கடலையில் உள்ள உயிர் வேதிப் பொருட்கள் அழித்துவிடுகின்றன.வேர்க்கடலையில் நைட்ரிக் அமிலம் உள்ளது. வேர்க்கடலையைச் சாப்பிடுவதன்மூலம் உடம்பில் உற்பத்தியாகும் நைட்ரேட் ரத்தக் குழாய்களை விரிவடையச் செய்கிறது. இதனால் ரத்தம் சீராக ஓடும். ரத்த அழுத்தம் குறையும்.நாம் சாப்பிடும் உணவு உடலில் சேர்ந்து சக்தியாக வெளிப்படுதல், உடலின் வளர்ச்சியாக உருமாறுதல், கழிவுகள் அகற்றப்படுதல் போன்றவை நிகழ்கின்றன. இந்த நிகழ்ச்சிகளை வளர்சிதை மாற்றம் என்பார்கள். இப்படி வளர்சிதை மாற்றம் நடைபெறும்போது சில தேவையில்லாத பொருட்கள் ரத்தத்தில் சுற்றிக் கொண்டிருக்கும். பின்பு அவை உடலுக்குத் தேவையில்லாத கொழுப்பாக மாறிவிடும்.ஆனால் வேர்க்கடலை சாப்பிட்டால் அதிலுள்ள உயிர் வேதிப் பொருள்கள் இப்படித் தேவையில்லாமல் ரத்தத்தில் சுற்றிக் கொண்டிருக்கும் பொருட்களை கல்லீரலுக்குள் தள்ளிவிட்டுவிடும். தேவையில்லாத அந்தப் பொருட்கள் கழிவாகி வெளியேறிவிடும்.வேர்க்கடலை சாப்பிட்டால் நரம்பு மண்டலத்துடன் தொடர்புடைய நோய்கள் குறைந்துவிடும். பார்க்கின்ஸன், அல்ஸ“மர் போன்ற ஞாபக மறதி நோய்கள் வராமல் தடுக்க வேர்க்கடலை உதவும். வேர்க்கடலையில் உள்ள உயிர் வேதிப் பொருள்கள் நரம்பு செல்களை நன்றாகச் செயல்படத் தூண்டிவிடுகின்றன. அதனால் நரம்புகள் நன்றாகக் செயல்படுகின்றன.இதிலுள்ள ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்ஸ் உடம்பில் உள்ள தேவையற்ற கழிவுகளை நீக்கிவிடும். வேர்க்கடலையில் நல்ல கொழுப்பு இருக்கிறது.வேர்க்கடலையில் இருந்து தயாரிக்கப்படும் கடலை எண்ணெயில் கொழுப்புச் சத்து அதிகம்தானே? அது உடலுக்குக் கெடுதி இல்லையா?தண்ணீரைச் சுட வைத்தால் கொஞ்சம் கொஞ்சமாகச் சூடேறி 100 டிகிரி சென்டிகிரேடு வெப்ப நிலை வந்தவுடன் தண்ணீர் கொதிக்கத் தொடங்கிவிடும். இதை நீரின் கொதிநிலை என்பார்கள். அதைப் போல எண்ணெயின் கொதிநிலையை ஸ்மோக் பாயிண்ட் என்பார்கள்.எண்ணெய் கொதிக்கத் தொடங்கினால் அதில் உடலுக்குத் தேவையற்ற கெட்ட கொழுப்புகள் உருவாகிவிடும்.கடலெண்ணெயின் ஸ்மோக் பாயிண்ட் பிற எண்ணெய்களை விட அதிகம். பிற எண்ணெய்களின் ஸ்மோக் பாயிண்ட் 275 இலிருந்து 310 வரை இருக்கிறது.ஆனால் கடலை எண்ணெயின் ஸ்மோக் பாயிண்ட் 320. இதனால் கடலை எண்ணெய்யைச் சமையலுக்குப் பயன்படுத்தும் போது அது எளிதில் கொதிநிலையை அடையாது. அதாவது கெட்ட கொழுப்புகள் உருவாகாது. அதே சமயம் கடலை எண்ணெய்யில் உள்ள நல்ல கொழுப்பு அப்படியே இருக்கும். இப்போது சொல்லுங்கள், கடலை எண்ணெயை சமையலுக்குப் பயன்படுத்தினால் உடலுக்குக் கெடுதியா?ஆனால் இதில் கவனிக்க வேண்டிய ஒன்று இருக்கிறது.சுத்திகரிக்கப்பட்ட கடலை எண்ணெயில் உடலுக்குக் கெடுதி தரும் கொழுப்பு இருப்பதற்கு வாய்ப்புள்ளது. ஏனென்றால் எந்தவொரு எண்ணெய்யையும் சுத்திகரிப்பதற்காக பலமுறை அதிக வெப்பத்தில் கொதிக்க வைக்கிறார்கள். இதனால் உடலுக்குத் தீங்கு செய்யும் கெட்ட கொழுப்புகள் அதில் உருவாகக் கூடிய வாய்ப்பு உள்ளது.வேர்க்கடலையைப் பச்சையாகச் சாப்பிடலாமா? ஒரு நாளைக்கு எவ்வளவு சாப்பிடலாம்?வேர்க்கடலையைப் பச்சையாகச் சாப்பிடுவதைவிட, வேர்க்கடலையை அவித்தோ, வறுத்தோ சாப்பிடலாம். ஆனால் வேர்க்கடலையை எண்ணெயில் போட்டு வறுத்துச் சாப்பிடக் கூடாது. வேர்க்கடலையின் தோலை நீக்காமல் சாப்பிட வேண்டும். ஏனென்றால் அதில்தான் நிறையச் சத்துகள் உள்ளன.ஒரு நாளைக்கு மாலை வேளைகளில் தின்கிற நொறுக்குத் தீனிகளுக்குப் பதிலாக 50 கிராம் வரை வேர்க்கடலை சாப்பிடலாம்.வேர்க்கடலையைச் சாப்பிடும்போது கசப்புச் சுவை வந்தால் அந்த வேர்க்கடலையைச் சாப்பிடக் கூடாது. கசப்பேறிய வேர்க்கடலையில் அஃப்லோடாக்ஸின் என்ற பொருள் இருக்கிறது. இது வயிற்றின் ஜீரணத்தைப் பாதிக்கக் கூடியது. எனவே புத்தம் புதிதான வேர்க்கடலையையே சாப்பிட வேண்டும்.
சர்க்கரை நோயாளிகளுக்கு நல்ல உணவு வேர்க்கடலை!
சர்க்கரை நோயாளிகளுக்கு நல்ல உணவு வேர்க்கடலை!
