
ஹரித்துவாரில் கைது செய்யப்பட்ட இவனிடமிருந்து இராணுவ நிலைகளின் வரைபடங்கள், முக்கிய புகைப்படம், லேப்டாப், பென் ட்ரைவ், உள்ளிட்ட பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. உளவு தகவல்களை பாதுகாப்பாக ஐ.எஸ்.ஐ க்கு தெரிவிப்பதற்காக மாதம் தோறும் ரூ.5000 பணமாக அவன் பெறுவதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.
அஜய், ஹரித்துவார் மாவட்டத்தின் ரூர்கேவிலிருந்து கொண்டு, பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐயின் உளவு ஏஜெண்டாக வேலை பார்த்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. ரூக்ரே புகையிரத நிலையத்தில் நேற்றிரவு ரயில் ஒன்றில் புறப்பட தயாராக இருந்த போது இவனை கைது செய்ததாக ஹரித்வார் தலைமை சுப்ரிமெண்டென் கெவால் குரானா தெரிவித்தார். பர்கான் என அழைக்கப்படும் இவன், லக்னோவிலிருந்து மீருத்திற்கு செல்லவிருப்பதாக கிடைத்த தகவலை அடுத்து இந்த சுற்றிவளைப்பபு நடவடிக்கையை மேற்கொண்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.
கடந்த வருடம், ரூக்ரி எனும் இதே இடத்தில், அபித் அலி எனும் ஐ.எஸ்.ஐ உளவாளி ஒருவர், மகா கும்ப மேலா திருவிழாவின் போது கைது செய்யப்பட்டிருந்தான். அவன் கொடுத்த தகவலின் படியே தற்போது அஜயின் கைதும் இடம்பெற்றிருக்கிறது.