கடந்த 2008-ஆம்  ஆண்டிலிருந்து இதுவரை 8 மீனவர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். அதாவது  2008-ஆம் ஆண்டு 5 மீனவர்களும்,
2010- ஆம் ஆண்டு ஒருவரும் 2011 ஆம் ஆண்டு  இதுவரை விஜயகுமார் உள்ளிட்ட இருவர்  கொல்லப்பட்டிருக்கிறார்கள்.
எப்போதும்   இல்லாத அளவிற்கு  மீனவர்  விஜயகுமாரின் மரணத்திற்கு பிறகு   அரசியல்வாதிகளிடம் ஏற்பட்டிருக்கும் எழுச்சியை பார்த்தல் நமக்கு   உடம்பெல்லாம் புல்லரிக்குதுங்க....மீனவர் மீது இதுவரை இல்லாத அக்கறை   இப்போதுமட்டும் ஏன் இவர்களுக்கு வந்தது என்று பார்த்தோமேயானால்   தேர்தல்....தேர்தல்...தேர்தலை தவிர வேறொன்றுமில்லை.
கொடநாட்டுக்கும் போயஸ்   கார்டனுக்கும்  யூ டர்ன் அடித்துக்கொண்டிருந்த  இருந்த ஜெயலலிதா  வேதாரண்யம் வந்து உதவியதற்கும்,
பி.ஜே.பி-யின்  வடநாட்டு தலைவி சுஷ்மா  சுவராஜ் வந்து உதவியதற்கும் தேர்தலை தவிர வேறு  என்ன காரணம் இருக்க முடியும்  நண்பர்களே?....மீனவர்கள் மீது இவர்களுக்கு  அக்கறையும் இல்லை, அனுதாபமும்  இல்லை. அரசியல் ஆதாயம் ஒன்றை தவிர....
இதோ...இவர்களின்   வரிசையில் இன்னொரு தலைவர்....அவர் வேறு யாருமில்லை நம் இளைய டாக்டரு  விஜய்.அவரை பற்றி  அதிகமதிகம் விமர்சனம் வலைப்பதிவுகளில்  வந்துள்ளதால்.....நான் நேராக  விஷயத்திற்கு போய் விடுகிறேன்.
சமீபத்தில் நாகையில் கூட்டம்போட்டு விஜய் பேசிய பேச்சின் ஒரு பகுதி....
இலங்கை  கடற்படையால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவது குறித்தும், மீனவர்களின்  நிலை  குறித்தும் நீங்கள் பிரதமர் மற்றும் முதல் அமைச்சருக்கு தந்தி அனுப்ப   வேண்டும். நாளை காலை நீங்கள் தந்தி அனுப்ப வேண்டும். -என்று தன  திருவாய்  மலர்ந்திருக்கிறார்.ஏனுங்கண்ணா....தந்தி அடிக்கவே இங்கு ஒரு  தலைவர் தபால்  துறையை குத்தகைக்கு எடுத்து வைத்திருக்கிறார். அவருக்கு  போட்டியா நீங்க  வேறா? வேறு ஏதாவது செய்ய சொல்லியிருக்கலாமே....என்னன்னா  இப்படி  பண்ணிட்டீங்க....நல்லவேளை ஓட்டுக்கேக்காம போனீங்களே?  
