நபி ஸல் அவர்கள் சொன்னார்கள்: ஒவ்வொருவரும் பொருப்பாளர்கள், அது பற்றி அவர்கள் கேட்கப்படுவார்கள். (புகாரி, முஸ்லிம்)
இப்போது சமூகம் மாறிவுள்ளது, அதிகமான பெற்றோர்கள் முழு நேரத் தொழிலாளர்களாக (full time job holders) மாறியுள்ளார்கள், இதனை கருத்தில்கொண்டு பல நகர்புர பாடசாலைகள் மாலைநேர வகுபுக்கள் பல நிகழ்ச்சி நிரல்களையும் ஒழுங்குசெய்து நடாத்தி வருகின்றன.
பாடசாலை நேரத்திற்கு பின்னர் பிள்ளைகள் தங்களது அதிகமான நேரங்களை தனியாக அல்லது பெற்றோர் கண்கானிப்பின்றி வளர்வதால் அதிக தீமைகளுக்கும் சிக்கல்களுக்கும் மாட்டுண்டு அதிலிருந்து மீள வழிதெரியாது தடுமாறுகின்றார்கள்.
இதனால் சில சமூகவியல், உளவியல் நிருவனங்கள், பல்கலைக்கழகங்கள் இது தொடர்பான பல ஆய்வுகளை மேற்கொண்டிருக்கின்றன, மேற்கொண்டு வருகின்றன.
பாடசாலையில் இருக்கும் போதே இன்று மாலை எங்கே போகலாம் என்று கதைத்துக்கொள்கிறார்கள் மாணவர்கள்,
’அடே மச்சி பின்நேரம் எங்கே போகலாம்?’ என்று ஒருவர், வலமையானதுதான் நேத்ரா சனலில் நல்ல படம் போகும், பார்க்க வேண்டியதுதான் என்று மற்றொருவர்,
ஊர் அளக்க (roaming around) வேண்டியதுதான் என்று இன்னொருவர் இப்படி முடிவெடுத்துக்கொண்டு வீடு வந்து சேர்வார்கள்.
வளரும் பருவத்தில் உள்ள மாணவர்களின் நிலையை அவர்களுக்கு உணர்த்த சில நிருவனங்கள் தனிமனிதர்கள் முன்வந்திருப்பது பெருமையானதுதான்.
இதில் மாற்றங்கள் தேவை யும் ஒன்றாகும்.
அத்துடன்
Institute for Research from University of Michigan இது தொடர்பான ஆய்வொன்றை மேற்கொண்டிருந்தன.
பாடசாலை முடிந்ததும்
73% மாணவர்கள் நேராக வீட்டுக்குச் (go straight from school to home) செல்கின்றார்கள்,
11% மாணவர்கள் ’பிள்ளைகள் பாராமரிப்பு நிலையங்கள்’ (go to child care center), மேலதிக வகுப்புக்களுக்குச் செல்கிறார்கள்
8% மாணவர்கள் பாடசாலையிலேயே (stay at school) தங்கிவிடுகின்றார்கள்,
8% மாணவர்கள் எங்கோ விரும்பிய இடங்களுக்குச் (go somewhere else) செல்கின்றார்கள்.
பாடசாலையிலேயே தங்கிப் படிக்கக்கூடிய பிள்ளைகளில் அதிகமான பெற்றோர்கள் (தாயும் தந்தையும்) நாள் முழுதும் தொழிலில் இருக்கக்கூடியவர்களாகும்.
இதில் பல மாணவர்கள் வீடுகளில் தனியாக நேரங்களை கடத்தக்கூடியவர்களாகும்.
பாடசாலை முடிந்து வீடு வந்ததும் முதலில் என்ன செய்கிறார்கள் என்பது தொடர்பாகவும் இந்த நிருவனம் கல ஆய்வு செய்தது. அதன் விபரம் பின்வருமாறு:
27 வீதமானவர்கள் குளிர்சாதனப்பெட்டியை நாடுகிறார்கள்,
19 வீதமானவர்கள் தங்களது சொந்த, முக்கியமான வேலைகளில் ஈடுபடுகிறார்கள் (washing, bathing and dressing),
15 வீதமானவர்கள் டீவியுடன் நேரத்தை போக்குகிறார்கள்,
13 வீதமானவர்கள் படிப்பில் கடத்துகின்றனர், மற்றும்
09 வீதமானவர்கள் விளையாட்டில் மூழ்கிவிடுகின்றனர்.
இந்த விகித விபரத்தை அமெரிக்க வாழ் மாணவர்களுடன் தொடர்புபடுத்தி எந்தளவு நேரங்களை இந்த செயற்பாடுகளுக்கு பாவிக்கின்றனர் என்பதையும் ஆய்வுசெய்தனர்.