மகாத்மா காந்திக்கு மிகவும் பிடித்தமான உணவு ஆட்டுப் பாலும் வேர்க்கடலையும். வேர்க்கடலையில் அப்படியென்ன இருக்கிறது? என்று கேட்கிறீர்களா? உங்களுடைய கேள்விகளுக்கான பதிலை பிரபல ஊட்டச்சத்து நிபுணர் அனிதா அவர்கள், “சர்க்கரை வியாதி, இரத்த அழுத்தம், புற்றுநோய், நரம்புமண்டல நோய்கள், ஞாபக மறதி நோய் போன்ற பல நோய்களைத் தடுக்கும் சக்தி வேர்க்கடலைக்கு உள்ளது” என்றார்.தஞ்சை “பாரத் காலேஜ் ஆஃப் சயின்ஸ் அண்ட் மேனேஜ்மென்ட்” – இல் 5 ஆண்டுகளுக்கும் மேலாக ஊட்டச்சத்துத் துறையில் பேராசிரியராகப் பணிபுரிந்த அவர், தற்போது இருப்பது வேலூர் பாகாயம் பகுதியில். ஊட்டச் சத்து ஆலோசகரான அவரிடம் பேசியதிலிருந்து…வேர்க்கடலையில் கொழுப்புச் சத்து அதிகமாக இருக்கிறதே, அது எப்படி பிளட் பிரஷரைத் தடுக்கும்?வேர்க்கடலை, கடலை எண்ணெய் என்றதுமே முதலில் எல்லாருக்கும் ஞாபகத்துக்கு வருவது அதில் உள்ள கொழுப்புச் சத்துதான். வேர்க்கடலை, கடலை எண்ணெயைப் பயன்படுத்தினால் இரத்த அழுத்த நோய் வரும், இதய நோய்கள் வரும் என்ற பயம் பரவலாக உள்ளது. ஆனால் இந்தப் பயத்திற்கு எந்தவித ஆதாரமுமில்லை.வேர்க்கடலையில் கொழுப்புச் சத்து இருக்கிறது. ஆனால் அது நல்ல கொழுப்பு. உடம்புக்குத் தேவையான கொழுப்பு. வேர்க்கடலையை ஏழைகளின் புரதம் என்று கூடச் சொல்லலாம். அந்த அளவுக்குப் புரதச் சத்து அதிகமாக உள்ளது. அது மட்டுமல்ல, 30 விதமான ஊட்டச் சத்துகள் வேர்க்கடலையில் உள்ளன. சர்க்கரை வியாதிக்காரர்களுக்கு வேர்க்கடலை நல்ல உணவு.சர்க்கரை வியாதிகாரர்களுக்கு வேர்க்கடலை எப்படி நல்ல உணவாகிறது?நாம் சாப்பிடும் உணவுப் பொருட்கள் ஒவ்வொன்றிலும் இருந்து எந்த அளவுக்கு சர்க்கரை ரத்தத்தில் சேர்கிறது என்பதைக் கண்டறிந்து அளந்து வைத்திருக்கிறார்கள். அதை கிளைசெமிக் இண்டெக்ஸ் என்பார்கள்.வேர்க்கடலையில் கிளைசெமிக் இண்டெக்ஸ் குறைவு. அதாவது, வேர்க்கடலை சாப்பிட்டால் அதில் இருந்து உடம்பில் சேரும் சர்க்கரையின் அளவு மிக மிகக் குறைவு. எனவே சர்க்கரை வியாதிக்காரர்கள் வேர்க்கடலையை எந்தவிதப் பயமுமின்றித் தாராளமாகச் சாப்பிடலாம். மேலும் வேர்க்கடலையில் உள்ள மெக்னீசியத்திற்கு இன்சுலினைச் சுரக்கும் ஹார்மோன்களைத் துரிதப்படுத்தும் தன்மையும் உள்ளது. இதுவும் சர்க்கரை வியாதிக்காரர்களுக்கு நல்லது.வேறென்ன மருத்துவ குணங்கள் வேர்க்கடலையில் உள்ளன?ரத்த அழுத்தத்தை அதிகப்படுத்தும் தன்மை சோடியத்துக்கு உள்ளது. வேர்க்கடலையில் சோடியத்தின் அளவு குறைவு. எனவே வேர்க்கடலை சாப்பிடுவதால் ரத்த அழுத்தம் அதிகரிக்காது. குறையும்.வேர்க்கடலையில் நார்ச்சத்து அதிகம். வேர்க்கடலை சாப்பிட்டால் மலச்சிக்கல் ஏற்படாது. உடல் பருமன் குறையும்.இன்னொரு விஷயம், வேர்க்கடலை சாப்பிட்டவுடன், “சாப்பிட்டது போதும்” என்ற திருப்தி மிக விரைவில் வந்துவிடும். எனவே வேர்க்கடலையைச் சாப்பிட்டு முடித்தவுடன் அடுத்து எதையாவது சாப்பிட வேண்டும் என்று தோன்றாது. இதனால் சாப்பிடும் இடைவெளி அதிகரிக்கும். அடிக்கடி எதையாவது சாப்பிட்டு, எதையாவது கொறித்து உடல் எடையை அதிகரித்துக் கொள்ளமாட்டீர்கள்.வேர்க்கடலையில் வைட்டமின் ஏ, நீரில் கரையக் கூடிய வைட்டமின் பி3 போன்றவை அதிகமாக உள்ளன. இந்த வைட்டமின்கள் கர்ப்பிணிகளுக்கு மிகவும் அவசியமானது. இந்தச் சத்துப் பொருட்கள் குறைந்தால் பிறக்கும் குழந்தை நரம்புக் கோளாறுகளுடன் பிறக்க வாய்ப்புள்ளது. எனவே கர்ப்பிணிகள் வேர்க்கடலையை அதிகம் சாப்பிட வேண்டும்.வேர்க்கடலையில் சில உயிர் வேதிப் பொருட்கள் உள்ளன. அவை மனித உடலில் புற்றுநோய் உருவாகக் காரணமாக உள்ள செல்களை அழித்துவிடுகின்றன. குறிப்பாக மார்பகப் புற்றுநோய், மலக்குடல் புற்றுநோய், நிணநீர்ப்பை புற்றுநோய் போன்றவை உருவாகக் காரணமாகும் செல்களை வேர்க்கடலையில் உள்ள உயிர் வேதிப் பொருட்கள் அழித்துவிடுகின்றன.வேர்க்கடலையில் நைட்ரிக் அமிலம் உள்ளது. வேர்க்கடலையைச் சாப்பிடுவதன்மூலம் உடம்பில் உற்பத்தியாகும் நைட்ரேட் ரத்தக் குழாய்களை விரிவடையச் செய்கிறது. இதனால் ரத்தம் சீராக ஓடும். ரத்த அழுத்தம் குறையும்.