பிரித்தானியா இலண்டனில் உள்ள கிங்க்ஸ் கல்லூரியில் பணியாற்றும் பேராசிரியர் டிம் ஸ்பெக்டர் தலைமையிலான குழு உடல் குண்டாவதற்கு காரணமான மரபணுவை கண்டு பிடித்துள்ளது. 800 பெண் தன்னார்வலர்களின் தோலில் இருந்து எடுக்கப்பட்ட 20 ஆயிரம் கொழுப்பு மாதிரிகளை வைத்து விஞ்ஞானிகள் நடத்திய
ஆராய்ச்சியில் நீரிழிவு நோயையும், கொழுப்பையும் இணைக்கக்கூடிய மரபணு தான் முக்கிய காரணியாக இருந்து வருகிறது என்றும் இந்த மரபணு தான் கொழுப்பில் உள்ள மற்ற மரபணுகளை கட்டுப்படுத்துகிறது என்றும் விஞ்ஞானிகள் கண்டுபிடித்து இருக்கிறார்கள். உடல் பருமன் தொடர்பான நோய்களுக்கு சிகிச்சை முறைகளை கண்டறிவதற்கு இது உதவும் என்று தெரிகிறது.