சமச்சீர் கல்வி திட்டத்தை நிறுத்தக்கூடாது: சென்னை ஐகோர்ட் உத்தரவு


 
சமச்சீர் கல்வி திட்டத்தை நிறுத்தக்கூடாது: சென்னை ஐகோர்ட் உத்தரவுசமச்சீர் கல்வி திட்டம் முந்தைய தி.மு.க. ஆட்சியில் கொண்டு வரப்பட்டது. இந்த திட்டத்தை நிறுத்தி வைத்து புதிய அ.தி.மு.க. அரசின் அமைச்சரவை முடிவு செய்தது. இந்த முடிவை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் பொது நல வழக்கு தொடரப்பட்டது.
 
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.இந்த வழக்கை தலைமை நீதிபதி எம்.ஒய்.இக்பால், நீதிபதி சிவஞானம் அடங்கிய முதல் டிவிஷன் பெஞ்ச் விசாரித்தது. அப்போது தமிழக அரசு சார்பில் ஆஜரான அட்வகேட் ஜெனரல் நவநீத கிருஷ்ணனிடம் தலைமை நீதிபதி எம்.ஒய்.இக்பால் சமச்சீர் கல்வி முறையை நிறுத்தி வைப்பது  எந்த ஆதாரத்தின் அடிப்படையில் அமைச்சரவையில் முடிவெடுக்கப்பட்டது. என்று  சரமாரியாக கேள்வி எழுப்பி சில விளக்கங்களை கேட்டார்.
 
அதற்கு பதில் அளித்த அட்வகேட் ஜெனரல் நவ நீதகிருஷ்ணன், சமச்சீர் கல்விக்கான பாடங்கள் தரமற்றவை. இது தொடர்பாக மாணவர்கள், பெற்றோர்கள் கொடுத்த ஏராளமான புகார்களின் அடிப்படையிலேயே சமச்சீர் கல்வி முறையை நிறுத்தி வைப்பதென்று அமைச்சரவை கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.  அதற்கான ஆதாரங்களை கோர்ட்டில் தாக்கல் செய்ய தயாராக உள்ளோம் என்றார்.
 

முகப்பு

Related Posts Plugin for WordPress, Blogger...