நாம் சாப்பிடும் உணவு உடலில் சேர்ந்து சக்தியாக வெளிப்படுதல், உடலின் வளர்ச்சியாக உருமாறுதல், கழிவுகள் அகற்றப்படுதல் போன்றவை நிகழ்கின்றன. இந்த நிகழ்ச்சிகளை வளர்சிதை மாற்றம் என்பார்கள். இப்படி வளர்சிதை மாற்றம் நடைபெறும்போது சில தேவையில்லாத பொருட்கள் ரத்தத்தில் சுற்றிக் கொண்டிருக்கும். பின்பு அவை உடலுக்குத் தேவையில்லாத கொழுப்பாக மாறிவிடும்.ஆனால் வேர்க்கடலை சாப்பிட்டால் அதிலுள்ள உயிர் வேதிப் பொருள்கள் இப்படித் தேவையில்லாமல் ரத்தத்தில் சுற்றிக் கொண்டிருக்கும் பொருட்களை கல்லீரலுக்குள் தள்ளிவிட்டுவிடும். தேவையில்லாத அந்தப் பொருட்கள் கழிவாகி வெளியேறிவிடும்.வேர்க்கடலை சாப்பிட்டால் நரம்பு மண்டலத்துடன் தொடர்புடைய நோய்கள் குறைந்துவிடும். பார்க்கின்ஸன், அல்ஸ“மர் போன்ற ஞாபக மறதி நோய்கள் வராமல் தடுக்க வேர்க்கடலை உதவும். வேர்க்கடலையில் உள்ள உயிர் வேதிப் பொருள்கள் நரம்பு செல்களை நன்றாகச் செயல்படத் தூண்டிவிடுகின்றன. அதனால் நரம்புகள் நன்றாகக் செயல்படுகின்றன.இதிலுள்ள ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்ஸ் உடம்பில் உள்ள தேவையற்ற கழிவுகளை நீக்கிவிடும். வேர்க்கடலையில் நல்ல கொழுப்பு இருக்கிறது.வேர்க்கடலையில் இருந்து தயாரிக்கப்படும் கடலை எண்ணெயில் கொழுப்புச் சத்து அதிகம்தானே? அது உடலுக்குக் கெடுதி இல்லையா?தண்ணீரைச் சுட வைத்தால் கொஞ்சம் கொஞ்சமாகச் சூடேறி 100 டிகிரி சென்டிகிரேடு வெப்ப நிலை வந்தவுடன் தண்ணீர் கொதிக்கத் தொடங்கிவிடும். இதை நீரின் கொதிநிலை என்பார்கள். அதைப் போல எண்ணெயின் கொதிநிலையை ஸ்மோக் பாயிண்ட் என்பார்கள்.எண்ணெய் கொதிக்கத் தொடங்கினால் அதில் உடலுக்குத் தேவையற்ற கெட்ட கொழுப்புகள் உருவாகிவிடும்.கடலெண்ணெயின் ஸ்மோக் பாயிண்ட் பிற எண்ணெய்களை விட அதிகம். பிற எண்ணெய்களின் ஸ்மோக் பாயிண்ட் 275 இலிருந்து 310 வரை இருக்கிறது.ஆனால் கடலை எண்ணெயின் ஸ்மோக் பாயிண்ட் 320. இதனால் கடலை எண்ணெய்யைச் சமையலுக்குப் பயன்படுத்தும் போது அது எளிதில் கொதிநிலையை அடையாது. அதாவது கெட்ட கொழுப்புகள் உருவாகாது. அதே சமயம் கடலை எண்ணெய்யில் உள்ள நல்ல கொழுப்பு அப்படியே இருக்கும். இப்போது சொல்லுங்கள், கடலை எண்ணெயை சமையலுக்குப் பயன்படுத்தினால் உடலுக்குக் கெடுதியா?ஆனால் இதில் கவனிக்க வேண்டிய ஒன்று இருக்கிறது.சுத்திகரிக்கப்பட்ட கடலை எண்ணெயில் உடலுக்குக் கெடுதி தரும் கொழுப்பு இருப்பதற்கு வாய்ப்புள்ளது. ஏனென்றால் எந்தவொரு எண்ணெய்யையும் சுத்திகரிப்பதற்காக பலமுறை அதிக வெப்பத்தில் கொதிக்க வைக்கிறார்கள். இதனால் உடலுக்குத் தீங்கு செய்யும் கெட்ட கொழுப்புகள் அதில் உருவாகக் கூடிய வாய்ப்பு உள்ளது.வேர்க்கடலையைப் பச்சையாகச் சாப்பிடலாமா? ஒரு நாளைக்கு எவ்வளவு சாப்பிடலாம்?வேர்க்கடலையைப் பச்சையாகச் சாப்பிடுவதைவிட, வேர்க்கடலையை அவித்தோ, வறுத்தோ சாப்பிடலாம். ஆனால் வேர்க்கடலையை எண்ணெயில் போட்டு வறுத்துச் சாப்பிடக் கூடாது. வேர்க்கடலையின் தோலை நீக்காமல் சாப்பிட வேண்டும். ஏனென்றால் அதில்தான் நிறையச் சத்துகள் உள்ளன.ஒரு நாளைக்கு மாலை வேளைகளில் தின்கிற நொறுக்குத் தீனிகளுக்குப் பதிலாக 50 கிராம் வரை வேர்க்கடலை சாப்பிடலாம்.வேர்க்கடலையைச் சாப்பிடும்போது கசப்புச் சுவை வந்தால் அந்த வேர்க்கடலையைச் சாப்பிடக் கூடாது. கசப்பேறிய வேர்க்கடலையில் அஃப்லோடாக்ஸின் என்ற பொருள் இருக்கிறது. இது வயிற்றின் ஜீரணத்தைப் பாதிக்கக் கூடியது. எனவே புத்தம் புதிதான வேர்க்கடலையையே சாப்பிட வேண்டும்.
தபால் மூலம் பள்ளிப் படிப்பு
தபால் மூலம் பள்ளிப் படிப்பு
மத்திய அரசு 1990ம் ஆண்டு இயற்றிய சட்டத்தின்படி, “நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் ஓபன் ஸ்கூலிங்’ என்ற அமைப்பு சத்தமின்றி இயங்கி வருகிறது.
தபால் மூலம் டிகிரி படிப்பதைப் போல், தபால் மூலம் பள்ளிப் படிப்பை வழங்கும் நிறுவனம் தான் இது.
இந்நிறுவனம் மூன்றாம் வகுப்பு, ஐந்தாம் வகுப்பு, எட்டாம் வகுப்பு, 10ம் வகுப்பு, 12ம் வகுப்பு ஆகிய ஐந்து நிலைகளில் படிப்பை வழங்குகிறது. அந்தந்த வயது சான்றிதழைக் காட்டி பதிவு செய்து கொண்டால் போதும் இந்நிறுவனம் தேவையான பாடப் பிரிவுகளில் கற்பித்து, தேர்வு நடத்தி, சான்றிதழ் வழங்குகிறது.
