பொதுவாக கோழி வளர்ப்பில் இரு வகை முறைகள் பின்பற்றப்படுகின்றன.
கொட்டகை முறை
கோழி ஒன்றுக்கு 0.6-0.75 சதுர அஎ அளவு வீதம் இருக்கும்படி கோழிக் கொட்டகை அமைக்கவேண்டும். இம்முறைதான் நன்கு பலன் தரக்கூடிய கோழி வளர்ப்பு முறையாகும். கூரை ஒரு ஆஸ்பெஸ்டாஸ் கொண்டு அமைக்கலாம். சிறு சிறு அறைகளாகத் தடுத்து ஓர் அறைக்கு 300 குஞ்சுகளுக்கு மிகாமல் வளர்க்கலாம்.
பயன்கள்
- ஒரு குறிப்பிட்ட குறைந்தளவு இடத்தில் நிறைய கோழிகளை வளர்க்கலாம்.
- பதிவேடுகளை சரியாகப் பராமரிக்க முடியும்.
- சரியான வளர்ச்சியுற்ற உற்பத்திக் குறைந்த கோழிகளைப் பிரித்தெடுத்தல் எளிது.
- இம்முறையில் தான் கோழிகள் அதன் முட்டை மற்றும் ஊண் உண்ணுதலைத் தடுக்க முடியும்.
- இம்முறையில் சுத்தமான முட்டைகள் பெறப்படுகின்றன.
- அழுத்தக் காரணிகள் குறைவு.
- இரத்தக்கழிச்சல், குடற்புழுக்கள் போன்ற ஒட்டுண்ணிகளின் நோய்த்தாக்குதல் கட்டுப்படுத்த முடியும்.
- தீவனங்கள் அதிகம் வீணாகாமல் தடுக்கப்படுகிறது.
- மிதவெப்பமண்டலப் பகுதிகளில் கோழி வளர்ப்பிற்கு கீழ்க்கண்ட மருந்துகளில் கோழிகளை அமிழ்ந்தவை அல்லது மருந்தை தூவுவதற்கோ பயன்படுத்தலாம். மழைக்காலங்களில் அமிழ்த்துதல் நல்லதல்ல. மேலும் கோழியின் தலையை நனைப்பதும் தவிர்க்கப்படவேண்டும்.
- மேலும் குஞ்சுகளை வளர்ந்த கோழிகளிடமிருந்து பிரித்து வளர்த்தல், கொட்டகை மற்றும் அனைத்து சாதனங்களையும் சுத்தமாக வைத்திருத்தல், பார்வையாளர்களை உள்ளே அனுமதிக்காமல் இருத்தல், இறந்த கோழிகளை முறையாக அப்புறப்படுத்துதல், எலி மற்றும் பிற பறவைகளின் நடமாட்டத்தைப் பண்ணையிலிருந்து நீக்குதல் போன்ற முறையான சுகாதார நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல் வேண்டும். அதோடு பயனற்ற பறவைகளை நீக்குதல் போன்றவையும் நல்ல பலன் தரக்கூடிய பராமரிப்பு முறைகளாகும்.
ஆழ்கூள முறை
இம்முறை உலகம் முழுவதம் பின்பற்றப்படும் முறை ஆகும்.
பயன்கள்
- மூலதனம் குறைவு.
- சுகாதாரமானது, அதோடு கோழிகளுக்கு எந்த ஒரு பாதிப்பும் இருக்காது.
- இதில் பயன்படுத்தப்படும் கூளமானது ரிஃபோஃபிளேவின் மற்றும் விட்டமின் பி 12 ஆகிய சத்துக்களை கோழிக்கு அளிக்கிறது.
- நோய்க் குறைபாடுகளைக் கட்டுப்படுத்துதல் எளிது.
- உற்பத்தித் திறனை அதிகப்படுத்துகிறது.
- நெல் உமி, உலர்ந்த இலைகள், நறுக்கிய வைக்கோல் மற்றும் வேர்க்கடலை தழைகள் போன்ற கிடைக்கும்பொருட்களை கூளமாக உபயோகிப்பதால் இடுபொருள் செலவு குறைவு.
ஆழ்கூள முறையில் கவனிக்க வேண்டியவை
- கூளங்கள் அதிக ஈரம்படாமல் எப்போதும் உலர்ந்த நிலையில் இருக்கவேண்டும்.
