புனித ரமளான் மாதத்தில் இபாத்தத்துக்களில் கவனம் செலுத்திவரும் இவ்வேலையில், ஒரு முக்கியமான ஒரு சொற்பொழிவை இங்கு உங்கள் அனைவருக்கும் பகிர்ந்துக்கொள்வது சரியான தருனம் இதுவே என்று கருதுகிறோம். நம்முடைய உயிருனும் மேலான முஹம்மது நபி ஸல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் தங்களின் வாழ்நாட்களில் நடந்த சில நிகழ்வுகள் நமக்கு எத்தனை பேருக்கு தெரியும்.
இன்றைய காலத்தில் நம் பெண்கள் போலித்தனமான சினிமாக்கள், டீவி சீரியல்களை பார்த்து அழுதுகொண்டிருப்பதை நாம் அன்றாடம் ஒவ்வொரு விடுகளில் காணமுடிகிறது. எது எதுக்கெல்லாம் அழுவது என்று விவஸ்தையில்லாமல் போய்விட்டது இந்த நவீன விஞ்ஞான வளர்ந்த உலகில். இந்த சொற்பொழிவை கவனமாக கேளுங்கள், நம்முடைய நபிகளார் அவர்கள் எந்த எந்த நிகழ்வுகளில் அழ நேரிட்டது என்று கேளுங்கள், இதை கேட்ட பின்னராவது போலித்தனத்தை பார்த்து அழுவதை விட்டுவிட வல்ல அல்லாஹ் நல்லருள் புரிவானாக.
இந்த அற்புதமான சிந்தனையை தூண்டும் சொற்பொழிவை நிகழ்த்திய மவ்லவி ஜமால் முஹம்மது மதனி அவர்களுக்கு அல்லாஹ் நல்லருள் புரிவானாக. இந்த உரையின் ஒலியை வெளியிட்ட இஸ்லாம் கல்வி இணையதள சகோதரர்களுக்கும் அல்லாஹ் நல்லருள் புரிவானாக