இச்சான்றிதழ் நாடு முழுவதும் சட்டப்படி செல்லத்தக்கது. போட்டித் தேர்வுகளிலும் பங்கேற்க முடியும். இதன் தலைமை அலுவலகம் உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவில் அமைந் துள்ளது.
நாடு முழுவதும் கிளை அலுவலகங்கள் உள்ளன.
மாணவர்களுக்கு பாடங்களை கற்பிப்பதற்கு 1,500க்கும் மேற்பட்ட படிப்பு மையங்கள் உள்ளன.
இதில், சேரும் மாணவர்களுக்கு வார நாட்கள், வார இறுதி நாட்கள் என இரண்டு விதங்களில் வகுப்புகள் நடைபெறும். தமிழகத்தில் 27 பள்ளிகளில் இந்த வகுப்புகள் நடத்தப்படுகின்றன. சென்னையில் சி.பி.ராமசாமி அய்யர் பவுண்டேஷன், மீசி மெட்ரிகுலேஷன் பள்ளி, ஆவடி கேந்திரிய வித்யாலயா ஆகிய இடங்களில் இந்த வகுப்புகள் நடக்கின்றன.
மிக மிக சொற்ப கட்டணத்தில் 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு படிப்பை முடித்து சான்றிதழ் பெற முடியும். ஆங்கிலம், இந்தி, உருது வழியில் பாடங்கள் கற்பிக்கப்படுகின்றன.
தமிழ் உள்ளிட்ட அங்கீகரிக்கப்பட்ட மொழிகளில் தேர்வு எழுத முடியும். 10, 12ம் வகுப்புகளுக்கு குறைந்தபட்சம் ஐந்து பாடங்களை தேர்வு செய்ய வேண்டும்.
கூடுதலாக நமக்குப் பிடித்த இரண்டு பாடங்களை தேர்வு செய்து கொள்ளலாம். 10ம் வகுப்புக்கு ஐந்து பாடங்களுக்கு மொத்த கட்டணம் 1,000 ரூபாய். மாணவிகளுக்கு 750 ரூபாய் மட்டுமே கட்டணம். தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மாணவர்களுக்கு 550 ரூபாய். 12ம் வகுப்புக்கு 1,150 ரூபாய் கட்டணம். மாணவிகளுக்கு 900 ரூபாய். தாழ்த்தப்பட்ட பிரிவினருக்கு 625 ரூபாய் மட்டுமே கட்டணம். இந்த கட்டணத்தில் நேரடி வகுப்புகள், புத்தகங்கள் அனைத்தும் அடங்கும். 1,000 ரூபாயில் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்று சான்றிதழ் பெறும் வசதியை மத்திய அரசு ஏற்படுத்தி தந்துள்ளது.
தனியார் பள்ளிகளின் கல்விக் கொள்ளையால் தற்போது “என்.ஐ.ஓ.எஸ்.,’ போன்ற கல்வி நிறுவனங்களின் மதிப்பு அதிகரித்து வருகிறது. கடந்த 90ம் ஆண்டு 40 ஆயிரம் மாணவர்கள் மட்டுமே படித்த இந்நிறுவனத்தில், தற்போது மூன்று லட்சத்து 69 ஆயிரம் மாணவர்கள் படிக்கின்றனர்.
தொழிற்கல்வி, ஆன்-லைன் கல்வியையும் இந்நிறுவனம் வழங்கி வருகிறது.
இந்நிறுவனம் குறித்த கூடுதல் தகவல்களை, www.nos.org என்ற இணைய தளம் மூலம் தெரிந்து கொள்ள முடியும். இதுபோன்ற அமைப்புகள் குறித்து தமிழக மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்த தமிழக அரசின் கல்வித்துறை முன்வர வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
அரசின் இலவச கல்வி உதவி தொகை
1. பள்ளி படிப்பிற்க்கு தமிழக அரசால் வழக்கப்படும் உதவித்தொகை, சீருடை, நோட்டு புத்தகம், காலனி அரசு பள்ளியில் படிப்பவர்களுக்கே வழங்கப்படுகின்றது (தனியார் பள்ளிகளுக்கு கிடையாது). இதை பெருவதில் சிரமம் இல்லை, இதில் கல்வி கட்டணத்தை தவிர அனைத்தும் தானகவே கிடைக்கின்றது. கல்வி உதவி தொகை விண்ணப்பித்தால் கிடைக்கும், அரசு பள்ளிகளில் கல்வி கட்டணம் மிக மிக குறைவு( சில நூறு ரூபாய்கள்). எனவே (அரசு பள்ளிகளில் பிள்ளைகளை படிக்க வைக்கும்) பெற்றோர்கள் இதை பெறுவதில் ஆர்வம் காட்டுவதில்லை. .
2. அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்காக மத்திய அரசு ஒரு தகுதி தேர்வுவை (NET/NTSE/NMMS தேர்வுகள்) நடத்துகின்றது, இந்த தேர்வை எழுதி தேர்ச்சி பெற்றால் (பாஸ் பன்னினால் ) மட்டுமே உதவி தொகை கிடைக்கும். (8-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு) மாதம் 500 ரூபாய் வரை கிடைக்கும். இந்த தேர்வை பற்றிய விபரம் அறிய http://dge.tn.gov.in/ மற்றும் www.ncert.nic.in இந்த இனையத்திற்க்கு செல்லுங்கள், மேலும் விபரம் அறிய நமது மாணவரணியை தொடர்புகொண்டு அறிந்துகொள்ளாம்.
பட்ட படிப்பு
1. மத்திய அரசு நடத்தும் தகுதி தேர்வு (NET/NTS/NMMS தேர்வுகள்) பட்ட படிப்பிற்க்கும் உள்ளது, தேர்வில் தேர்ச்சி பெற்றால் மாதம் ரூ. 1000 வரை கிடைக்கும்.
2. பட்டபடிப்பை பொருத்தவரையில் தமிழக அரசு முஸ்லீம்களுக்கென்று தனியாக இதுவரை எந்த கல்வி உதவி தொகை திட்டத்தையும் செயல்படுத்தவில்லை. (முஸ்லீம்களையும் சேர்த்து) பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்காக இலவச உதவி தொகை வழங்குகின்றது. படிப்பிற்க்கு தக்கவாறு ஒரு வருடத்திற்க்கு ரூ.1000 முதல் ரூ.8500 வரை வழங்குகின்றது இதை பெருவதும் அவ்வளவு சிரமம்மில்லை, ஒவ்வொறு கல்லூரியிலும் இதற்க்கான விண்ணப்பம் வினியோகிக்கப்படும், அதை வாங்கி பூர்த்தி செய்துகொடுத்தாலே போதும், பெரும்பாலும் நமது சமுதாயம் இதை பெற்றுகொள்கின்றது. இந்த கல்வி தொகை பெற தாஸில்தாரிடம் வருமான சான்றிதழ் பெற வேண்டும், வருமான சான்றிதழ் பெருவதற்க்கு அலுப்புபட்டு கொண்டு நமது சமுதாய மாணவர்களில் சிலர் இதை பெருவதில்லை.
