கர்நாடக  மாநிலம் மைசூரில் இன்று காலை இரண்டு  யானைகள்  புகுந்து அட்டகாசம் செய்தன.  இதில் ஒருவர் உயிரிழந்தார். ஒரு யானை  கல்லூரி ஒன்றினுள் புகுந்தது.  மற்றொரு யானை அருகில் உள்ள மார்க்கெட் பகுதியிலும், குடியிருப்புப்  பகுதியிலும் நுழைந்தது. அந்த யானை ரேணுகா பிரசாந்த் என்பவரை தனது  தந்தத்தால்  குத்தியது இதில் அவர் உயிர் இழந்தார்.மேலும்   ஒரு பசுவையும் தாக்கியது. இதையடுத்து  யானைகள் புகுந்ததால் பள்ளிகள்,  கல்லூரிகளுக்கு உடனடியாக விடுமுறை அறிவிக்கப்பட்டது. வீட்டிலிருந்து   யாரும் வெளியில் வர வேண்டாம் எனவும் அறிவுருத்தப்பட்டது.
இந்நிலையில்   ஊசியின் மூலம் மருந்து செலுத்தி யானைகளை மயக்கமடைய செய்ய   வனக்காவலர்கள்  முயற்சி செய்து வருகின்றனர் . உயிரிழந்த ரேணுகா பிரசாந்த் குடும்பத்துக்கு  ரூ 5 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என கர்நாடக முதல்வர் எடியூரப்பா  அறிவித்தார்.