ராமேஸ்வரம் ஜூன் 28- இளம் தலைமுறையினர் வலிமையான இந்தியாவை உருவாக்க பாடுபட வேண்டும் என முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாம் தெரிவித்தார். ராமேஸ்வரத்தில் அவரது வீட்டில் கலாமின் வாழ்கை வரலாறு அடங்கிய புகைப்படம் மற்ற அறிவியல் பொருட்களில் கண்காட்சியகத்தை திறந்து வைத்து
அப்துல் கலாம் பார்வையிட்டார். பின்னர், அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
எனது பள்ளி பருவத்தின் ஆசிரியர் மாணவர்கள் குறிக்கோள், லட்சியத்துடன் படிக்க வேண்டும். அப்போதுதான் நீங்கள் வெற்றி அடைவீர்கள் என்று கூறினார். அதன்படி எனது வாழ்கையில் குறிக்கோள், லட்சியத்தையும் கடைபிடித்ததால் வெற்றி அடைந்தேன். இதே போன்று மாணவர்களும், இளஞர்களும் தங்களது வாழ்கையில் குறிக்கோள், லட்சியங்களை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும். அப்போதுதான் வெற்றி பெற முடியும்.
உயிரோடு இருப்பவருக்கு முதன் முதலாக கண்காட்சி இருப்பது அதனை நானும் பார்ப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த கண்காட்சியகத்தில் இடம் பெற்றுள்ள எனது வாழ்கையில் இடம்பெற்றுள்ள அரிய புகைப்படங்கள், அறிவியல் சார்ந்த சாதனங்கள், நான் பெற்ற விருதுகள் இங்கு இடம் பெற்றுள்ளது.
இதனை உருவாக்கிய நண்பரும், விஞ்ஞாணியுமான சிவதானுபிள்ளை மற்ற அவரது குழுவினருக்கும் பாராட்டு தெரிவித்து கொள்கிறேன். மாணவர்கள் இந்த கண்காட்சியகத்தை பார்த்து பயனடைந்து வாழ்கை முன்னேற்றத்திற்காகவும், வலுமையான இந்தியாவை உருவாக்கவும் பாடுபட வேண்டும்.
1.70 கோடி இளைஞர்களையும்,மாணவர்களையும் சந்தித்து உரையாடியுள்ளேன். அவர்களின் எண்ணம் வலிமையான இந்தியா உருவாக வேண்டும் என்று பாடுபட முனைப்பு எடுத்து வருகிறார்கள். வரும் இளம் தலைமுறையினரும் வலிமையான இந்தியாவை உருவாக்க பாடுபட வேண்டும். மேலும் நமது நாட்டின் பாதுகாப்பு வலுவாக உள்ளது. முப்படையும் எந்த நேரத்திலும், எந்த சவாலையும் சந்திக்க தயாராக உள்ளது என தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் பிரமோஷ் ஏவுகணை திட்ட இயக்குநர் சிவதானுபிள்ளை, இந்திய அறிவியல் தொழில்நுட்ப மைய விஞ்ஞாணி பாலகிருஷ்ணன், அவரது நண்பர் ராஜன் கலந்து கொண்டனர். முன்னதாக மாவட்ட கலெக்டர் அருண்ராய், மாவட்ட எஸ்.பி அனில்குமார் கிரி ஆகியோர் வரவேற்றனர்.