உணவே மருந்து : குளிர்பானங்கள் குடிக்கலாமா ?


உணவே மருந்து :   குளிர்பானங்கள் குடிக்கலாமா ?


 

  இப்போது குளிர்பானங்கள் அருந்துவது நாகரிமாகி விட்டது. இரண்டு பேர் சந்தித்தால் அவர்கள் கையில் கண்டிப்பாக கூல்டிரிங்க்ஸ் இருக்கும். குறிப்பாக விருந்தினர்களை நன்கு மதித்ததன் அடையாளமாகப் பாட்டில் பானங்களையே வழங்குகிறார்கள். அதுவே விருந்தினருக்கும் மகிழ்ச்சியை அளிக்கிறது. மனதுக்கு மகிழ்ச்சியைக் கொடுத்தாலும் உண்மையில் இந்தக் குளிர்பானங்கள் உடலுக்குக் கேடுதான் விளைவிக்கிறது. இந்தக் குளிர்பான வகைகள் அனைத்தும் பாட்டிலில், டின்னில் நீண்ட நாள்கள் கெட்டுப் போகாமல் பாதுகாப்பாக இருக்க பென்ஸாயிக் என்ற அமிலமே பயன்படுத்தப்படுகிறது.



  பென்ஸாயிக் என்ற இந்த அமிலம் ஆஸ்துமா, பரு, தோலில் வேனல் கட்டி, வெடிப்பு முதலியவற்றை உண்டாக்குகிறது. கூடவே எதிலும் குற்றம் கண்டுபிடிக்கும் மனப்பான்மையையும் உண்டாக்குகிறது. குளிர்பானங்களைப் பதனப்படுத்துவதுடன் எலுமிச்சைப் பானங்கள் கருப்பு நிறமாக மாறி விடாமல் இருக்கவும் சல்ஃபர் டை ஆக்சைடு சேர்க்கப்படுகிறது. இது பானங்களில் உள்ள நறுமணம் ஆவியாகிப் போய்விடாமல் பாதுகாக்கிறது. இந்த சல்ஃபர் டை ஆக்சைடு ஒரு நச்சு முறிவு மருந்து தான். நலமாக உள்ள ஒருவர் தொடர்ந்து குளிர்பானம் அருந்தினால் மந்தநிலை, தெளிவற்ற பார்வை, தோலில் வெடிப்பு, வீக்கம், சோர்வு, இதயத்தில் ஒருவித இறுக்கம், அதிர்ச்சி, திடீர்க்கோபம், அதிர்ச்சியில் இறப்பு போன்றவை ஏற்படுகின்றன. அடிக்கடி பானம் அருந்துகிறவர்கள் தங்களுக்கு அடிக்கடி சோர்வும், விரக்தியும், வெறுப்பும் உள்ளதா என்பதைப் பரிசோதித்துக்கொள்க. அப்படி இருந்தால் ஆரோக்கியமான உடலில் பானம் மூலம் சேர்ந்த சல்ஃபர் டை ஆக்சைடே காரணம்.


  பானங்கள் நறுமணமாக இருக்க காஃபைன் சேர்க்கப்படுகிறது. கோலா பானங்களில் மூன்றில் ஒரு பங்கு என்ற அளவில் காஃபைன் சேர்க்கப்படுகிறது. இந்த அளவு, நாம் தினமும் அருந்தும் காஃபி, தேநீர் போன்றவற்றில் உள்ள அளவிற்குச் சமம். காஃபைன் உண்மையில் போதை தரும் ஒரு மருந்துதான். இது அதிகமானால் மத்திய நரம்பு மண்டலம் அடிக்கடி ஊக்குவிக்கப்படுவதால் விரைவில் தளர்ச்சியும் வந்துவிடுகிறது. குளிர்பானம் ஒரு முறை சாப்பிட்டதும் வரும் புத்துணர்ச்சி நாம் ஒரு நாளில் மூன்று கப் காஃபி அருந்தியதற்குச் சமம். ஒரு நாளைக்கு இரண்டு, மூன்று பாட்டில்கள் அருந்தினால் மத்திய நரம்பு மண்டலம் பலவீனம் அடையும்.


