தமிழ்நாட்டு அரசியலின் பகடைக்காயாக ஈழப் பிரச்சினை?


தமிழ்நாட்டு அரசியலின் பகடைக்காயாக ஈழப் பிரச்சினை?ாறிக் கொண்டிருக்கின்றன. போர் என்றால் மக்கள் சாவது சகஜம் என்ற ஜெயலலிதா, இப்போது தமிழக முதல்வர். ஈழப் படுகொலைகளுக்காக ராஜபக்சேவை குற்றவாளிக் கூண்டில் நிறுத்த முயற்சிப்பேன் என முதல் நாளே அறிவித்துள்ளார்.

தமிழுணர்வாளர்கள் அகமகிழ்ந்து போயிருக்கிறார்கள்!

ஈழப் படுகொலைகளுக்கு உற்ற துணைவர்களாக இருந்த காங்கிரஸ் தலைவர் சோனியாவும் பிரதமர் மன்மோகன் சிங்கும் இதற்காக ஒரு துரும்பைக் கூட கிள்ளிப் போடத் தயாராக இல்லாத நிலையில், இதில் மாநில முதல்வரான ஜெயலலிதா முயற்சி என்னவாக இருக்கும்... எந்த அளவு பலன் தரும்... எந்த அளவு உண்மையாக இந்த முயற்சிகளில் அவர் இறங்குவார் என்ற கேள்வி எழுந்துள்ளது.

திமுகவை காங்கிரஸ் கழற்றிவிட நெருக்கடி தருவதற்காகவே ஆட்சிக்கு வந்தவுடனேயே ஈழப் பிரச்சனையை ஜெயலலிதா கையில் எடுத்ததாகத் தெரிகிறது.

ஈழப் பிரச்சினையை ஜெயலலிதா முழுவீச்சில் கையிலெடுக்கும் போது, ஈழத் தமிழர்களுக்காக ஆட்சியையே இழந்தவன் நான் என அடிக்கடி சொல்லி வரும் திமுக தலைவர் கருணாநிதி மட்டும் சும்மா இருக்க முடியுமா?.

இனி ராஜபக்சேவை தூக்கிலேற்றவேண்டும் என்ற குரல் அறிவாலய முகாமிலிருந்து சற்று பலமாகவே கேட்க ஆரம்பிக்கும். அதற்கு அச்சாரமாக, தந்தை செல்வா காலத்திலிருந்து இலங்கைப் பிரச்சினையைத் தீர்க்க திமுக மேற்கொண்ட முயற்சிகள் தொடங்கி சகோதர யுத்தம் வரை என கருணாநிதி தரப்பிலிருந்து தொடர்ந்து அறிக்கைகள் வெளியாகும்.

மீண்டும் மனித சங்கிலி, உண்ணாவிரதங்கள், மீனவர்களுக்காக கனிமொழி நடத்திக் காட்டியது போன்ற ஆர்ப்பாட்டங்கள் எல்லாம் அரங்கேறும்.

இதையெல்லாம் பார்த்துக் கொண்டு காங்கிரஸ் கட்சி சும்மா இருக்குமா? கூட்டணிக்குள் இருந்து கொண்டே ஈழப் பிரச்சினையில் திமுக தீவிரம் காட்டுவதை அமைதியுடன் வேடிக்கைப் பார்க்குமா?. திமுகவுக்கு சிபிஐ உள்ளிட்ட பல வகைகளில் நெருக்கடிகளை காங்கிரஸ் அதிகரிக்கும். இதைத் தான் எதிர்பார்க்கிறார் ஜெயலலிதா.

தான் ஈழப் பிரச்சனையை கையில் எடுத்தால் பதிலுக்கு திமுகவும் அதை கையில் எடுக்கும். இதன்மூலம் திமுக-காங்கிரஸ் உறவை காலி செய்யலாம் என்பது அவரது திட்டம். அதில் அவர் ஓரளவுக்கு வெற்றியும் பெற்றுவிட்டதாகவே தெரிகிறது.

ஸ்பெக்ட்ரம் விவகாரத்தால் நாடு முழுவதும் கெட்ட பெயர் வாங்கிவிட்ட காங்கிரஸ், திமுகவை வெட்டி விட தருணம் பார்த்துக் கொண்டிருக்கிறது. அவர்கள் அடுத்து கைகோர்க்க வேண்டிய இடம் அதிமுக தான்.

இந் நிலையில் அந்தக் கட்சி ஈழப் பிரச்சனையை பெரிதாக்கி, தனக்கு எதிராக திரும்புவதற்குள், அதிமுகவை கூட்டணிக்குள் கொண்டு வந்துவிடுவது என்ற முடிவுக்கு வந்துவிட்டார் சோனியா. இதனால் தான் யாரும் எதிர்பாராத வகையில் டீ பார்ட்டிக்கு ஜெயலலிதாவுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

இப்படி காங்கிரஸால் வெட்டிவிடப்பட்டாலும் திமுக கையில் எடுக்கப் போகும் பிரச்சனை ஈழ விவகாரமே.

நினைத்துக்கூட பார்க்க முடியாத அளவு படு வீழ்ச்சியைச் சந்தித்துள்ள திமுகவுக்கும் இப்போதைக்கு இளைப்பாறக் கிடைத்திருப்பது ஈழப் பிரச்சினை என்ற நிழல்தான் என்கிறார்கள் நடுநிலையாளர்கள்.

முகப்பு

Related Posts Plugin for WordPress, Blogger...