100 நிமிடங்களை டீவி பார்ப்பதற்காகவும்
60 நிமிடங்களை படிப்பதற்கும்
60 நிமிடங்களை விளையாடுவதற்கும்
30 நிமிடங்களை ஏனைய வீட்டு வேலைகளை செய்வதற்கும்
20 நிமிடங்களை வாதப் பிரதிவாதங்களுக்கும் பயன்படுத்துவது தெரிவந்திருக்கிறது.
பாடாசலை தவிர்ந்த ஏனைய நேரங்களில் தாய் தந்தைகள் வீட்டில் இருக்கக்கூடாது என்பதையே அதிக மாணவர்கள் விரும்புகிறார்கள், எதிர்பார்க்கின்றார்கள், காரணம் பெற்றோர்களின் நல்ல வழிகாட்டுதல்களை மறுத்துவிட்டு நண்பர்களுடன் வெளிச் செல்வதை அதிகம் எதிர்பார்க்கின்றார்கள்.
பெற்றார் வழிகாட்டுதல்கள், கண்கானிப்பு இல்லாத போது, நண்பர்களுடன் சேர்ந்து மதுபானப் பாவிப்பு, (பாலியல் நடத்தைகள்) தகாத உடலுறவு பலக்கவழக்கங்கள், களவு கொள்ளை கொலை (Get involved in alcohol or illegal drug use, gangs or violence, and sexual activity) போன்ற செயல்களில் ஈடுபடல் என்று தொடர்கிறது …..….
பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளின் பாடசாலை தவிர்ந்த நேரங்களை கண்கானிக்க ஆரம்பித்தால் பல நல்ல, பிரயோசனமான செயல்களின்பால் தொடர்புபடுத்திவிடலாம்,
உதாரணமாக,
சுய திட்டமிடல் மற்றும் தன்னம்பிக்கையை கட்டியெழுப்பலாம்,
சமூக சேவைகளுடன் தொடர்புபடுத்திவிடலாம்
உடற்பயிற்சியுடன் கூடிய விளையாட்டுக்களில் நேரங்களை கடத்த உதவலாம்,
பிற நண்பர்கள், உறவினர்களுடன் தொடர்பை ஏற்படுத்தி பிரயோசனமடையலாம்,
நேர முகாமைத்துவ திறனை வளர்த்துக்கொள்ளலாம்,
உள்ளூர் பள்ளிவாசல்களும் இஸ்லாமிய நிருவனங்களும் இந்த பாடசாலை மாணவர்களின் முன்னேற்றத்திற்கு உதவ முன்வர வேண்டும்.
’பேச்சை விட்டிவிட்டு வேலையை ஆரம்பிப்பது தான்
வெற்றியின் ஆரம்பமாகும்’
பாடசாலை அல்லாத நேரங்களில் மார்க்கக் கல்வியை கற்றுக்கொடுப்பது, அல் குர்ஆனை ஓத, விளங்கக் கற்பிப்பது, வெளிநாட்டு மொழிகளை கற்க உதவுதல், தொண்டராக இருந்து சமூக பணிகளின், சீர்திருத்தங்களின் ஈடுபட தூண்டுவது இவர்களின் எதிர்கால வெற்றிக்கு உதவியாய் அமையும்.
மாணவர்களின் எதிர்காலம் பற்றி சிந்திக்கின்ற பள்ளிவாசல்கள், நிருவனங்கள் கவனத்தில்கொள்ள வேண்டிய சில விடயங்கள் இருக்கின்றன,
பங்குகொள்ளும் பிள்ளைகளின் வயது?
பிள்ளைகள் எதை அதிகம் விரும்புகின்றார்கள்?
சமூகமளிக்கும் பிள்ளைகளின் செயற்திறன் எப்படியானது?
செயன்முறைக்கு தேவையான, போதுமான நேரம்?
நாளாந்த போதனைகள் எந்தளவு தூரம் இவர்களுக்கு பயனளிக்கின்றன?
இந்த இஸ்லாமிய நிலையங்களதும் பள்ளிவாசல்களினதும் சேவைகள் நம் சமூகத்தில் நல்ல பயன்களை தருவதற்கு கீழ்வருபவற்றை பயன்படுத்தலாம்,
Goal setting and strong management,
Strong family involvement,
Evaluation of program progress and effectiveness
Plans for sustainability,
Opportunities for active meaningful learning.
