குலசேகரம்: குமரி அருகே திருவட்டாரில் அரசு பள்ளியில் பயின்ற

அவர்களை நேற்று முன்தினம் வருமாறு பள்ளி சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.அங்கு சென்ற மாணவர்கள், பெற்றோர்களிடம் தலைமை ஆசிரியர் பள்ளியில் இடம் இல்லை என கூறி அட்மிஷன் தர மறுத்துள்ளார். ஆத்திரம் அடைந்த மாணவர்கள் மற்றும் பெற்றோர் பள்ளிமுன் அமர்ந்து போராட்டம் நடத்தினர். அப்போது அந்த வழியாக சென்ற ஹெலன்டேவிட்சன் எம¢பி தலைமை ஆசிரியர் மற்றும் கல்வி அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். நிர்வாகத்திடம் பேசி இம்மாதம் இறுதியில் முடிவை அறிவிப்பதாக தலைமை ஆசிரியர் தெரிவித்தார். பெற்றோர் போராட்டத்தை கைவிட்டனர்