தேர்தலில் போட்டியிட வாய்ப்பில்லை: தீக்குளிக்க முயன்ற ஆதிமுக முன்னாள் கவுன்சிலர்


 
உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட சீட் கிடைக்காத ஆத்திரத்தில், கோவில்பட்டியில், நேற்று அ.தி.மு.க., மாஜி கவுன்சிலர் தீக்குளிக்க முயன்றார்.
கோவில்பட்டி, புதுக்கிராமத்தைச் சேர்ந்தவர் சுல்தான்,55. தூத்துக்குடி மாவட்ட அ.தி.மு.க., சிறுபான்மைப் பிரிவு துணைச் செயலரான இவர், கோவில்பட்டி நகராட்சியில், இக்கட்சி சார்பில் மூன்று முறை, 13வது வார்டு கவுன்சிலராக இருந்துள்ளார்.
இம்முறை, இந்த வார்டு பெண்களுக்கு ஒதுக்கப்பட்டது. இதனால், தனக்கு நகராட்சித் தலைவர் வேட்பாளர் வாய்ப்பு கேட்டும், மனைவி நூர்ஜகானிற்கு 13வது வார்டு கவுன்சிலராக போட்டியிட வாய்ப்பு கேட்டும், கட்சியிடம் விண்ணப்பித்திருந்தார். ஆனால், இருவருக்கும் சீட் தரப்படவில்லை.
தீக்குளிக்க முயற்சி: ஆத்திரமடைந்த சுல்தான், நேற்று காலை கோவில்பட்டி நகர அ.தி.மு.க., அலுவலகத்திற்கு, மண்ணெண்ணெயுடன் வந்தார்.
கட்சியில் உண்மையான விசுவாசிகளுக்கு போட்டியிட வாய்ப்புத் தராமல், மாற்றுக் கட்சிக்குப் பணி செய்தவர்களுக்கு, சீட் தரப்பட்டுள்ளதாகக் கூறி, அதைக் கண்டித்து, தன் உடலில் மண்ணெண்ணெயை ஊற்றி, தீக்குளிக்க முயன்றார்.
அங்கிருந்த கட்சியினர் உடனடியாக அவரைத் தடுத்தனர்.

முகப்பு

Related Posts Plugin for WordPress, Blogger...