மாம்பழம் சூடு இல்லை ?


எல்லோருக்கும் பிடித்தமான பழம் மாம்பழம். மாம்பழம் சூடானது. அதிகமாக சாப்பிட்டால் உஷ்ணம் உடம்பில் ஏறி தொல்லை தரும் என்பார்கள். இதனை மருத்துவ விஞ்ஞானம் ஏற்கவில்லை.
100 கிராம் மாம்பழத்தில் 12.2 முதல் 42.2 மில்லி கிராம் வரை வைட்டமின் ஏ யும், 13.2 முதல் 80.3 மில்லி கிராம் வரை வைட்டமின் சி யும் உள்ளது. தினமும் ஒரு மாம்பழம் சாப்பிட்டால் இந்த இரண்டு வைட்டமின்களும் எளிதாக நமது உடலை வந்தடையும்.

பல பேர்கள் மாம்பழத்தை முழுவதுமாக சாப்பிடாமல் தோல் பகுதியை தூர எறிந்து விடுவார்கள். மாம்பழத்தின் மேல் தோல் பகுதியில் தான் வைட்டமின் சி சத்து அதிகமாக உள்ளது.
மனிதர்களின் உடலுக்கு அதிக முக்கிய தேவையான கால்சியம், பாஸ்பரஸ், சோடியம், பொட்டாசியம் ஆகியவைகள் நாம் சுவையாக சாப்பிடுகின்ற மாம்பழத்தில் அதிகமாக இடம் பெற்றுள்ளது.
வெண்ணெயில் அளவுக்கு அதிகமான வைட்டமின் ஏ உள்ளது. இதே போன்றே மாம்பழத்திலும் அளவுக்கு அதிகமான வைட்டமின் ஏ இருப்பதால் விலை கூடுதலான வெண்ணெயை உண்பதை விட விலை மலிவான மாம்பழத்தை உண்ணலாம். நாம் சாப்பிடாமல் தூக்கி எறியும் மாங்கொட்டையிலும் கால்சிய சத்தும், கொழுப்பு சத்தும் இருக்கின்றது.
அதனால் இனி மாம்பழம் சீசன்தான்! நிறைய மாம்பழம் வாங்கி ஆனந்தமாக சாப்பிட்டு மகிழுங்கள்.

முகப்பு

Related Posts Plugin for WordPress, Blogger...