தெரிந்து கொள்வோம்! ஆர்கானிக் உணவுப் பொருட்கள்!



பாக்கெட்களில் அடைக்கப்பட்ட உணவுப்  பொருட்கள் விற்கப்படும் மால்” கலாசாரத்துக்கு அமெரிக்காவில் கூட மவுசு குறைந்து வருகிறது. ஆனால்நம்மூரில் கொடிகட்டிப்பறக்கிறது. மால்” கலாசாரம் தவறில்லை தான் ஆனால், சத்தான உணவு வகைகள்காய்கறிகள் போன்றவற்றை வாங்கும் நிலை மாறிபாக்கெட்டப்பா கலாசாரம்,உரம் போட்ட காய்கறிகள் என்று நாம் எங்கோ போய்க்கொண்டிருக்கிறோம்.
ஆர்கானிக் காய்கறிகள்தானியங்கள்,பழங்கள் என்பது பரம்பரையாக நாம் பின்பற்றி வந்ததுதான். நடுவில்உரம் போட்டசமாச்சாரங்கள் தலைதூக்கி விட்டன. இப்போது மீண்டும் ஆர்கானிக்குக்கு மவுசு திரும்பி விட்டது. ஆர்கானிக் என்பது உரம் போடாதரசாயன கலப்பில்லாத உணவுப்பொருட்கள் சார்ந்தது. எது ஆர்கானிக்அதனால் எந்த அளவுக்கு உடலுக்கு நல்லது என்று பார்ப்போம்.
உப்பு:இப்போது பலரும் பரவலாக பயன்படுத்துவது அயோடின் சத்துள்ள பாக்கெட் உப்புதான். சில ஆண்டுக்கு முன்வரை பயன்படுத்தி வந்த கல் உப்பு நினைவிருக்கிறதாஅதில் உள்ள கனிம சத்துக்கள் பற்றி பலருக்கும் தெரியாது. இதுதான் ஆர்கானிக் உப்பு. உடலில் அயோடின் சத்து தேவைதான். ஆனால்அயோடின் சத்து கிடைக்கும் நிலையில்உப்பு மூலமும் அது சேர்ந்தால் பிரச்சினைதான்.
ரீபைண்ட் ஆயில்: செக்கில் ஆட்டிய எண்ணெயை யார் இப்போது பயன்படுத்துகின்றனர். நகரங்களில் எங்குப் பார்த்தாலும் பாக்கெட் உணவு எண்ணெய்தானே. அப்படியும் செக்கில் ஆட்டியெடுத்த கடலைநல்லெண்ணெய் இன்னமும் சில இடங்களில் விற்பனை செய்யப்படுகிறது. இதுதான் எந்த கலப்பும் இல்லாத ஆர்கானிக் எண்ணெய். ரீபைண்ட் என்பதுசூடாக்கி சமப்படுத்துவது. அதனால்வாணலியில் இரண்டாவது முறையாக சூடாக்கப்படுகிறது. இதனால்ரசாயன கலப்பு சேர்கிறது உடலில். இதுதான் நிபுணர்கள் கருத்து.
 வெண்ணெய்நெய்வனஸ்பதி:
வெண்ணெய்நெய்வனஸ்பதி இவை மூன்றுமே கொழுப்பு சார்ந்ததுதான். அதிகம் பயன்படுத்தக்கூடாது. இதனால்,கொலஸ்ட்ரால்தான் உடலில் சேரும். மாறாகஆர்கானிக் முறையில் இயற்கையாக உருவாக்கப்பட்ட ஆலிவ் ஆயில்செக்கில் ஆட்டிய கடலை எண்ணெய்தான் மிக நல்லது.