  இதனால் தூக்கமின்மை, நரம்புக்கோளாறு, எரிச்சல், வயிற்றுப்பொருமல், மனக்குழப்பம், இதயம் வேக வேகமாகத் துடித்து ஒருவிதப் பதற்றம் முதலியன ஏற்படுகின்றன. சிறுநீர்ப்பைகள், வயிறு முதலியவற்றில் புற்றுநோய், இரத்தக்கொதிப்பு, மேலும் ஆறுவிதமான புற்றுநோய்கள் அடிக்கடி கலர் அருந்துகிறவர்களுக்கு வருகிறது. அடிக்கடி இளவயதில் பானம் அருந்தும் தம்பதிகளுக்குப் பிறவியிலேயே குறைபாடு உள்ள குழந்தைகள் பிறந்துள்ளன.


  ஆரஞ்சு மற்றும் மஞ்சள் நிறத்திலும் குளிர்பானங்கள் தயாரிக்கப்படுகின்றன. இந்த டார்ட்ராஜைன் என்ற பானத்தை நார்வே, பின்லாந்து ஆகிய நாடுகள் தடை செய்துள்ளன. இந்த வண்ணச் சாயம் தோலுக்கு ஒவ்வாமையைத் தந்து, உடலில் வீக்கம், மூக்கு ஊற்றுதல் (கடுமையான ஜலதோஷம்) கண்கள் சிவப்பாக மாறுதல் ஆகிய விளைவுகளை ஏற்படுத்துகின்றன.


  சிவப்பு நிறபானங்கள் அமெரிக்கா, கனடா ஆகிய நாடுகளில் தடை செய்யப்பட்டுள்ளன. ஸாஃப்ட் டிரிங்க் பானங்களில் நிறத்துக்குச் சேர்க்கப்படும் இந்தச் சிவப்புச் சாயம் புற்றுநோய், ஒவ்வாமை,

சாப்பிட்ட உணவை அல்லது தயாரித்த உணவை நஞ்சாக மாற்றி விடுகிறது. எனவே அடுத்த முறை குளிர்பானம் அருந்த நினைக்கும் போது அந்த எண்ணத்தைக் கைவிட்டு, இயற்கையான பழச்சாறுகள், இளநீர் போன்றவற்றை அருந்துங்கள். உடலுக்கு நன்மை செய்யும் பானங்கள் இவை மட்டுமே !

 

நன்றி : இனிய திசைகள் ஏப்ரல் 2013

 

பாபர் மஸ்ஜித் வழக்கு தீர்ப்பா ? கட்டப்பஞ்சயத்தா ???

அரேபியாவில் ஆறுகள் ஓடுமா……??

Asalamu Alaikum Warh,  


Dr. Alfred Coroz உலகின் தலைசிறந்த புவியியல் அறிஞருள் ஒருவர். அவரிடம் அரேபியாவின் புவிவள நிலமையினைக் குறித்துக் கேட்கப்பட்டது.

"அரேபியா எப்போதேனும் பசுமையாக ஆறுகள் நிரம்பி இருந்ததுண்டா?" .
எதிர்பாராத ஆனால் நேர்மறையான பதில் அவரிடமிருந்து வந்தது- "ஆம்'! பனியுகத்தில் அவ்வாறு இருந்தது".

அடுத்து ஒரு கேள்வி அவர் முன் வைக்கப்பட்டது:
"எதிர்காலத்தில் மீண்டும் அரேபியாவின் பாலைவனம் பசுமையாகும் வாய்ப்புகள் ஏதேனும் உண்டா…….?" 


ஆச்சர்யமூட்டும் வகையில் அவரிடமிருந்து பதில் வந்தது-

"ஆம்! அரேபியா மீண்டும் பசுமையாக செழித்துவிளங்கவும் ஆறுகள் ஓடவும் செய்யும் என்பது அறிவியல் பூர்வமான எதிர்கால உண்மை தான்!"

ஆச்சர்யம் பொங்க மீண்டும் அவரிடம் கேட்கப்பட்டது: "எப்படி சொல்கிறீர்கள்……?"

"புதிய பனியுகம் நிஜத்தில் தொடங்கி விட்டது. வடதுருவ பனிப்பாறைகள் உருகத் தொடங்கி விட்டன. அவை அரேபிய தீபகற்பம் நோக்கி நகரத்தொடங்கியுள்ளன. இதன் அறிகுறிகளே குளிர்காலங்களில் ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் நன்குதென்படுகின்றன. இது அறிவியற்பூர்வமான உண்மை"

"இது குறித்து 1400 ஆண்டுகளுக்கு முன்னரே முஹம்மது நபி(ஸல்) அறிவித்து விட்டதை அறிவீர்களா…?

