ஜெயலலிதாவின் சொத்து மதிப்பு ரூ. 51.40 கோடி
திருச்சி, மார்ச் 24: திருச்சி ஸ்ரீரங்கம் தொகுதியில் போட்டியிட வியாழக்கிழமைவேட்பு மனு தாக்கல் செய்த அதிமுக பொதுச் செயலர் ஜெயலலிதா, தனது மொத்த சொத்து மதிப்பு  ரூ. 51.40 கோடி என பட்டியல் தாக்கல் செய்துள்ளார்.    வேட்பு மனுவுடன் அவர் அளித்த சொத்துப் பட்டியல்:   மொத்த சொத்துகள்: ரூ. 51.40 கோடி. அசையும் சொத்துகள்: ரூ. 13.03 கோடி. அசையா  சொத்துகள்: ரூ. 38.37 கோடி.   கையிருப்பு: ரூ. 25,000, வங்கி இருப்பு: இந்தியன் ஓவர்சீஸ் வங்கி-ரூ. 8,324,  மற்றொரு கணக்கு-ரூ. 48,850, பேங்க் ஆப் இந்தியா-ரூ. 17,668, மற்றொரு கணக்கு-ரூ.  3,43,137.   வாகனங்களின் மதிப்பு: அம்பாசிடர் கார்-ரூ. 10,000, எல்எம்வி ஆம்னி பஸ்கள்  (3)-ரூ. 6,25,000, எல்எம்வி கார்-ரூ. 2,00,000.   நிறுவனங்களில் பங்கு: ஸ்ரீ ஜெயா பதிப்பகம், சசி எண்டர்பிரைசஸ், கொடநாடு  எஸ்டேட், ராயல் வேலி ப்ளோரிடெக் எக்ஸ்போர்ட்ஸ் ஆகியவற்றின் உத்தேச மதிப்பீடு ரூ.  13,03,27,979.   விவசாய நிலங்களின் மதிப்பு: ஆந்திரம்-14.50 ஏக்கர் ரூ. 11,25,00,000; 3.43  ஏக்கர் ரூ. 5,00,000.   வணிகக் கட்டடங்களின் மதிப்பு: சென்னை போயஸ் கார்டனில் ரூ. 3,02,40,000;  ஹைதராபாதில் ரூ. 3,50,00,000; சென்னையில் ரூ. 4,00,000; சென்னை மந்தைவெளியில் ரூ.  35,00,000.   குடியிருப்புக் கட்டடங்களின் மதிப்பு: சென்னை போயஸ் கார்டன் வீடு ரூ.  20,16,00,000.   மற்ற விவரங்கள்: சொத்துக் குவிப்பு வழக்கால் போலீஸôரால் கைப்பற்றப்பட்ட  ஆவணங்களின்படி, நீதிமன்றக் கட்டுப்பாட்டில் இருக்கும் முதலீடுகள், வங்கி வைப்புத்  தொகை மதிப்பீடு சுமார் ரூ. 2.50 கோடி; நகைகள் மதிப்பு தெரியவில்லை.   தொழில்-விவசாயம், தண்டனை வழங்கப்பட்ட வழக்குகள்-எதுவும் இல்லை, நிலுவையிலுள்ள  வழக்குகள்-10, வருமான வரித் துறையில் தாக்கல் செய்த அறிக்கையின்படி 2009-2010-ம்  ஆண்டு வருமானம்-ரூ. 15,39,030. கடன்-எதுவும் இல்லை.
