
இந்நிலையில் பின்லேடனை கொன்றது போல அல்கய்தா புதிய தலைவர் அல்-ஜவாஹிரியையும் கொல்வோம் என்று அமெரிக்கா திட்டவட்டமாக கூறியுள்ளது. பென்டகனில் பேட்டியளித்த அமெரிக்க ராணுவ உயரதிகாரி மைக் முல்லன் கூறுகையில், ‘‘ஒசாமாவுக்கு பிறகு ஜவாஹிரி புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதாக வந்த செய்திகள் ஆச்சரியமளிக்கவில்லை. இன்னும் அல்கய்தா அமைப்பு, எங்களை அச்சுறுத்தியே வருகிறது. பின்லேடனுக்கு நேர்ந்த கதிதான், ஜவாஹிரிக்கும் நேரும்’’ என்றார்.