டுபாயின் விருந்தோம்பல் சின்னம்: விசித்திரமான ஆடம்பர ஹொட்டல் "பேர்ஜ்-அல்-அரப்" !

ஐக்கிய அரபுராச்சிய ( டுபை -Dubai ) மக்களின் விருந்தோம்பலின் சின்னம் பேர்ஜ்-அல்-அரப் ஹொட்டல் (Burj-Al-Arab Hotel) என வர்ணிக்கப்படுகின்றது. அரபியவளைகுடாவின் பாரம்பரிய கடல் வணிகத்தின் பாய்மர ஓடத்தினை நினைவுகூரும் வண்ணம் இந்த நவீன ஹொட்டல் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஐந்துவருட கட்டுமானத்தின் பின்பு 1999 ம் ஆண்டு திறந்து வைகப்பட்ட காலத்தில் இதுவே செயற்கை தீவிலமைந்த உலகின் மிக உயரமான கட்டிடமாக இருந்தது. 650 மில்லியன் டொலர் செலவில் கட்டிமுடிக்கப்பட்ட இந்த அதிநவீன ஆடம்பர ஹொட்டல் தொடர்பிலான குறும் தகவல் கீழ்வருமாறு.
*இதன் உயரம் 333 மீற்றர் (1,090 அடி) , இது ஜெமேரா கடற்கரையில் இருந்து 280 மீற்றர் (920 அடி) தூரத்தில் கடலில் செயற்கையில் அமைந்த தீவில் (கடலில் மனிதனால் உருவாக்கப்பட்ட தீவில்) அமைக்கப்பட்டுள்ளது.
*ஒருவகை படகு வகை அமைப்பில் இதன் வடிவம் அமைக்கப் பட்டு இதன் 180 மீற்ரர்கள் உயரத்தில் விசாலமான திறந்த வெளியும் வடிவமைக்கப்பட்டுள்ளது. பேர்ஜ்-அல்-அரப் ஹொட்டல் பிரத்தியோக வளை பாலத்தினால் நிலத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.
*பேர்ஜ்-அல்-அரப் ஹொட்டல் இன் அடித்தளம் 236 அடி விடமும் 45 மீற்றர் ஆழமும் கொண்ட உருளை வடிவான கட்டிட பகுதியில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
*பேர்ஜ்-அல்-அரப் ஹொட்டலின் கட்டுமானத்திற்காக 70,000 கன மீற்றர் சீமெந்து கலவையும் , 9,000 தொன் இரும்பும் பாவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் 43,000 சதுர மீற்றர் கண்ணாடி, 13,000சதுர மீற்றர் மார்பிள் (Carrara Marble), 12,000 சதுர மீற்றர் கிறனைற் (Brazilian Granite), 32,000 சதுர மீற்றர் மொசைக் (Italian Mosaic), 15,000 சதுர மீற்றர் தங்க இலை (24 carat gold leaf) என்பனவும் இந்த ஆடம்பர கட்டிடத்தின் தேவைக்காக உபயோகித்துள்ளமை குறிப்பிடத்தக்க அம்சமாகும்.
*இந்த ஹொட்டலின் வெளிப்புற பகுதியானது இரவுவேளையில் வர்ண விளக்கு போன்று தோற்றமளிக்கவென விசேட கண்ணாடியினால் உருவாக்கப்பட்டுள்ளது. கட்டிடத்தின் உட்புற மத்தியில் அமைக்கப்பட்டுள்ள "தண்ணீர் பீச்சி" (Water Jet) 16 மாடிகள் உயரத்தினை அடைந்து மீண்டும் நிலத்தில் வந்தடையும் வண்ணம் விஷேசமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
*உலகில் மிக விலை உயர்ந்த ஹொட்டல் அறைகளை ( ஒரு இரவு தங்குதல் 1,000 டொலர் தொடக்கம் 28,000 டொலர் வரை பல ரகம்) கொண்டுள்ளது எனும் பெருமையை கொண்டுள்ளது.
*பேர்ஜ்-அல்-அரப் ஹொட்டல் தன்னகத்தில் மிகச்சிறந்த உணவகம் , உள்ளக நீர்மூழ்கி சவாரி , அதி நவீன கடல்வாழ் உயிரியில் காட்சியகம் (990,000 லீற்றர் நீர் தடாகத்தில்) , மற்றும் ஆடம்பர பெழுதுபோக்கு வசதிகளையும் கொண்டுள்ளது. பேர்ஜ்-அல்-அரப் ஹொட்டல் (Burj-Al-Arab Hotel) டுபய் நாட்டிலுள்ள விசித்திரமான பல நவீன ஆடம்பர கட்டிடங்களில் ஒன்றாகும்
*250 கட்டிட வடிமைப்பாளர்களினால் உருவாக்கப்பட்ட இந்த ஆடம்பர ஹொட்டேலில் 1,200 முழுநேர பணியாளர்கள் வேலை செய்கின்றனர். மிகவும் புகழுக்குரிய "பேர்ஜ்-அல்-அரப்" உலகின் முதலாவது ஏழு நட்சத்திர ஹொட்டல் எனும் தகுதியை ஹொட்டல் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது

முகப்பு

Related Posts Plugin for WordPress, Blogger...