உலகின் முதல் செயற்கை இதயம் பொருத்தப்பட்ட நபர்.!(காணொளி)


உலகின் முதல் செயற்கை இதயம் பொருத்தப்பட்ட நபர்.!(காணொளி)பொதுவா ஒருத்தருக்கு இதயம் செயலிழக்கத் தொடங்கிய உடனே, மாற்று இதயம் பொருத்தப்படலைன்னா, அவருடைய  முக்கியமான உடல் பாகங்களான சிறு நீரகம், கல்லீரல், குடல், நுரையீரல் மற்றும் மூளை ஆகியவை பாதிக்கப்படும். இதை தவிர்க்கக் கூடிய வகையில் உருவாக்கப்பட்டதுதான் செயற்கை இதயம். இதயத்தின் வென்ட்ரிக்கல் என்றழைக்கப்படும்
கீழரைகள் செயலிழந்து போவதே பெரும்பாலான இதய செயலிழப்புக்கு காரணம். செயலிழந்த கீழரைகளுக்கு ஒரு மாற்றாக செயல்படுவதே இந்த செயற்கை இதயம்! மேலும், செயற்கை இதயம் ஒரு நிரந்தரத் தீர்வல்ல!! மாற்றும் இதயம் கிடைக்கும்வரை ஒருவருக்கு உயிரளிக்கும் ஒரு தற்காலிக இதயமே இந்த செயற்கை இதயம்!
உதாரணமாக, இந்த செயற்கை இதய மாற்று அறுவைச் சிகிச்சையில்…..”தன் 20 களில் இதயத்தைக் தாக்கும் ஒரு வைரசால் பாதிக்கப்பட்ட ஒருவரின் இதயம் செயலிழந்துபோக, அவருக்கு மாற்று இதயம் கிடைக்கும் வரை அவரை உயிர் பிழைக்கச்செய்ய, அவருடைய நெஞ்சை அறுவை சிகிச்சை மூலம் திறந்து, செயலிழந்த இதயத்தை தற்காலிகமாக நிறுத்திவிட்டனர். செயலிழந்த இதயம் நீக்கப்படும்வரை இதய-நுரையீரல் எந்திரம் ஒன்றின்மூலமாக நோயாளிக்கு பிராண வாயு நிறைந்த ரத்தம் செலுத்தப்படும். செயலிழந்த இதயத்தின் மேல் அரைகளை (ஆரிக்குல்) மட்டும் விட்டுவிட்டு, கீழரைகளை நீக்கிவிட்டு, அந்த இடத்தில் செயற்கை இதயத்தை பொருத்திவிடுகின்றனர்! அதற்குப்பின் இதய-நுரையீரல் எந்திரத்தை நிறுத்திவிடுகின்றனர். இப்போது, நிமிடத்துக்கு சுமார் 8 லிட்டர் ரத்தத்தை பம்ப் செய்யத் தொடங்கிவிடுகிறது செயற்கை இதயம்!! செயற்கை இதய செயல்பாட்டை கீழுள்ள காணொளியில நீங்களே பாருங்க…..

இச்சிகிச்சைக்குப்பின், செயலிழந்தபோன பழைய இதயத்தால், செயலிழக்கத்தொடங்கிய நுரையீரல் உள்ளிட்ட பல உடல் பாகங்கள் மீண்டும் செயல்படத்தொடங்கிவிடுகின்றன. ஆக, இந்த செயற்கை இதயத்தின் முக்கிய பங்கு,மாற்றும் இதயம் கிடைக்கும்வரை ஒரு இதய நோயாளியின் பல முக்கியமான பாகங்கள் செயலிழக்காமல் பாதுக்காப்பதே! ஏன்னா, ஒவ்வொரு வருஷமும் இதய செயலிழப்புக்குள்ளாகும் 6,70,000 பேர் வாழும் அமெரிக்காவில், எந்த நேரமும் சுமார் 3100 பேர் இதய மாற்று அறுவைச்சிகிச்சைக்காக காத்திருக்கிறார்கள். ஆனால் சிகிச்சைக்காக கிடைக்கும்/இருக்கும் மாற்று இதயங்களின் எண்ணிக்கை வெறும் 2,200 தான்! ஆக,
மீதமுள்ள சுமார் 900 நோயாளிகளின் உயிருக்கான உத்திரவாதத்தை (இதயம் செயலிழந்தபின்)  6 மாதங்கள் முதல் சுமார் 1000 நாட்கள் வரை கொடுப்பது சின்கார்டியாவின் (தற்காலிக)செயற்கை இதயங்களே என்கிறார் மருத்துவர் ஜேக் கோப்லாண்ட்!
இந்த அறுவை சிகிச்சைக்குப்பின் நோயாளிகள் நடமாடவும் முடியும் என்கிறார் கோப்லாண்ட்! உலகளவில், இதுவரை சுமார் 850 பேருக்கு இந்த செயற்கை இதயத்தை பொருத்தியிருக்கும் கோப்லாண்ட், இந்த சிகிச்சைபெறும் நோயாளிகள் மாற்று இதயம் கிடைக்கும்வரை வீட்டிலிருந்தே ஓய்வெடுக்கமுடியுமா என்பது குறித்த ஆய்வுகளில் ஈடுபட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது!
நம்ம சினிமாவுலத்துல சொல்ற மாதிரி……
“இது வெறும் ட்ரெயிலர்தாங்க. முழுபடம் இனிமேதான் வரப்போகுது” அப்படீங்கிறாங்க சில இதய விஞ்ஞானி/மருத்துவர்கள். ஏன்னா, பாதி நம்ம இதயத்தோட சேர்ந்து செயல்படுற ஒரு செயற்கை இதயத்தைத்தானே நாம பார்த்தோம், இன்னும் பத்து வருஷத்துல, முழுதான ஒரு செயற்கை இதயத்தையே உடலுக்குள் பொருத்தி செயல்பட வைகக் முடியும்ங்கிறாங்க இது தொடர்பான ஆய்வில் ஈடுபட்டுள்ள விஞ்ஞானிகள்!
இதுலேர்ந்து என்ன தெரியுதுன்னா, செய்ற்கை இதயம், கல்லீரல், நுரையீரல் இப்படி நெறைய கண்டுபிடிச்சி, முழு செயற்கை மனிதனான மனிதன் 2.0/Human 2.0 கூடிய சீக்கிரம் உருவாக்கிடுவாங்க போலிருக்கு! ஆனா, இங்கே அது முக்கியமில்ல! மனிதனின் உடலில் செயலிழந்த போகும் இதயம் உள்ளிட்ட பல பாகங்களை செயற்கையாக உருவாக்குவதன்மூலம், அவை இல்லாமல் உயிரிழந்துபோகும் மனிதனுக்கு வாழ்க்கையை பரிசளிக்க முடியும் என்னும் கலியுக சாதனையே முக்கியமானது. நீங்க என்ன நெனக்கிறீங்கன்னு மறுமொழியில சொல்லுங்க!

முகப்பு

Related Posts Plugin for WordPress, Blogger...