ஒரு நபிமொழி (ஹதீஸ்) இவ்வாறு தெரிவிக்கிறது:

அரேபியா மீண்டும் மேய்ச்சல் நிலங்களாகவும் – ஆறுகள் ஓடக்கூடியதாகவும் ஆகாத வரை இறுதி நாள் (உலக முடிவு நாள்) ஏற்படாது.(Sahih Muslim)

இப்போது சொல்லுங்கள்: 'நபி முஹம்மதுவுக்கு அரேபியா சோலைகளாக ஆறுகளுடன் இருந்ததை யார் அறிவித்திருப்பார்கள்..?

பேராசிரியர் சிறிது யோசனைக்குப்பின் சொன்னார்: "ரோமானியர்களாக இருக்கலாம்"

"நல்லது! மீண்டும் உலக முடிவு நாளுக்கு முன் அரேபியா மேய்ச்சல் நிலமாகவும் ஆறுகள் ஓடக்கூடியதாகவும் ஆகும் என்பதை முஹம்மது நபி(ஸல்) அவர்களால் எப்படி கூற முடிந்தது.?"

உண்மையை எதிர்கொண்ட Dr. Coroz தைரியமாகவும் வெளிப்படையாகவும் சொன்னார்:

"அது நிச்சயம் ஒரு தெய்வீக வெளிப்பாட்டினால் தான் இருக்க முடியும் என்பதில் சந்தேகமில்லை.."

மேலும் அவர் சொன்னவை:

"ஒரு எளிய மனிதனுக்கு குர்ஆன் எளிய விஞ்ஞானத்தையே கூறுகிறது. 1400 ஆண்டுகளுக்கு முன் நிரூபிக்க வழியின்றி சாதாரணமாக கருதப்பட்ட அதன் விஞ்ஞான கருத்துக்களை இன்று தான் விளங்க வழியுண்டு என்பது உண்மை தான்.

அப்படித்தான் புவியின் தோற்றம் புவியின் அமைப்புகளை குறித்து குர்ஆனில் கூறப்பட்டுள்ளவைகளை நான் பார்க்கிறேன்.'

Dr.Coroz அவர்கள் விருப்பு வெறுப்பற்று பார்த்த
பார்வையினால் கிடைத்த நிஜம் இது.

"நிச்சயமாக (வேதமாகிய) இது, உண்மையானது தான் என்று அவர்களுக்கு தெளிவாகும் வரையில்,(உலகின்) பல பாகங்களிலும், அவர்களிலும் நம்முடைய அத்தாட்சிகளை அவர்களுக்கு நாம் காண்பிப்போம்; (நபியே!) உமது இரட்சகனுக்கு நிச்சயமாக அவன் ஒவ்வோரு பொருளின் மீதும் (அதுபற்றி நன்கறிந்து) சாட்சியாக இருக்கிறான் என்பது போதுமானதாக இல்லையா?" (அல் குர்-ஆன்: 41:53)

(பி.கு: இக்கட்டுரையை இங்கு பதிவதன் நோக்கம்: 'கோடானுகோடி மக்களால் ஏற்கப்பட்டு பின்பற்றப்படும் குர்ஆனை 'இஸ்லாமிய எதிரிகளின் துணைக்கொண்டு கொச்சைப்படுத்திப் பார்த்து தன் வக்கிர மனத்தை திருப்திப்படுத்திக்கொள்பவர்கள் இனியேனும் 'வெறுப்புணர்வை' கழற்றி வைத்துவிட்டு 'விஞ்ஞானப் பார்வையோ (அ) குறைந்தபட்சம் நேர்மறை பார்வையோ அணிந்து அதைப் பார்க்கட்டும் என்று தான்).

 
__

குலுங்கிய அமீரகம்




ஈரான் நிலநடுக்கம், குலுங்கிய அமீரகம் (காணொளி இணைப்பு)

துபாய் : ஈரானின் அணு உலையால் வளைகுடா நாடுகள் பயப்படுகிறதோ இல்லையோ நிச்சயம் ஈரான் என்றவுடன் நில நடுக்கத்தை கண்டு அஞ்சத் தான் செய்கின்றன வளைகுடா நாடுகள்.