உலர்ந்த தானியங்கள்: பாக்கெட்டில் அடைக்கப்பட்ட உலர்ந்த பருப்பு உட்பட தானியங்கள்தான் பயன்படுத்துகிறோம். ஆனால்எந்த கலப்பும்செரிவூட்டலும் இன்றிஇயற்கையாக விளைவித்து எடுக்கப்பட்ட பருப்புதானியங்கள்தான் ஆர்கானிக் முறைப்படி நல்லது. நன்கு உலர்ந்த தானியங்களில் கொழுப்புதான் மிஞ்சும். ஆனால்ஆர்கானிக் முறையில் சத்துக்கள் முழுமையாகக் கிடைக்கும்.
பாலிஷ் அரிசி:
அரிசி சாதம்வெள்ளையாக இருக்க வேண்டும். பழுப்பாக இருந்தால் நகரங்களில் உள்ளவர்களுக்கு பிடிக்காது. ஆனால்புழுங்கல் அரிசி சாதம்தான் மிக நல்லது என்பது இப்போதுதான் பலருக்குத் தெரிய ஆரம்பித்துள்ளது. பாலிஷ் செய்யப்படாத புழுங்கல் அரிசிமுழு கோதுமை ஆகியவற்றில்தான் 100 சதவீத சத்துக்கள் உள்ளன என்பதை மறந்து விடாதீர்கள்.
சந்தை காய்கறிபழங்கள்:
உரம்ரசாயன கலப்பு சார்ந்து விளைவிக்கப்பட்டசெயற்கையாக பெரிதாக்கப்பட்ட காய்கறிகள்பழங்கள் கண்களுக்கு கவர்ச்சியாக இருக்கலாம். விலை குறைவாக இருக்கலாம். ஆனால்உடலுக்கு கெடுதல்தான். உரம் கலப்பில்லாத காய்கறிகள்கீரைகள்பழங்கள் மூலம் கிடைக்கும் பலன்மருந்துகளில் கூட கிடையாது.
பால்:
பால் உடலுக்கு நல்லதுதான். ஆனால்நாம் சாப்பிடும் பாலில்கொழுப்புச் சத்து நீக்கப்பட்டதால் பரவாயில்லை. ஆனால்கால்நடைகளில் 90 சதவீதம் உரம்ரசாயன ஆன்டிபயாட்டிக் மருந்துகளை பெற்ற நிலையில்தான் உள்ளன என்பதுஇந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலே வருத்தத்துடன் கூறியுள்ளது. ஆர்கானிக் வகையில் இப்போது பல வகை மூலிகைகள் வந்துவிட்டன. பாலுடன் இவற்றையும் சாப்பிடலாம்.
கோலாகாபிடீ:
இயற்கையான காபிடீ இப்போது கிடைப்பதில்லை. எல்லாமேஉரக்கலப்பு மிக்கதுதான். அதிலும்பாக்கெட் பானங்களில் பெரும்பாலும் உடலுக்கு ஆரோக்கியமில்லாத விஷயங்கள்தான். மூலிகை டீ நல்லது. மூலிகை சார்ந்த பானங்கள் இப்போது உள்ளன. அவற்றை வாங்கி அருந்தலாம்.

சர்க்கரை: சர்க்கரைக்கு பதில்வெல்லத்தைப் பயன்படுத்தலாம். காபிடீ யில் கருப்பட்டி வெல்லம் போட்டு சாப்பிட்டால்உடலுக்கு நல்லது. எந்த கெடுதலும் வராது.ஆர்கானிக் கோஷம் இன்னும்,இந்தியாவில் பெரிய அளவில் எடுபடவில்லை. காரணம்இப்போதுள்ள உணவு பொருட்கள் விலையே விண்ணைத் தொடுகிறது. ஆர்கானிக் சமாச்சாரங்கள் விலை இன்னும் அதிகம். இருந்தாலும்காலப்போக்கில்உரக்கலப்பில்லா உணவுப் பொருட்கள் சாப்பிடும் நிலைக்கு வருவது மட்டும் நிச்சயம்.

முகப்பு

Related Posts Plugin for WordPress, Blogger...