3. மத்திய அரசு (தமிழக அரசுடன் இணைந்து) தொழில் கல்வி (ITI, Diploma, B.E/B.Tech, M.E/M.Tech) படிக்கும் சிறுபாண்மை (முஸ்லீம், கிறித்துவர், சீக்கியர்) மாணவர்களுக்காக சிறப்பான இலவச கல்வி உதவி தொகை திட்டத்தை அமல் படுத்தி வருகின்றது (வருடத்திற்க்கு ரூ.25,000 வரை). விண்ணப்பிக்கும் அனைவருக்கும் இது கிடைக்காது. (மேலும் விபரம் அறிய www.minorityaffairs.gov.in) ஒவ்வொறு வருடமும் அரசு குறிபிட்ட எண்ணிக்கையில் உதவியை வழங்குகின்றது. இந்த எண்ணிகை மிக மிக குறைவு, நாம் கணகிட்ட வரை 200 முஸ்லீம் மாணவர்களுக்கு ஒருவர் என்ற எண்ணிக்கையில் இருக்கும். இதில் இன்னோறு சிக்கல் இதை பெருவதாக இருந்தால் மேலே குறிபிட்ட தமிழக அரசு உதவி தொகை பெறமுடியாது. இது யாருக்கு கிடைக்கும் என்றால் ஐஐடி, என்ஐடி மாணவர்களுக்கு கண்டிப்பாக கிடைக்கும், ஏனெனில் மத்திய அரசு இங்கு படிக்கும் மாணவர்களுக்கே முன்னுரிமை அளிக்கின்றது. மேலும் ஐஐடி, என்ஐடியில் இதை பெருவதற்க்காக சிறப்பான ஏற்பாடும் செய்து வைத்துள்ளனர். ஆனால் கட்டாயம் ரூ.25,000 வரை உதவி தொகை கிடைக்கும் ஐஐடி, என்ஐடியில் முஸ்லீம் மாணவர்கள் மிக மிக குறைவு.
பட்ட மேற்படிப்பு படிப்பவர்களுக்கு கல்வி உதவி தொகை
1. மேலே குறிபிட்ட தமிழக அரசு செயல் படுத்தும் (முஸ்லீம்களையும் சேர்த்து) பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்காக இலவச உதவி தொகை பட்ட மேற்படிப்பிற்க்கும் கிடைக்கும். படிப்பிற்க்கு தக்கவாறு ஒரு வருடத்திற்க்கு ரூ.2000 முதல் ரூ.8500 வரை வழங்குகின்றது.
2. மத்திய அரசு நடத்தும் தகுதி தேர்வு (NET/NTS/NMMS தேர்வுகள்) பட்ட மேற்படிப்பிற்க்கும் உள்ளது, தேர்வில் தேர்ச்சி பெற்றால் மாதம் மாதம் ரூ. 2000 வரை கிடைக்கும். இந்த தேர்வை பற்றிய விபரம் அறிய http://dge.tn.gov.in/ மற்றும் www.ncert.nic.in இந்த இனையத்திற்க்கு செல்லுங்கள்.
3. M.E/M.Tech படிக்க மத்திய அரசு (IIT) GATE என்ற நுழைவு தேர்வை நடத்துகின்றது. இதில் தேர்ச்சி பெற்றால் மாதம் ரூ.5000 முதல் ரூ.8500 வரை வழங்குகின்றது.
மேலே குறிபிட்ட நுழைவுதேர்வு பற்றிய விபரத்தை நமது மாணவரணியை தொடர்புகொண்டு அறிந்துகொள்ளாம்.
முனைவர் படிப்பு (Phd) மற்றும் பட்ட மேற்படிப்பு படித்தவர்களுக்கு
1. M.Sc. படித்தவர்களுக்கு மத்திய அரசு CSIR -நுழைவு தேர்வு நடத்துகின்றது, இதில் தேர்ச்சி பெற்றால் மாதம் ரூ.9000 வழங்குகின்றது.
2. மேலும் அராய்ச்சி படிப்புகளான உயிர் தொழிநுட்பம் (பயோ டெக்னாலஜி) உயிரில் (தாவரவியல், விலங்கியல் போன்ற வற்றில் உயர் கல்வி பயலும் மாணவர்களுக்கு இளநிலை விஞ்ஞானி தேர்வுகள் (DBT, JRF தேர்வுகள் ) ஆண்டுதோறும் மத்திய அரசால் நடத்தபடுகிறது.
2. சில நுழைவு தேர்வுகள் (GATE etc..) எழுதினால் பெரும்பாலும் உள்ள முனைவர் படிப்பிற்க்கு உதவிதொகை கிடைக்கும். முனைவர் படிப்பு படிக்கும் மாணவர்கள் தாங்கள் ஆய்வு செய்யும் பாடம், படிக்கும் பல்கலை கழகம் போன்ற தகவலுடன் நமது மணவரனியை தொடர்புகொண்டால் அவர்களுக்கு உதவி தொகை பெருவதற்க்கான வழிமுறைகளை விளக்குவோம்.
வெளி நாட்டு படிப்பிற்க்கான உதவி தொகை
அமெரிக்காவில் உதவி தொகை பெற
GRE , TOEFL என்ற இரண்டு தேர்வுகள் உள்ளது. இதை எழுத ரூ.18,000 தேவைபடும் (தற்போதைய நிலவரபடி). இதில நல்ல மதிப்பெண் எடுத்தால் அமெரிக்க பல்கலைகழகங்கள் மாதம் ரூ.80,000 வரை உதவி தொகை வழங்குகின்றது. இந்த தேர்வில் நல்ல மதிப்பெண் எடுத்து, உதவி தொகை பெற்று, நல்ல பல்கலைகழகத்தில் இடம் கிடைத்தாலும் அமெரிக்கா விசா வாங்குவது மிக மிக கடினம்.
இங்கிலாந்தில் உதவி தொகை பெற
IELTS- என்ற தேர்வில் நல்ல மதிப்பெண் எடுத்தால் இங்கிலாந்து பல்கலைகழகங்கள் மாதம் ரூ.60,000 வரை உதவி தொகை வழங்குகின்றது. இதை எழுத ரூ.10,000 தேவைபடும் (தற்போதைய நிலவரபடி).