வளைகுடாவின் வசந்தம் என அழைக்கப்படும் ஐக்கிய அரபு அமீரகத்தில் இவ்வாரம் மட்டும் இரண்டு முறை ஈரான் நில நடுக்கத்தின் அதிர்வுகளால் பாதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த செவ்வாய்கிழமை அன்று ஈரானின் அணு உலை அருகே ஏற்பட்ட நில நடுக்கம் ரிக்டர் ஸ்கேலில் 6.3 ஆக பதிவானது. கடந்த செவ்வாயன்றே துபாயில் பல இடங்களில் அதன் அதிர்வுகள் தெரிந்தன. குறிப்பாக துபாயின் முக்கிய வானாளவிய கட்டிடங்கள் இருக்கும் ஷேக் ஜெயித் சாலையில் மக்கள் கட்டிடங்களை விட்டு வெளியே பதற்றத்துடன் விரைந்தனர்.

காணொளி


இன்றும் 7.8 ஆக ரிக்டர் ஸ்கேலில் பதிவான நில நடுக்கத்தின் அதிர்வுகள் அமீரகத்தில் சுமார் 2.45க்கு மணிக்கு உணரப்பட்டன. இத்தடவை நில நடுக்கத்தின் அதிர்வுகள் துபாய் மட்டுமின்றி அபுதாபி, ஷார்ஜா, புஜைரா என அமீரகத்தின் மற்ற பகுதிகளிலும் உணரப்பட்டன. துபாயின் மீடியா சிட்டி, ஷேக் ஜெயித் சாலை, அபுதாபி சிட்டி, ஷார்ஜாவில் உள்ள முக்கிய நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை உடனே வெளியேற்றின. பின் சில நிறுவனங்கள் அதிர்வால் சிதறிய கண்ணாடி துகள்கள் பாதிக்க கூடும் என்ற அச்சத்தில் அவர்களை மீண்டும் அலுவலத்திற்குள் வரவழைத்தனர்.

அபுதாபியில் உள்ள காலிதியா, எலக்ட்ரா, ஹம்தான் மற்றும் அல் பலாஹ் பகுதிகளில் உள்ள குடியிருப்பு உரிமையாளர்கள் உடனே குடியிருப்போரை வெளியேற்ற செய்து பின் தகுந்த ஆலோசனைகள் கூறி மீண்டும் இல்லங்களுக்கு அனுப்பினர். நில நடுக்கம் சுமார் 30 முதல் 40 விநாடிகள் உணரப்பட்டதாக பலர் கூறினார். ஆனால் சிலர் நிலநடுக்கத்தை உணர்ந்ததாகவும் வேறு சிலர் அப்படி எதுவும் உணரவில்லை என்றும் தெரிவித்தனர்.

நில நடுக்க அதிர்வு இந்நேரம் சார்பாக சிலரிடம் தொலைபேசியில் கருத்து கேட்டது. புஜைராவை சார்ந்த முகம்மது என்பவர் தாம் கடுமையான உலுக்கலை உணர்ந்தவுடன் வீட்டை விட்டு வெளியேறியதாகவும் வெளியில் செடி, கொடிகளை யாரோ இழுத்து அசைப்பது போன்று தெரிந்ததாக கூறினார். ஷார்ஜாவை சார்ந்த ராஜேந்திரனோ சிலர் சொன்ன பிறகு தான் நிலநடுக்க அதிர்வு குறித்து தெரியவந்ததாக கூறினார்.

நிலநடுக்க அதிர்வு குறித்து கருத்து தெரிவித்த துபாயை சார்ந்த உவைஸ் இது வரை தான் துபாயில் சந்தித்த நில அதிர்வுகளில் இது கடுமையானது என்று தெரிவித்தார். அபுதாபியை சார்ந்த ஸ்டீபன் நிலநடுக்க அதிர்வின் போது ஏற்பட்ட தலைவலி இன்னும் தீரவில்லை என்றும் ரகுமான் என்பவர் தம் தற்காலிக தங்குமிடத்தை யாரோ உலுக்குவது போன்று உணர்ந்ததாக கூறினார்.

வாங்க ஜிஹாதி ஆகலாம்!



குர்ஆன் மற்றும் நபிவழியின் அடிப்படையில் இஸ்லாமிய அறநெறிகளைப் போதிக்கும் கல்விக் கூடங்களுக்கு "மதரஸா" என்று பெயர். இதர கல்விக் கூடங்களைப் போன்றே மதரஸாக்களிலும் கல்வி போதிக்கப்படுகிறது. ஆனால் மேற்கண்ட இஸ்லாமிய அடிப்படைகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதோடு உலகக் கல்வி (conventional curriculum) திட்டத்தையும் போதிக்கும் மதரஸாக்களும் நடைமுறையில் உள்ளன.

முகப்பு

Related Posts Plugin for WordPress, Blogger...