ஜூனில் டீசல், சமையல் எரிவாயு விலை உயர்கிறது: மத்திய அரசு முடிவு

புது தில்லி, மே 26: பெட்ரோலுக்கு லிட்டருக்கு ரூ. 5 உயர்த்திய நிலையில் இப்போது டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலையையும் உயர்த்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி தலைமையில் நடைபெற உள்ள அதிகாரமளிக்கப்பட்ட குழுவினர் இதற்கான ஒப்புதலை அளிப்பார்கள் என்று தெரிகிறது. இக்குழுவினரது கூட்டம் ஜூன் 9-ம் தேதி நடைபெற உள்ளது. அப்போது இதுகுறித்து முடிவு செய்யப்படும் என்று பெட்ரோலிய அமைச்சக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலையை எந்த அளவுக்கு உயர்த்தலாம் என்பது குறித்து இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.டீசல் விலை லிட்டருக்கு ரூ. 4-ம், சமையல் எரிவாயு விலை சிலிண்டருக்கு ரூ. 20 முதல் ரூ. 25 வரையும் உயர்த்த இக்குழு ஒப்புதல் அளிக்கும் என்று தெரிகிறது.ரேஷன் கடைகளில் வழங்கப்படும் மண்ணெண்ணெய் விலையையும் உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இது குறித்தும் இக்கூட்டத்தில் பரிசீலிக்கப்படும்.கடந்த மே 11-ம் தேதி இக்குழுவினர் கூடுவதாக இருந்தது. ஆனால் மே 13-ம் தேதி ஐந்து மாநில சட்டப்பேரவை முடிவுகள் வெளியாக இருந்ததால் இக்கூட்டம் ரத்து செய்யப்பட்டது. அரசு எண்ணெய் நிறுவனங்களுக்கு டீசல் மற்றும் சமையல் எரிவாயு விற்பனை மூலம் நாளொன்றுக்கு ரூ. 500 கோடி இழப்பு ஏற்படுகிறது. இந்த இழப்பு தொடரக்கூடாது என்பதற்காக விலையை உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

முகப்பு

Related Posts Plugin for WordPress, Blogger...