காங்கிரஸ் கட்சியில் இருந்து எஸ்.வி.சேகர் நீக்கம்

கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதாக, மயிலாப்பூர் எம்எல்ஏ எஸ்.வி.சேகர் உள்பட 19 பேரை கட்சியில் இருந்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் தங்கபாலு நீக்கியுள்ளார்.

இதுதொடர்பாக தங்கபாலு வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை மாநகராட்சி முன்னாள் துணை மேயர் கராத்தே தியாகராஜன், மயிலாப்பூர் எம்எல்ஏ எஸ்.வி.சேகர், தென்சென்னை மாவட்ட காங்கிரஸ் தலைவர் மங்கள் ராஜ், தென்சென்னை இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஜேம்ஸ் ஜி.பிரகாஷ், சென்னை மாநகராட்சி கவுன்சிலர்கள் சாந்தி, செங்கை செல்லப்பன், விஜயசேகர் உள்பட மொத்தம் 19 பேர் நீக்கப்பட்டுள்ளதாக தங்கபாலு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.




இவர்கள் அனைவரும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட அதிகாரப்பூர்வ காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு எதிராக செயல்பட்டதாக, தங்கபாலு கூறியுள்ளார்.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள எஸ்.வி.சேகர், என்னை கட்சியில் இருந்து நீக்க தங்கபாலுவுக்கு அதிகாரம் இல்லை. அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் ஒப்புதலை பெறாமல் தங்கபாலு, தன்னிச்சையாக இந்த நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார். தனக்கு எதிராக கட்சியில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை நீக்கவேண்டும் என்ற எண்ணத்தில் தங்கபாலு செயல்பட்டுள்ளார். தங்கபாலு நடவடிக்கை குறித்து ராகுல் காந்திக்கு இமெயில் அனுப்ப உள்ளேன் என்றார்.

முகப்பு

Related Posts Plugin for WordPress, Blogger...