பின்லேடனுக்காக 10 ஆண்டில் ரூ. 60 லட்சம் கோடி செலவு செய்த அமெரிக்கா.


 
2001-ம் ஆண்டு பின்லேடனின் அல்கொய்தா தீவிரவாதிகள் அமெரிக்காவில் தாக்குதல் நடத்தியதை அடுத்து பின்லேடனை பிடிக்க அமெரிக்க தீவிரம் காட்டியது.
 
பின்லேடனை பிடிக்க 10 ஆண்டில் ரூ. 60 லட்சம் கோடி செலவு செய்த அமெரிக்கா; 6 ஆயிரம் வீரர்களை பலி கொடுத்ததுபின்லேடன் ஆப்கானிஸ்தானில் பதுங்கி இருப்பதாக கருதிய அமெரிக்கா ஆப்கானிஸ்தான் மீது போர் தொடுத்தது. ஆப்பிரிக்க கண்டத்தில் உள்ள சோமாலியா உள்ளிட்ட நாடுகளிலும் அமெரிக்க படைகள் தேடுதல் பணியில் ஈடுபட்டன.  
 
பின்லேடனை பிடிக்க 10 ஆண்டுகளில் அமெரிக்க ரூ. 60 லட்சம் கோடி செலவிட்டு உள்ளது. இன்னும் தேடுதல் வேட்டை தொடர்ந்தால் அடுத்த 10 ஆண்டில் மேலும் ரூ. 80 லட்சம் கோடி வரை செலவாகும் என்று கணக்கிட்டு இருந்தனர்.
 
இப்போது பின்லேடன் கொல்லப்பட்டு விட்டதால் அமெரிக்காவுக்கு பெருமளவு பணம் மிச்சமாகி இருக்கிறது.   பின்லேடனை பிடிக்க நடத்திய வேட்டையில் அமெரிக்கா இதுவரை 6 ஆயிரம் வீரர்களை பலி கொடுத்து உள்ளது. 55 ஆயிரம் வீரர்கள் காயம் அடைந்துள்ளனர்.
 
அமெரிக்கா ஆப்கானிஸ்தானில் நடத்திய போரினால் 20 ஆயிரம் பொதுமக்கள் பலியாகி உள்ளனர். 50 ஆயிரம் பேர் காயம் அடைந்து உள்ளனர். ஈராக்கில் நடந்த போரினால் 12 லட்சம் பேர் கொல்லப்பட்டு உள்ளனர். சோமாலியாவில் தேடுதல் வேட்டையின்போது நடந்த தாக்குதலில் 6,500 பொதுமக்கள் கொல்லப்பட்டு உள்ளனர்.
 
2001-ல் அல்கொய்தா தீவிரவாதிகள் அமெரிக்காவில் நடத்திய தாக்குதலுக்கு பிறகு இதுவரை 13 தாக்குதல்களை நடத்தி உள்ளனர். இதில் 1000 பேர் கொல்லப்பட்டு உள்ளனர்.

முகப்பு

Related Posts Plugin for WordPress, Blogger...