ஹஜ் புனித பயணம் 70 வயதுக்கு மேற்பட்டோருக்கு சலுகை
ஹஜ் புனித பயணம்: 70 வயதுக்கு மேற்பட்டோருக்கு சலுகை ஹஜ் புனிதப் பயணம் செல்ல விண்ணப்பிக்கும் 70 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களுக்கும் அவருடன் துணையாகச் செல்லும் மேலும் ஒருவருக்கும் பயணம் உறுதி செய்யப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இது குறித்து தமிழ்நாடு ஹஜ் குழு வெளியிட்டுள்ள செய்தி: 2011 மார்ச் 31-ம் தேதியன்று 70 வயது பூர்த்தியான புனிதப் பயணி, தம்முடன் ஒரே ஒரு சக பயணியுடன் விண்ணப்பித்தால் இந்த ஆண்டு (2011) ஹஜ் பயணத்தில் அவர்களுக்கு உறுதி செய்யப்பட்ட இருக்கைகள் அளிக்கப்படும். ஹஜ் பயணத்துக்கு ஏற்கெனவே விண்ணப்பங்களைச் சமர்ப்பித்து உறை எண்களைப் பெற்ற 70 வயதுக்கு மேற்பட்ட பயணிகள், தம்முடன் சக பயணியாக யாரை அழைத்துச் செல்ல உத்தேசித்துள்ளார் என்பதைத் தெரிவிக்குமாறு பயணிகள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இதன் மூலம் அந்தப் பயணிகளுக்கு உறுதி.