(FEDERATION OF SUNNATH WAL JAMA'ATH MASJIDS & ASSOCIATIONS)
-------------------------------------------------------------------------------------------------------------
தமிழ் நாடு முஸ்லிம் தொண்டு இயக்கத்தின் சார்பில் 17-09-2011 சனி அன்று
திருச்சியில் தமிழகம் தழுவிய சுன்னத் வல் ஜமாஅத் ஆலோசனைக் கூட்டம்
நடைபெற்றது. தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலிருந்தும் சங்கைக்குரிய
உலமாப் பெருந்தகையினர், ஜமாஅத் நிர்வாகப் பொறுப்பாளர்கள், இயக்கங்களின்
பொறுப்பாளர்கள் சுமார் 300 பேர் கலந்துகொண்டார்கள். தமிழ் மாநில ஜமாஅத்துல்
உலமா சபையின் துணைத் தலைவரும் சென்னை மாவட்ட ஜமாஅத்துல் உலமா
தலைவரும் தமிழ் நாடு முஸ்லிம் தொண்டு இயக்கத்தின் உலமா அணிச் செயலாளருமான
மெளலவி அல்ஹாஜ் ஓ.எஸ்.எம். முஹம்மது இலியாஸ் காசிபி நிகழ்வின் ஆரம்பத்தில்
கிராஅத்தும் இறுதியில் சிறப்புத் துஆ வும் ஓதினார்.
நிகழ்விற்குத் தொண்டு இயக்க மாநிலத் தலைவர் அல்ஹாஜ் கே.ஏ. மன்சூர் தலைமை
தாங்கினார். தொண்டு இயக்க மாநிலப் பொருளாளரும் வக்ஃபு வாரிய உறுப்பினரும்
சென்னை மாவட்ட சுன்னத் வல் ஜமாஅத் பள்ளிவாசல்களின் தலைவருமான
அல்ஹாஜ் எம். சிக்கந்தர் வரவேற்புரையாற்றினார். கூட்டத்தின் நோக்கத்தைத்
தொண்டு இயக்க மாநிலப் பொதுச் செயலாளர் பேராசிரியர் டாக்டர் சேமுமு. முகமதலி
எடுத்துரைத்தார். திருவள்ளூர் மாவட்ட அரசு காஜி
அப்துல்லாஹ் பாகவி, அதிரை முஹம்மது யூசுஃஃப் பாகவி, பெரம்பலூர் சதக்கத்துல்லாஹ்
தாவூதி, செங்கல்பட்டு மாவட்டம் பி.எஸ். ஷாஹுல் ஹமீது சிராஜி, மண்ணச்சநல்லூர்
முஹம்மது யூசுஃப் காசிமி, கோவை முஹம்மது இப்ராஹிம் பாகவி, காங்கேயம்
சையது முஹம்மது அலி, சேலம் அப்துல் கலீம் சிராஜி, சங்ககிரி அப்துல் மாலிக்,
லால்குடி முஹம்மது இலியாஸ் முதலிய உலமாப் பெருந்தகையினரும்,
செங்கோட்டை அப்துர் ரஹ்மான், திண்டுக்கல் சேக்தாவூது, தூத்துக்குடி சேக்னா லெப்பை
கடலூர் முஹம்மது இத்ரிஸ், திருப்பூர் முஹம்மது ஜக்கிரியா, திருச்சி ஹாஷிம்,
ஏ.டபிள்யூ. ஜாஹின்ஷா முதலிய ஜமாஅத் மற்றும் இயக்கங்களின் பொறுப்பாளர்களும்
கருத்துகள் வழங்கினார்கள்.
