தமிழகத்தில் அனைத்து மாணவர்களுக்கும் ஒரே மாதிரியான தரமான கல்வி கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் கடந்த தி.மு.க. அரசு சமச்சீர் கல்வி திட்டத்தை கொண்டு வந்தது.
இதற்கு தனியார் பள்ளிகளில் குறிப்பாக மெட்ரிகுலேஷன் பள்ளிகளில் ஒரு பிரிவினர் எதிர்ப்பு தெரிவித்தனர். சமச்சீர் கல்வி திட்டத்தால் மெட்ரிக் பள்ளி மாணவர்களின் கல்வி தரம் குறையும் என்று அவர்கள் தெரிவித்தனர். மற்றொரு பிரிவினர் எல்லா மாணவர்களுக்கும் ஒரே மாதிரியான, தரமான கல்வி கிடைக்கும் என்பதால் சமச்சீர் கல்வியை ஆதரித்தார்கள்.
சமச்சீர் கல்வியை எதிர்த்த சில மெட்ரிக் பள்ளிகள், தங்கள் பள்ளியில் படிக்கும் மாணவர்களை சி.பி.எஸ்.இ-க்கு மாற பெற்றோர்களை வற்புறுத்தி வந்தது. அப்படி சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்திற்கு மாறுபவர்களுக்கு கல்விக் கட்டணம் இருமடங்காகும். இதனால் தங்கள் பிள்ளைகளை சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்திற்கு மாற்ற பெற்றோர்கள் தயங்கினர். சில மெட்ரிக் பள்ளிகள் வலுக்கட்டாயமாக மாணவர்களை சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்திற்கு மாற்றினர்.