அமெரிக்காவில் உள்ள நியூயார்க்கில் ஆண்டு தோறும் அகில உலக சாப்பாட்டு ராமன் போட்டி நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டும் அதற்கான போட்டி நடந்தது. அதில், 16 பேர் கலந்து கொண்டனர். போட்டி தொடங்கியதும், அனைவரும் அங்கு வைத்திருந்த இறைச்சி கலந்த ரொட்டியை ஆவலுடன் தின்றனர். அவர்களில் ஜோய் என்பவர் அகில உலக சாப்பாட்டு ராமன் பட்டம் வென்றார். இவர் 10 நிமிடத்தில் 62 ரொட்டிகளை சாப்பிட்டு சாதனை படைத்தார். இப் பட்டத்தை இவர் தொடர்ந்து 5-வது முறையாக பெற்றுள்ளார்.