பேருந்து கவிழ்ந்த விபத்தில் பெரும்பாலானோர் உயிர் இழந்த நிலையில் சென்னையை சேர்ந்த ஒருவர் மட்டும் உயிர் பிழைத்துள்ளார். அவர் பெயர் கார்த்திக்ராஜா. இவர் தனது மனைவி ஸ்மிதாவுடன் கடைசி இருக்கையில் அமர்ந்து பயணம் செய்துள்ளார்.
பேருந்து கவிழ்ந்தவுடன் பின்புற கண்ணாடி ஜன்னல்களை உடைத்து தப்பியதாக கூறிய அவர் தனது மனைவியும் இவ்விபத்தில் பலியாகி விட்டதாக தெரிவித்தார். தீ மளமளவென பிடித்ததால் மனைவி ஸ்மிதாவை உயிருடன் மீட்க முடியவில்லை. பேருந்து கவிழ்ந்தது மட்டுமே அறிந்தேன். எப்படி விபத்து நிகழ்ந்தது என தெரியவில்லை.

உயிரிழந்தவர்களில் 11 பேர் பொள்ளாச்சியை சேர்ந்தவர்கள். வெங்கடேஷன், விஜயகுமார், வேலுசாமி, சக்திவேல், திவ்யா, செந்தில்குமார், கார்த்திக், வீரய்யன், சுதா, செந்தில்நாதன், சுப்பிரமணியன் ஆகியோர் பலியாகி பயணிகள் ஆவர். இவர்களில் வெங்கடேஷன் சென்னையில் தனது பேத்தியின் பூப்புனித நீராட்டு விழாவிற்கு சென்று விட்டு திரும்பி உள்ளார்.
விஜயகுமார் மற்றும் சுப்பிரமணியன் ஆகியோர் டாக்டர்கள் ஆவர். பல் டாக்டராக உள்ள சுப்பிரமணியன் சென்னையில் தனது மனைவியை அவரது தாய் வீட்டில் விட்டு விட்டு ஊர் திரும்பும் போது இவ்விபத்து ஏற்பட்டுள்ளது. சென்னையை சேர்ந்த கார்த்திக் பொள்ளாச்சி வழியாக வால்பாறைக்கு சுற்றுலா செல்வதற்காக வந்துள்ளார்.
பொள்ளாச்சியை சேர்ந்த திவ்யா என்ற பெண், சென்னையில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் சாஃப்ட்வேர் இன்ஜீனியராக பணியாற்றினார். அவர் 08.06.2011 அன்று நடக்க இருந்த தனது திருமண நிச்சயதார்த்தத்திற்காக சொந்த ஊரான பொள்ளாச்சிக்கு கேபிஎன் பேருந்தில் சென்றுள்ளார். இந்நிலையில் எதிர்பாரதவிதமாக பேருந்து விபத்துக்குள்ளானதில் திவ்யா உயிரிழந்தார்.