தற்போது நடைபெற்ற தேர்தலில்  பிரசாரக் களத்தில், நடிகர், நடிகைகள் முடுக்கிவிடப்பட்டு,  “ நாடக  கொட்டகை ” யாகக் காட்சி தந்தது தேர்தல் களம். 
வடிவேலு, சிங்கமுத்து,  குமரிமுத்து,  குஷ்பூ, விந்தியா, ஆனந்தராஜ், எஸ்.வி.சேகர், குண்டு கல்யாணம்  போன்ற,  திரைத்துறையில் புறக்கணிக்கப்பட்டவர்கள், தேர்தல் பிரசார களத்தில்  முன்  நிறுத்தப்பட்டனர். தான் சார்ந்த கட்சிக்கு ஆதரவாக,  வாய்க்கு வந்தபடி  பேசி, மக்களை முகம் சுளிக்க வைத்தனர். இந்த பிரசார,  "பீரங்கி'களால், தான்  சார்ந்த கட்சியின் கொள்கைகளையும், எதிர்கால  சந்ததிக்கு, தன் கட்சி என்ன  நல்ல திட்டங்களை கைவசம் வைத்துள்ளது  என்பதையும் சொல்ல தெரியவில்லை. 
இலவச  திட்டங்களை ஆதரித்தும், மற்ற  கட்சித் தலைவர்களை வசைபாடுவதும் தான்  இவர்களின் இலக்காக இருந்தது. இவர்கள்  சென்ற இடங்களில் எல்லாம்,  பெருங்கூட்டம் கூடியது என்னவோ உண்மை தான். அந்த  கூட்டமெல்லாம், அவர்களுக்கு  ஓட்டாக மாறுமா அல்லது வேட்டாக மாறுமா என்பது,  தேர்தலுக்குப் பின்தான்  தெரியும்.