பிற நாடுகள் : மேலே குறிபிட்ட மூன்று நுழைவுதேர்வு மதிப்பெண் அடிப்படையிலேயே பிற நாடுகளில் உள்ள பல்கலைகழகங்கள் உதவி தொகை வழங்குகின்றன.
பிற கல்வி உதவிகள்
அரசு செய்யும் உதவி தொகைகளைகளை தவிர சில கல்லூரிகள், அவர்களுடைய கல்லூரியில் பயிலும் மாணவர்களுக்காக தனி தனியாக உதவி தொகை வழங்குகின்றது. அது கல்லூரிக்கு கல்லூரி மாறுபடும். (உதாரணத்திற்க்கு சென்னை புது கல்லுரியில் அங்கு படிக்கும் மாணவர்களுக்கென தனியாக இலவச கல்வி உதவி தொகை திட்டம், ஐஐடி-யில் அங்கு பயிலும் மாணவர்களுக்கென தனியாக இலவச கல்வி உதவி தொகை திட்டம் , etc…..)
நாம் மேலே குறிபிட்டது போக மத்திய, மாநில அரசுகள் அவ்வப்போது சில கல்வி உதவிதொகை திட்டத்தை அறிவிக்கும், அவற்றை பற்றி அரசு அறிவிப்பு வெளியகும் போது நமது ஊடங்கள் மூலம் மக்களுக்கு தெரியப்படுத்துகின்றோம்.
அரசின் இலவச கல்வி திட்டமும் முஸ்லீம்களின் நிலையும்
1. மத்திய மாநில அரசுகள் வழங்கும் இலவச கல்வி உதவி தொகை மிக மிக குறைவாக உள்ளது, இதனால் நமது சமுதாயம் அதை வாங்குவதில் அதிக கவனம் செலுத்துவதில்லை.
2. அதிக பணம் கிடைக்கும் கல்வி உதவி தொகை பெற நுழைவு/தகுதி தேர்வுகள் உள்ளன. இந்த தேர்வுகளெள்ளாம் கடினம் என நமது சமுதாய மாணவர்கள் நினைப்பதினால், இதை எழுதி தேர்ச்சி பெரும் நிலையில் நமது சமுதாயம் இல்லை, இதனால் பெரும்பாலான இலவச கல்வி உதவி தொகை வீணகின்றது.
3. நுழைவு/தகுதி தேர்வு இல்லாமல் கிடைக்கும் கல்வி உதவி தொகை பெற விண்ணப்பம் வாங்கி, சான்றிதழ் பெற்று பூர்த்தி செய்ய வேண்டி இருப்பதால் நமது சமுதாயம் இதில் அதிக அக்கரை காட்டுவதில்லை. காரணம் பெரும்பாலானவர்கள் இதை பற்றி அறியாதவர்களாக இருக்கின்றனர், அரசு நிறுவங்களுக்கு சென்று பழக்கம் இல்லாதவர்களாக இருக்கின்றனர், பெரும்பாலான மாணவர்களின் தந்தைகள் வெளி நாட்டில் இருப்பதால் பெண்களே இந்த வேலையை செய்ய வேண்டி உள்ளது, அல்லது அடுத்த ஆண்களின் துனையை நாட வேண்டி உள்ளது இதனாலேயே பலர் அரசிடம் இருந்துகிடைக்கும் சிறிய அளவிளான கல்வி தொகையையும் பெருவதற்க்கு முயற்சிப்பதில்லை.
தீர்வு என்ன?
தமிழகத்தில் லட்சக்காணக்கான முஸ்லீம் மாணவ, மாணவியர்கள் படிக்கின்றனர், அனைவருக்கும் நாமே நேரடியாக சென்று கல்வி உதவி வாங்கி தருவது என்பது நடைமுறை சாத்தியமில்லை, எனவே நமது முஸ்லீம் சமுதாயத்திற்க்கு நாம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். எவ்வாறு அரசிடம் இருந்து கல்வி உதவி பெருவது என்பதை விளக்க வேண்டும், அவர்களே தானாக சென்று கல்வி உதவி பெரும் நிலையை ஏற்படுத்த வேண்டும், இதைதான் தற்போது TNTJ மாணவரணி செய்து கொண்டு இருக்கின்றது,
கல்வி உதவி பெறுவது சம்மந்தமான அனைத்து தகவல்களையும் மக்களுக்கு விளக்கும் வண்ணம் இதுவரை தமிழகத்தில் 130 இடங்களில் விழிப்புணர்வு முகாம்கள் நடத்தி மக்களுக்கு தெளிவு படுத்தி உள்ளோம். இருந்தும் இந்த விஷயத்தில் மக்கள் நம்மை பயன்படுத்திகொள்வது குறைவாகவே உள்ளது. இருந்தாலும் நமது பணியை தொடர்ந்து செய்துகொண்டுதான் இருக்கின்றோம் (பணி தொடர அல்லாஹ்விடம் துவா செய்யவும்). கல்வி உதவி சம்மந்தமான அனைத்து தகவலையும் தொடர்ந்து நமது ஊடகத்தில் (உணர்வு வார இதழ், www.tntj.net இணையதளம்) வெளியிட்டுகொண்டு இருக்கின்றோம். நம்மை தொடர்புகொள்பவர்களுக்கு தேவையான அனைத்து தகவல்களையும் நம்மால் இயன்றவரை தந்துகொண்டு இருக்கின்றோம்.
அரசு வழங்கிவருவதாக சொல்லும் வட்டியில்லா கடன் திட்டம் சிக்கல் இல்லாமல் நடைமுறையில் கிடைக்கப்பெற்றால் நிச்சயம் இந்த சமூகம் கல்வியில் முன்னேறும். ஆனால் இந்த வட்டியில் கடன் திட்டம் நடைமுறையில் இருப்பதாக அரசு சொன்னாலும் முஸ்லீம் மாணவர்களுக்கு அது எட்டா கனியாகவே உள்ளது.
ஆக்கம்
S.சித்தீக்.M.Tech
கல்வி உதவி சம்மதமான முக்கியமான இணைய தளங்கள்
மிழக அரசின் தேர்வுகளுக்குகான இணையம்www.dge.tn.gov.in/தேசிய திறன் தேர்வு இணையம்www.ncert.nic.inமத்திய அரசின் சிறுபாண்மை நலதுறைwww.minorityaffairs.gov.inகல்வி உதவிக்கான மத்திய அரசின் இணையதளம்www.educationsupport.nic.inபிற கல்வி உதவி சம்மந்தமான தகவல் பெறwww.scholarshipsinindia.comமேலும் கீழ்க்கானும் தமிழக அரசின் அமைப்புகள் கல்வி உதவி , இலவச பயிற்சி போன்றவற்றை சிறுபாண்மை மாணவர்களுக்கு அளித்து வருகின்றன.1.சிறுபாண்மையினர் நல இயக்கம்எண்:807, அண்ணாசலை, சென்னை-6000022.தமிழ்நாடு சிறுபாண்மையினர் பொருளாதரா வளர்ச்சி கழகம்எண்:807, அண்ணாசாலை, 5வது மாடி, சென்னை-600002
சோம்பல் இஸ்லாத்தின் பார்வையில்
சுறுசுறுப்பின் எதிரிதான் சோம்பல்!
