பேங்க் இல் வேலை பார்பது ஹராமா ? ஹலாலா

'வட்டி உண்பவனையும், வட்டி கொடுப்பவனையும், அதற்காக கணக்கு
எழுதுபவனையும், அதற்கு சாட்சியம் கூறும் இருவரையும் அல்லாஹ் சபிக்கிறான்
என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: ஜாபிர் (ரலி),
நூல்: முஸ்லிம்)

வட்டியை வாங்கி உண்ணுபவன், அதனை உண்ணச் செய்பவன், அதற்காகக் கணக்கு
எழுதுபவன், அதற்கு சாட்சியம் கூறும் இருவர் ஆகியோரை நபி(ஸல்) அவர்கள்
சபித்துள்ளார்கள். இன்னும் அவர்கள் அனைவரும் குற்றத்தில் சமமானவர்கள்
என்றார்கள்.

அறிவிப்பவர் ஜாபிர்(ரலி) நூல்: முஸ்லிம்
பேங்க் இல் வட்டி கட்டுவதும் வாங்குவது ஹராம் என்று ஓரளவு மக்களுக்கு
தெரியும் ....ஆனால் பலருக்கு பேங்க் இல் வேலை பார்பது ஹராமா ? ஹலாலா ?
என்ற விஷயத்தில் சர்ச்சை...... சிலர் ஹராம் என்கின்றனர் சிலர் ஹலால்
என்கின்றனர் .....இதற்கு இஸ்லாத்தின் உண்மை நிலை என்ன என்பதை குழும
சகோதர்கள் இதை பற்றி தெரிந்தவர்கள் குர்ஆன் மற்றும் ஹதீஸ் மூலம் தெளிவு
படுத்தவும்.....
வட்டி கொடுப்பவன் கொடுத்தால் தான் வட்டி வாங்குபவன் அதை வாங்குவான். எனவே
வட்டி வாங்குபவன், வட்டி கொடுப் பவன் ஆகிய இருவருமே குற்றவாளிகள் என
இஸ்லாம் கூறுகிறது. எழுதுபவன் சாட்சியானவர்கள் ஆகியோர் இவர்கள் செய்யும்
குற்றத்திற்குத் துணை போனதால் அவர்களையும் இஸ்லாம் குற்றவாளிக் கூண்டில்
ஏற்றுகிறது. மேலும் தெரிந்து கொண்டே அக்குற்றத்தைச் செய்வதால் அனைவரும்
குற்றத்தில் சமம் என்றும் தீர்ப்பளிக்கின்றது இஸ்லாம். எனவே வட்டி
வாங்கக் கூடாது என்பது மட்டுமல்லாமல் வட்டிக்காக எவ்விதத்திலும் துணையும்
நிற்கலாகாது என்பதையும் மனதில் அழமாகப் பதித்திட வேண்டும்.

இன்று வங்கிகளில் வேலை செய்யும் முஸ்லிம்களைப் பார்க் கின்றோம். அவர்கள்
இச்சட்டத்தைப் பற்றி நினைப்பது கூட இல்லை போலும். எனவேதான் அவர்கள்
அவ்வேலையைச் செய்து அழிவைத் தேடிக் கொண்டிருக்கிறார்கள். இன்றைய உலகில்
வட்டியில்லா வங்கிகள் ஓரிரு இடங்களைத் தவிர்த்து எங்கும் இல்லை. எனவே
வட்டி முறையைக் கொண்டு இயங்கும் வங்கிகளில் வேலை பார்ப்பதை இஸ்லாம் தடை
செய்கிறது. எங்கேனும் வட்டியை அடிப்படையாகக் கொண்டு இயங்காத வங்கிகள்
இருக்குமானால் அதில் வேலை செய்யலாம். இஸ்லாம் அதைத் தடுக்கவில்லை. வட்டி
முறையில் இயங்கும் வங்கிகளில் வேலை பார்க்கும் உயர் அதிகாரி முதல்
வட்டித் தொடர்பான வேலை செய்யும் அனைவரும் குற்றத்தில் சமமானவர்கள் தான்.
எனவே வட்டி முறையில் இயங்கும் வங்கிகளில் எவ்விதப்பணியும் மேற்கொள்ளக்
கூடாது என்பது இஸ்லாமியச் சட்டமாகும்.

முகப்பு

Related Posts Plugin for WordPress, Blogger...