
இதனால் குடும்ப செலவுக்கு பணம் தருவது இல்லை. குடித்துவிட்டு வருவதால் அடிக்கடி தகராறு நடக்கும். ஒருநாள் நடந்த வாய்த் தகராறில் மனம் உடைந்த சுதா, உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ கொளுத்திவிட்டார். தாயின் அலறல்கேட்டு ஓடிவந்த குழந்தைகளை பாபு காப்பாற்றியிருக்கிறார். இரண்டு குழந்தைகளும் லேசான காயத்துடன் தப்பிவிட்டன. காப்பாற்ற சென்ற பாபுவுக்கு உடல் முழுவதும் தீக்காயம் ஏற்பட்டுள்ளது. உடல் முழுவதும் வெந்த நிலையில் சுதா இறந்துவிட்டார். போலீஸ் விசாரணைக்கு பயந்து பாபு ஓடிவிட்டார். போலீசார் பாபுவை தீவிரமாக தேடி வந்து உள்ளனர்.
உடல் முழுவதும் தீக்காயங்களுடன் மறைந்து வாழ்ந்த பாபு, அருகில் உள்ள ஒரு கிராமத்தில் மரத்தில் தூக்குப்போட்டு இறந்துள்ளார். போலீஸ் விசாரணைக்கு பயந்து அவர் தற்கொலை செய்திருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. சண்டை, சச்சரவு இல்லாத குடும்பங்களே இல்லை. அவ்வப்போது சண்டை நடப்பதும் அதன்பின் சமரசம் ஆவதும் சகஜமான ஒன்று. குடிப்பழக்கம், கள்ளக்காதல், வறுமை என பல காரணங்கள். இதில் குடிப்பழக்கம் முதலிடத்தில் இருக்கிறது. தினமும் இதைப்போல் தகராறு நடக்கும்போது மனம் வெறுத்துப்போகும் மனைவி தற்கொலை முடிவை எடுக்கிறார்.
மனைவி போனவுடன்தான் கணவனுக்கு உரைக்கிறது. தப்பு பண்ணிவிட்டோமே என உணருகிறான். ஆனால் அதற்குள் தற்கொலை காரணத்தை தேடும் போலீசார் விசாரணை என்ற பெயரில் கணவரை வறுத்தெடுத்து விடுகிறார்கள். விசாரணைக்கு பயந்து அவர்களும் தற்கொலை செய்துகொள்ள குழந்தைகள் அனாதையாகிவிடுகிறார்கள். யாரும் யாரையும் தற்கொலை செய்துகொள் என்று தூண்டுவது இல்லை. பிரச்னையை எதிர்கொள்ள தைரியம் இல்லாத கோழைகள்தான் சாக துணிகிறார்கள். இதில் பாவம் குழந்தைகள்.