முன்னேறிச் சென்றிட தடை செய்யும் சோம்பல்!
முயற்சியை வீணாய்ச் சிதறடிக்கும் சோம்பல்!
சோம்பல் மிக்கவர்கள் படுக்கையைவிட்டு மட்டுமல்லாமல், உட்கார்ந்துவிட்டால் இருக்கையை விட்டும் எளிதாக எழுந்திருக்க மாட்டார்கள். சோம்பல் மிக்கவர்கள் தானும் சலித்துக்கொள்வார்கள்; மற்றவர்களையும் சலிப்பூட்டுவார்கள். இவ்வாறு இந்த சோம்பலைப் பற்றிக் கூறிக் கொண்டே போகலாம்.
இப்படிப்பட்ட சோம்பலைப்பற்றி, சோம்பேறிகளைப் பற்றி இஸ்லாத்தின் பார்வையில் சுருக்கமாகப் பார்ப்போம். அல்லாஹ் தன் திருமறையிலே பல இடங்களில் நயவஞ்சகர்களைப் பற்றி குறிப்பிடும் போது, இந்த சோம்பலைப்பற்றியும் குறிப்பிடுகின்றான். யார் ஒருவர் தொழுகையில் சோம்பலுடன் தொழுகிறாரோ அவரை அல்லாஹ் ‘நயவஞ்சகர்கள்’ என்று அல்லாஹ் அடையாளம் காட்டுகின்றான்.
அல்லாஹ் கூறுகின்றான்:
“நிச்சயமாக இந்நயவஞ்சகர்கள் அல்லாஹ்வை வஞ்சிக்க நினைக்கின்றனர்; ஆனால் அவன் அவர்களை வஞ்சித்துவிடுவான்; தொழுகைக்கு அவர்கள் தயாராகும் பொழுது சோம்பலுடையோராகவே நிற்கிறார்கள் – மனிதர்களுக்குத் (தங்களையும் தொழுகையாளியாக்கி) காண்பிப்பதற்காக (நிற்கிறார்கள்); இன்னும், மிகச் சொற்ப அளவேயன்றி அவர்கள் அல்லாஹ்வை நினைவு கூர்வதில்லை” (அல்-குர்ஆன் 4:142)
எனவே, சோம்பல் என்பது நயவஞ்சகத்தின் அடையாளம் என்பதை உணர்ந்து அதிலிருந்து விடுபடவேண்டும்.
சோம்பலைத் தவிர்ப்பதற்கான வழிமுறைகள்:
1) அதிகாலையில் எழுந்து பஜருடைய தொழுகையை நிறைவேற்றுதல்: -
ஒருவர் சோம்பலில் இருந்து விடுபட்டு, அன்றைய காலைப்பொழுதை சுறுசுறுப்புடன் அடையவேண்டுமா? அதற்கு, நபி (ஸல்) அவர்கள் மிகச் சிறந்த வழியை நமக்கு காட்டியிருக்கிறார்கள்.
உண்மையிலேயே பரிதாபத்திற்குரிய விஷயம் என்னவென்றால், நம்மில் பலர் இந்த வழியைப் பின்பற்றி நடப்பதில்லை.
இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
‘உங்களில் ஒருவர் உறங்கும் போது பிடரியில் ஷைத்தான் மூன்று முடிச்சுகளைப் போடுகிறான். ஒவ்வொரு முடிச்சின் போதும் இரவு இன்னும் இருக்கிறது; உறங்கு என்று கூறுகின்றான். அவர் அதிகாலையில் விழித்து அல்லாஹ்வை நினைவு கூர்ந்தால் ஒரு முடிச்சு அவிழ்கிறது. அவர் உளூச் செய்தால் இன்னொரு முடிச்சு அவிழ்கிறது. அவர் தொழுதால் மூன்றாவது முடிச்சும் அவிழ்கிறது. அவர் மகிழ்வுடனும் மன அமைதியுடனும் காலைப் பொழுதை அடைகிறார். இல்லையெனில் அமைதியற்றவராக, சோம்பல் நிறைந்தவராகக் காலைப் பொழுதை அடைகிறார்’ {அறிவிப்பவர் : அபூஹூரைரா (ரலி), ஆதாரம் : புகாரி}
பஜ்ர் தொழுகைக்கும் சுறுசுறுப்புக்கும் எவ்வளவு தொடர்பு இருக்கிறது என்பதை மேற்கண்ட ஹதீஸ் தெளிவாக விளக்குகின்றது. சுறுசுறுப்புடன் அன்றைய தினத்தைத் தொடங்குபவர் பஜ்ர்
தொழுதவராவார். சோம்பல் நிறைந்தவராக அன்றைய தினத்தை அடைந்தவர் ஷைத்தானோடு சேர்ந்து உறங்கி, பஜ்ர் தொழுகையை தொழாதவர் ஆவார். மேற்கண்ட இரண்டு பிரிவினரில் நாம்
எந்தப் பிரிவைச் சேர்ந்தவர் என்பதை நம்மை நாமே கேட்டுக் கொள்ள கடமைப்பட்டுள்ளோம்.
தலைசிறந்த பாவமன்னிப்பு
اَللّهُمَّ أَنْتَ رَبِّي ، لاَ إِلهَ إِلاَّ أَنْتَ ، خَلَقْتَنِي ، وَأَنَا عَبْدُكَ ، وَأَنَا عَلىَ عَهْدِكَ وَوَعْدِكَ مَا اسْتَطَعْتُ ، أَعُوْذُ بِكَ مِنْ شَرِّ مَا صَنَعْتُ ، أَبُوْءُ لَكَ بِنِعْمَتِكَ عَلَيَّ ، وَأَبُوْءُ بِذَنْبِيْ ، فَاغْفِرْ لِيْ ، فَإِنَّهُ لاَ يَغْفِرُ الذُّنُوْبَ إِلاَّ أَنْتَ
அறிவிப்பவர் : ஷத்தாத் பின் அவ்ஸ் (ரலி),
நூல் : புகாரி ஹதீஸ் எண்: 6306
*அந்நியருடன் ஓடிப்போகும் அல்லது ஓடிப்போன பெண்களின் நிலை:*
ஓடிப்போகும்போது இவள் தனது பெற்றோரின் ஓட்டுமொத்த சேமிப்பையும் நகைகளையும் எடுத்து வருமாறு தூண்டப்படுகின்றாள்.