தமிழ் மாநில ஜமாத்துல் உலமாத் தலைவர் அல்ஹாஜ் மெளலவி ஏ. இ. அப்துர்
ரஹ்மான், தமிழ் மாநில ஜமாஅத்துல் உலமா முன்னாள் தலைவர் அல்ஹாஜ் மெளலவி
ஓ.எம்.அப்துல் காதிர் பாகவி, திருச்சி மெளலவி அல்ஹாஜ் முஃப்தி ரூஹுல் ஹக்,
தஞ்சை மெளலவி தேங்கை ஷறபுத்தீன், சென்னை முஹம்மது மன்சூர் காசிபி
முதலியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். தொண்டு இயக்கச் செயலாளர் ஏ. அப்துல்
கரீம் நன்றி கூறினார்.
சுன்னத் வல் ஜமாஅத் கூட்டமைப்புக் கூட்டத் தீர்மானங்கள்
-------------------------------------------------------------------------------------------------------------------
17-09-2011 அன்று திருச்சியில் தமிழ் நாடு தொண்டு இயக்கத்தின் சார்பில்
நடைபெற்ற மாநில சுன்னத் வல் ஜமாஅத் ஆலோசனைக் கூட்டத்தில்
ஏகமனதாக நிறைவேறிய அமைப்புச் சம்பந்தமான தீர்மானங்கள்:
1) உலகம் முழுவதிலுமுள்ள தமிழகத்தைச் சார்ந்த சுன்னத் வல் ஜமாஅத் மக்கள்
அனைவரையும் ஒருங்கிணைக்கும் வகையில் சுன்னத் வல் ஜமாஅத் பள்ளிவாசல்கள்,
நிர்வாகங்கள், இயக்கங்கள், கல்வி அறக்கட்டளைகள், சமூக நல அமைப்புகள்
ஒருங்கிணைத்து "FEDERATION OF SUNNATH WAL JAMA'ATH MASJIDS AND
ORGANISATIONS" - "சுன்னத் வல் ஜமாஅத் பள்ளிவாசல்கள் மற்றும்
இயக்கங்களின் கூட்டமைப்பு” என்ற பெயரில் இயங்குவது எனத் தீர்மானிக்கப்படுகிறது.
2) தமிழ் மாநில ஜமாஅத்துல் உலமாத் தலைவர், செயலாளர், பொருளாளர், மாவட்டப்
பொறுப்பாளர்கள் உள்ளிட்ட சங்கைக்குரிய உலமாப் பெருந் தகையினர் 30 பேர்
கொண்ட நெறியாளர்கள் குழுவும், தமிழகம் தழுவிய அளவில் 30 பேர் கொண்ட
புரவலர் குழுவும் ஏகமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டன.
அல்ஹாஜ் கே.ஏ.மன்சூர், மெளலவி அல்ஹாஜ் ஓ.எம். அப்துல் காதிர் பாகவி,
அல்ஹாஜ் மெளலவி ஓ.எஸ்.எம். முஹம்மது இலியாஸ் காசிமி, அல்ஹாஜ் எம்.
முஹம்மது சிக்கந்தர், மெளலவி பி.எஸ். ஷாஹுல் ஹமீது சிராஜி, அல்ஹாஜ்
ஜி.கே. பாஷா, அல்ஹாஜ் ஒய். அப்துர் ரஜாக், கோவை மெளலவி அல்ஹாஜ்
இப்ராஹிம் பாகவி, திருப்பூர் அல்ஹாஜ் முஹம்மது ஜக்கிரியா, மேலை நாசர்,
அல்ஹாஜ் எஸ். முஹம்மது ரஃபி ஆகியோர் கொண்ட அமைப்புக் குழு
தேர்ந்தெடுக்கப்பட்டது.
பேராசிரியர் டாக்டர் சேமுமு. முகமதலி கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளராகத்
தேர்ந்தெடுக்கப்பட்டார்.
3) இலட்சக்கணக்கான மக்கள் பங்கேற்கும் மாபெரும் மாநில சுன்னத் வல் ஜமாஅத்
மாநாட்டினை இன்ஷா அல்லாஹ் வரும் ஜனவரியில் திருச்சியில் நடத்துவதெனத்
தீர்மானிக்கப்பட்டது.
