தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
ரம்ஜான்  மாதம் நோன்பு கடைப்பிடிப்பவர்களுக்கு கஞ்சி தயாரிப்பதற்காக நபர்  ஒருவருக்கு நாள் ஒன்றுக்கு 150 கிராம் வீதம் மொத்த அனுமதி பெற்ற  பள்ளிவாசல்களுக்கு வழங்க அனைத்து மாவட்ட ஆட்சி தலைவர்களுக்கும்  முதல்-அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இவ்வாறு  ரம்ஜான் மாதம் நோன்பு கடைபிடிப்பவர்களுக்கு அனுமதி பெற்ற பள்ளிவாசல்களில்  கஞ்சி தயாரிப்பதற்கு தேவையான அரிசிக்கு உரிய மொத்த அனுமதியை புதுப்பித்து  மாவட்ட ஆட்சித் தலைவர்கள் நேரடியாக பள்ளி வாசல்களுக்கு வழங்குவார்கள்.  ரம்ஜான் மாத நோன்பு கஞ்சி தயாரிப்பதற்காக 3801 டன்கள் அரிசியை தமிழ்  நாட்டிலுள்ள அனைத்து தமிழ்நாடு நுகர் பொருள் வாணிப கழக கிடங்குகளிலும்  29-7-2011 அன்று தயார் நிலையில் வைத்திருக்கவும், தமிழ்நாடு நுகர் பொருள்  வாணிபகழகத்திற்கு முதல்- அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். 
எனவே  தமிழகத்தில் அனுமதி பெற்று ஏற்கனவே இந்த வாய்ப்பினை பயன் படுத்தி வரும்  பள்ளி வாசல்கள் மொத்த அனுமதியை புதுப்பித்து, மாவட்ட ஆட்சித் தலைவரிடம்  பெற்றும் தமிழ்நாடு நுகர் பொருள் வாணிப கழக கிடங்கில் இருந்து அரிசியை  பெற்றும் பயன் அடைய கேட்டுக் கொள்ளப்படுகிறது.