- குறிப்பிட்ட அளவுக் கோழிகளையே வளர்க்க முடியும்.
- நல்லக் காற்று வசதி இருக்கவேண்டும்.
- கூளங்கள் வாரத்திற்கொரு முறை மாற்றப்படவேண்டும். ஏதேனும் ஈரமான கூளங்கள் இருப்பின் அவற்றிற்குப் பதில் புதிய உலர்ந்த கூளங்கள் போடப்படவேண்டும்.
- ஒரு சரிவிகிதத் தீவனம் கோழிகளுக்குக் கொடுக்கப்படவேண்டும்.
- கோடைக்காலத்திற்கு 2 மாதங்களுக்கு முன்பே கூளங்கள் போடப்பட்டு தயார் செய்யப்படவேண்டும். அப்போது தான் சூட்டில் பாக்டீரியாக்கள் நன்கு செயல்புரிந்து கூளங்கள் தயாராகும்.
- தண்ணீர் வைக்கும் இடங்களில் நீர்க்கூளத்தின் மீது சிந்தி ஈரமாக்கிவிடாதவாறு எப்போதும் கவனமாகப் பார்த்துக் கொள்ளவேண்டும்.
(ஆதாரம்: டாக்டர். பால் பிரின்ஸ்லி ராஜ்குமார், வேளாண் கல்லூரி, மதுரை.)
தனிமையில் வளர்த்தல்
வணிக ரீதியில் அளவில் வைப்பதை விடப் பெரிய பண்ணைகளே அதிக லாபம் தரக்கூடியவை, முட்டை உற்பத்திக்கு 2000 பறவைகள் கொண்ட பண்ணை அமைப்பு சிறந்தது. இறைச்சிக்கென வளர்க்கப்படும் கோழிகள் வாரத்திற்கு 250 குஞ்சுகள் புதிதாக சேர்க்கப்படவேண்டும்.
கோழிகள்
கோழிகள்
கோழிக்குஞ்சுகள் வாங்கும் போது நல்ல தரமானவைகளாகப் பார்த்து வாங்கவேண்டும். சில நாட்களான இளம் பெட்டைக் குஞ்சுகளை வாங்குதல் நலம். இறைச்சிக்கென வளர்க்கும் கோழிகள் நன்கு வளர்ந்து ஓடக்கூடிய நிலையில் இருக்கலாம்.
கோழிகளைத் தேர்ந்தெடுக்கும் மாதிரி சோதனை
இந்திய அரசு, பெங்களூர், மும்பை, புவனேஸ்வர் மற்றும் டெல்ஹி ஆகிய நான்கு இடங்களில் முட்டை மற்றும் இறைச்சிக் கோழிக்கான மாதிரி சோதனை ஆய்வகங்களை நிறுவியுள்ளது. இதன் மூலம் வருடந்தோறும் பல இனக்கோழிகளை இவ்விடங்களில் வைத்துச் சோதனை செய்து முடிவுகள் வெளியிடப்படுகின்றன. இதன் மூலம் சூழ்நிலைக்கேற்றவாறு இனங்களைத் தேர்ந்தெடுத்து வளர்க்கலாம்.கோழிகளைத் தேர்ந்தெடுக்கும் மாதிரி சோதனை
இருக்க வேண்டிய எண்ணிக்கை
கோழிகளில் இறப்பு, தேவையற்ற / பயனற்ற கோழிகளின் நீக்கம் போக ஒவ்வொரு பகுதியிலும் 1000 கோழிகள் இருக்குமாறு பார்த்துக் கொள்ளவேண்டும். அதாவது 1000 கோழிகளுக்கு 1100 கோழிகள் தேர்ந்தெடுத்து வாங்கவேண்டும். ஒரு நாள் வயதான இளம் கோழிக்குஞ்சுகள் 1100 வளரும் இளம் குஞ்சுகள் 1050, தயார் நிலையில் குஞ்சுகள் / கோழிகள் 1000 என்ற எண்ணிக்கையில் இருக்கவேண்டும். இறைச்சிக்கான கோழிகளில் 6-7 வார வயதில் 250 கோழிகள் சந்தைக்கு அனுப்பத் தயார் நிலையில் இருக்கவேண்டும்