17-09-2011 அன்று திருச்சியில் தமிழ் நாடு முஸ்லிம் தொண்டு இயக்கச்
சார்பில் கூடிய தமிழகம் தழுவிய சுன்னத் வல் ஜமாஅத் கூட்டத்தில்
ஏகமனதாக நிறைவேற்றப் பெற்ற அரசு சம்பந்தமான தீர்மானங்கள்
---------------------------------------------------------------------------------------------------------------------------------------
1) தமிழகத்தில் முஸ்லிம்களுக்கு அளிக்கப்பட்டுள்ள 3.5 விழுக்காடு இட ஒதுக்கீடு
மிகவும் குறைவாக இருப்பதால் கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் முஸ்லிம்களுக்குரிய
பிரதிநிதித்துவம் போதுமானதாக இல்லை. எனவே 3.5 விழுக்காட்டை உடனடியாக
7 விழுக்காடாக உயர்த்தித் தர வேண்டுமெனத் தமிழக அரசை சுன்னத் வல் ஜமாஅத்
கூட்டமைப்பு மிகவும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.
2) இந்திய அளவில் முஸ்லிம்களுக்கு 10 விழுக்காடு இட ஒதுக்கீட்டை உடனடியாக
வழங்கவேண்டுமெனக் கூட்டமைப்பு மத்திய அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.
3) பன்னெடுங் காலமாக வழக்கத்தில் உள்ள முஸ்லிம்களுடைய திருமணப் பதிவு முறையே
தொடரும் வகையில் அதனை ஏற்றுத் தகுந்த ஆணை பிறப்பிக்க சுன்னத் வல் ஜமாஅத்
கூட்டமைப்பு தமிழக அரசை வலியுறுத்திக் கேட்டு கொள்கிறது. முஹல்லா மற்றும்
அரசு காஜிகளின் திருமணச் சான்றிதழை பாஸ்போர்ட் அலுவலகம் உள்ளிட்ட மத்திய-
மாநில அரசுத் துறை , அரசுத் துறை சார்ந்த மற்றும் தனியார் துறை அலுவலகங்கள்
ஏற்றுக் கொள்ளும் வகையில் மத்திய- மாநில அரசுகள் தக்க நடவடிக்கைகளை எடுக்க
சுன்னத் வல் ஜமாஅத் கூட்டமைப்பு வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.
4) தமிழகத்தில் 95 விழுக்காட்டிற்கும் மேலாக சுன்னத் வல் ஜமாஅத்தைச் சார்ந்த முஸ்லிம்
மக்கள் வாழ்ந்து வருகின்றார்கள். 95 விழுக்காட்டிற்கும் அதிகமான சுன்னத் வல் ஜமாஅத்
சார்ந்த பள்ளிவாசல்கள், தர்ஹாக்கள், நிர்வாக அமைப்புகள், இயக்கங்கள் செயல்பட்டு
வருகின்றன. எனவே இதனை உணர்ந்து தமிழ் நாடு வக்ஃபு வாரியத் தலைவர்,
தமிழ் நாடு ஹஜ் கமிட்டித் தலைவர் முதலான பொறுப்புகளுக்கு சுன்னத் வல் ஜமாஅத்தைச்
சார்ந்தவர்களே தேர்ந்தெடுக்கப்படும் வகையில் ஆவன செய்யவேண்டுமெனத்
தமிழக அரசை சுன்னத் வல் ஜமாஅத் கூட்டமைப்பு மிகவும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.
--
Regards
حسن محمد
--
திருநரையுர் ஜமாத்
“நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் (அல்லாஹ்வை) அஞ்சி நடப்பதற்காக உங்களுக்கு முன்பிருந்தோர் மீது விதியாக்கப்பட்டது போன்று உங்கள் மீதும் நோன்பு விதியாக்கப்பட்டுள்ளது.” (2:183