மாலைநேர நிகழ்ச்சிகளில் கவனம்செலுத்தும் நிருவனங்களும் தனிநபர்களும் இந்த மாலைநேர நிகழ்ச்சிகளின் தன்மை குறித்து கவனம் செலுத்த வேண்டும்.
ஒவ்வொரு பிள்ளைகளுக்கும் அவர்களின் பெருமதி என்ன என்பதை உணர்த்தும், சுய முயற்சியுடன் கூடிய திறமைகளை ஊக்குவிக்கும் பாடத்திட்டங்களை வடிவமைக்க வேண்டும்,
சுதந்திரமாகவும் புரிந்துணர்வுடனும் செயற்படும் போக்கை ஊக்குவிக்க வேண்டும்.
தலைமைத்துவப் பயிற்சி வழங்கப்படும் போது தனக்கு தான் தலைவர் என்கின்ற மனோபாவத்தை வளர்க்க வேண்டும்.
வீட்டுப் பயிற்சிக்கும் ஏனைய தேவையான வேலைகளுக்கும் உதவும் வகையிலான கையால்கையை பிரயோகிக்க தவரக் கூடாது.
நல்ல பாடமீட்டல்களுக்குத் தேவையான இடம் மற்றும் போதிய நேரத்தையும் அவர்களுக்கு ஒதுக்க வேண்டும்.
வீட்டுப் படிப்பது என்பது மேலதிக திறன்களை வளர்த்துக்கொள்வதற்கும் தன்னுள் தூங்கும் சிறப்பத்தேர்ச்சியை அடையாளம் கண்டு அதனை உயர்த்துவதற்கும் உதவியாய் இருக்கும் என்ற மனஉறுதியை ஊக்குவிக்க வேண்டும்.
அதே நேரம்,
பாடசாலைப் படிப்பு என்பது, புதிய கற்கைகளுக்கான வழிகாட்டுதல்களை பெற்றுக்கொள்வதற்கும், அது தொடர்பாக எழுகின்ற சிக்கல்களைத் தீர்த்துக் கொள்வதற்குமாகும் என்ற மனவழிமையையும் ஏற்படுத்த வேண்டும்.
புத்தக பூச்சுகளாக நம்மிடையே வலம் வரும் நம் பிள்ளைகளுக்கு தேக ஆரோக்கியம் பெரும் வகையிலான விளையாட்டுக்களையும் அறிமுகப்படுத்த வேண்டும்.
விளையாட்டுப் போட்டிகளில் பங்குகொள்ளுவதற்கு எமது பிள்ளைகளை ஊக்குவிக்க வேண்டும்.
தொழில்தேடும் வயதை எத்துகின்ற மாணவர்களுக்கு தனது துறைசார் தொழிலைப் பெற்றுக்கொள்ளும் வகையில் நல்ல வழிகாட்டல்களை வழங்க வேண்டும்.
பெற்றோரின் பங்களிப்பு:
ஒரு குழந்தையின் வளர்ச்சிக்கு (பல அத்தியவசியத் தேவைகள் துணைபுரிவதுபோல்) மாலைநேரங்களில் பெற்றோரின் பங்களிப்பு மிக முக்கியமானதாகும்.
எமது பிள்ளைகள் பங்குகொள்கின்ற மாலைநேர வகுப்புகள், நிகழ்ச்சிநிரல்களுடன் சம்பந்தப்பட்ட உத்தியோகத்தர்கள், ஆசிரியர்களுடன் பேற்றோர்கள் நல்ல உறவுகளை வளர்த்துக்கொள்ள வேண்டும், நாளுக்கு நாள் நம் பிள்ளைகள் தொடர்பான செய்திகள், அவர்களின் வளர்ச்சிகளைப் பற்றி கேட்டுத்தெரிந்துகொள்ள வேண்டும்.
பாடசாலை முடிந்து எமது பிள்ளைகளை மாலைநேரங்களில் நல்ல நிகச்சிநிரல்களுடன் இணைத்துவிடுவதன் மூலம் நல்ல, எதிர்காலமுள்ள இளைஞர் சமூகத்தை உருவாக்கலாம் என்பது நிச்சயம், அதற்கு மாற்றங்கள் தேவை எப்போதும் துணைநிற்கும், இன்க்ஷா அல்லாஹ்.
மறந்துவிடாதீர்கள்!! எமது பிள்ளைகள் கலந்துகொள்ளும் பாடசாலை தவிர்ந்த மாலைநேர நிகழ்ச்சிகள் அவர்களின் உள, உடல் ரீதியாக பாரிய கஸ்டங்களுக்கும் வெருப்புக்களுக்கும் உள்ளாகமல் (after school activities should not become a burden for children) பார்த்துக்கொள்ள வேண்டும்.