ஈரான் தலைநகர் தெஹ்ரானில் நேற்று, ஐந்து பேருக்கு பொதுமக்கள் முன்னிலையில் தூக்குத்தண்டனை நிறைவேற்றப்பட்டது.
ஷிராஸ் எனும் நகரில், நூற்றுக்கணக்கான பொதுமக்கள் முன்னிலையில் இத்தூக்குத்தண்டனை வழங்கப்பட்டது. இவர்கள் கொலை,பாலியல், வல்லுறவு, கடத்தல் உள்ளிட்ட
குற்றச்செயல்கள் என்பவற்றுடன் நேரடியாக தொடர்புடையவர்கள் எனவும், இக்குற்றங்களுக்கு அதிகபட்சமாக தூக்குத்தண்டனை வழங்கப்படுவது நியாயமானதே என ஈரான் அரச விதிமுறைகள் தெரிவிக்கின்றன.
இவ்வருடத்தில் மாத்திரம் 143 பேருக்கு இவ்வாறு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. சீனாவிற்கு அடுத்த படியாக அதிகபடியான மரண தண்டனைகள் ஈரானில் நிறைவேற்றப்படுகின்றன. இதற்கு சர்வதேச மனித உரிமைகள் குழுக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.