அமெரிக்கா லிபியாவிற்குள் நுழைந்தால் கடுமையான போர் நடக்கும் - கத்தாஃபி


:ஆயிரக்கணக்கான லிபிய மக்கள் நாட்டிற்காக தங்களது உயிரை தியாகம் செய்வார்கள். அதேவேளையில், தாக்குதலை நிறுத்தினால் அரசியல் சட்ட சீர்திருத்தம் குறித்து பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாக கத்தாஃபி தெரிவித்துள்ளார்.


"எங்களை மீண்டும் அடிமைகளாக மாற்றவா அவர்கள் திட்டமிடுகிறார்கள்? ஏற்கனவே இத்தாலியின் காலணி ஆதிக்க சக்திகள் எங்களை அடிமைகளாக்கினார்கள். அந்த பழையகாலம் மீண்டும் நிகழும் என்ற மோகம் வேண்டாம். அமெரிக்க ராணுவமோ நேட்டோ படையோ லிபியாவுக்குள் நுழைந்தால் கடுமையான போர் நடக்கும். தேவையென்றால் அல்காயிதாவுடனும் பேச்சுவார்த்தை நடத்த தயார்" என கத்தாஃபி தெரிவித்துள்ளார்.

முகப்பு

Related Posts Plugin for WordPress, Blogger...