234 தொகுதியும் வேண்டாம்; பாதி கொடுத்தால் போதும் - அடங்காத ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்





திருவாரூர் மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டம் கொரடாச்சேரியில் எஸ்.எம்.பி. துரைவேலன் தலைமையில் நடந்தது. 
கூட்டத்தின் முடிவில் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பத்திரிக்கையாளர்களை சந்தித்தார்.
அப்போது,   ‘’தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளை கொடுத்தாலும் காங்கிரஸ்காரர்கள் நிற்பார்கள் என்று கலைஞர் சொல்லிவருகிறார்.   எங்களுக்கு 234 தொகுதிகள் வேண்டாம்.  
திமுகவினர் மத்தியில் அமைச்சரவையில் அங்கம் வகிக்கிறார்கள்.   மாநில அமைச்சரவையில் காங்கிரஸ் அங்கம் வகிக்கக்கூடாதா?

மத்தியில் கூட்டாச்சி மாநிலத்தில் சுயாட்சி என்று கலைஞர் சொல்லிவருகிறார்.  இது போல தமிழில் எங்களுக்கு
பேசத்தெரியாது.   ஆனால் ஆட்சியில் பங்கு வேண்டும் என்று சொல்லுவோம்.

ஐவர் குழு பேசிக்கொண்டிருக்கிறது.   நல்லபடியாக முடியும்  என்று நம்புகிறோம். 
தமிழக வேலைவாய்ப்புகளில் ஒருவர் கூட காங்கிரஸ்காரர் கிடையாது.   ஓட்டுக்கு மட்டுமே காங்கிரஸ்காரர்கள் பயன்படுத்திக்கொள்கிறார்கள்.  இதற்கு காரணம் காங்கிரஸ் காரனே காங்கிரஸை கண்டுகொள்ளாததுதான்.
எலும்புதுண்டால் போட்டால் வாலாட்டும் காங்கிரஸூக்குள் இருக்கிறார்கள்.  தன்மானம் காக்கப்படும் அளவில்சீட்டுகள் வழங்கப்படவேண்டும்’’என்று கூறினார்.

முகப்பு

Related Posts Plugin for WordPress, Blogger...