பெற்றேர்களே, கணவன்மார்களே, நீங்களும் சற்று சிந்திப்பீர், வெள்ளம் கரைகடந்தபின் கதறாமல், இப்போதே அனைபோட திட்டமிடுவீர், உங்கள் பெண்பிள்ளைகளை கண்கானியுங்கள்.
தொலைபேசியும் இஸ்லாமிய பெண்களும்
முஸ்லிம் பெற்றோர்களே, சகோதரர்களே! உங்கள் பெண் குழந்தைகளயும், நம் சகோதரிகளை நாம் பாதுகாத்து சொர்க்கம் கொண்டு செல்வதும், கயவர் கூட்டத்தின் சதியை முறியடிப்பதும், நமது கடமையாக இருக்கின்றது. இதனை நாம் காலம் தாழ்த்தாமல் உடனே செய்ய வேண்டும் தற்சமயம் அதிக அளவில் முஸ்லிம் பெண்கள் முஸ்லிம் அல்லாத ஆடவருடன் ஓடிப்போவதும், மதம் மாறுவதும் நிகழ்ந்து வருகின்றது.
இதற்கான முழுப்பொறுப்பையும் பெற்றோர் ஏற்க வேண்டி இருக்கிறது.
இது போன்ற சம்பவங்கள் நிகழ்வதற்கான காரணிகள்:
1. பெற்றோர்கள் தங்கள் பெண் குழந்தைகளை முறையாக கவணிக்க தவறுவது.
3. மொபைல் ஃபோனில் தங்கள் பெண் குழந்தைகள் யாருடன் பேசுகின்றார்கள், என்ன எஸ்.எம்.எஸ் வருகின்றது போன்றவற்றை கவணிக்காமல் இருப்பது.
4. பெண்கள் எங்கே செல்கின்றார்கள், எப்போது வருகின்றார்கள் என்பதை கவனிக்க அல்லது கண்டிக்க தவறுவது.
7. வெளிநாட்டில் வாழும் இளைஞர்கள் தங்கள் மனைவியரை தனிக்குடித்தனம் வைப்பது அல்லது அவர்கள் இஸ்ட்டப்படி உரிய கண்கானிப்பின்றி வாழ அனுமதிப்பது.
நமது பெண் பிள்ளைகளை பாதுகாக்க சில வழிகள்:
திருக்குர்ஆனில் அல்லாஹ் கூறுகின்றான்:
‘இன்னும் முஃமினான பெண்களுக்கு நீர் கூறுவீராக! தங்கள் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ள வேண்டும். தங்கள் வெட்கத் தலங்களைப் பேணிக் காத்துக் கொள்ள வேண்டும்”. (அல்குர்ஆன்: 24:37)
”நீங்கள் இறையச்சத்தோடு இருக்க விருப்பினால் (அந்நியருடம் நடத்தும்) பேச்சில் நளினம் காட்டாதீர்கள். ஏனென்றால் எவன் உள்ளத்தில் நோய் (தவறான நோக்கம்) இருக்கின்றதோ அத்தகய)வன் ஆசை கொள்வான். இன்னும் நீங்கள் நல்லவற்றையே பேசுங்கள். (அல்குர்ஆன் 33:32)
2.ஆண்களும் பெண்களும் இணைந்து படிக்கும் பள்ளி, கல்லூரிகளில் தான் இந்த சதி வேலை அதிகமாக நடக்கிறது என்பதை கவனத்தில் கொள்ளவும்.
5.பெரும்பாலும் வீட்டில் உள்ள பெண்களுக்கு மொபைல் போன்களை வாங்கிக் கொடுக்க வேண்டாம். லேன்ட் லைன் டெலிபோன் மட்டும் இருந்தால் போதுமானது.
8. கடைகளுக்கு செல்லும்போது உங்கள் கணவர்மர்களை பற்றியோ அல்லது குடும்படதினர் பற்றியோ கடையில் உள்ளவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளிக்காதீர்கள் மிகக் கண்டிப்புடன் இது உங்களுக்கு அவசியமற்றது என்று முகத்தில் அடித்தாற்போல் சொல்லுங்கள். உங்கள் கணவர்மார்கள் வெளிநாட்டிலோ அல்லது வெளியூரிலோ இருக்கும் விசயத்தை அவசியமின்றி அந்நியர்களுக்கு சொல்லாதீர்கள் அவர்கள் எவ்வளவு நல்லவர்களாக இருந்தாலும் சரியே.
12. உங்கள் தோழியர் எவ்வளவு நெருக்கமாக இருந்தாலும் கூட அவர்களின் செல்போன் மூலம் உங்களை படம் எடுப்பதை அனுமதிக்க வேண்டாம்.முக்கியமாக நீங்கள் தனிமையில் இருக்கும் பொதும் ஆடைகள் கவனமின்றி இருக்கும் போதும். அப்படி படமெடுப்பது தெறிந்தால் உடனடியாக அதை வாங்கி அழித்த விடுங்கள். இது போன்ற நிகழ்வுகளை உடனே பெற்றோருக்கும் சகோதரர்களுக்கும் தெறியப்படுத்துங்கள்.
13. முதன்மையாக ஆண்,பெண் இருவருடைய உள்ளத்திலும், செயலிலும் – இறையச்சம், ஈமான் இருக்க வேண்டும்.
கற்பொழுக்கம் ஆண்களுக்கும் அவசியம்!- மவ்லவி கே.எஸ்.ஸிராஜுத்தீன் காஷிஃபி
o அந்நிய ஆணிடத்தில் பெண் பேசுவதை குறை பார்ப்பவர்கள் அந்நிய பெண்ணிடத்தில் இவர்கள் பேசுவார்கள்.
”நிச்சயமாக முஸ்லிம்களான ஆண்களும், பெண்களும்;
நன்னம்பிக்கை கொண்ட ஆண்களும், பெண்களும்;
இறைவழிபாடுள்ள ஆண்களும், பெண்களும்;
உண்மையே பேசம் ஆண்களும், பெண்களும்;
பொறுமையுள்ள ஆண்களும், பெண்களும்;
(அல்லாஹ்விடம்) உள்ளச்சத்துடன் இருக்கும் ஆண்களும், பெண்களும்;
தர்மம் செய்யும் ஆண்களும், பெண்களும்;
நோன்பு நோற்கும் ஆண்களும், பெண்களும்;
தங்கள் வெட்கத்தலங்களை (கற்பைக்) காத்துக் கொள்ளும் ஆண்களும், பெண்களும்;
அல்லாஹ்வை அதிகமதிகம் தியானம் செய்யும் ஆண்களும், பெண்களும் -
ஆகிய இவர்களுக்கு அல்லாஹ் மன்னிப்பையும் மகத்தான நற்கூலியையும் சித்தப்படுத்தியிருக்கின்றான்.” (33:35)