பரிகார பூஜை ?

ரிகார பூஜை நடத்துவதாக கூறி தம்பதியிடம் 147 பவுன் நகை, ஸீ92 லட்சம் பறித்த போலி ஜோதிடர், கணவன், மனைவி கைது செய்யப்பட்டனர்.
கோவை மாவட்டம் சிறுமுகை அடுத்த ஆலாங்கொம்பை சேர்ந்த தம்பதியினர் முத்துகிருஷ்ணன்(62)& ரேணுகாதேவி (50). பிஎஸ்என்எல் அலுவலர்களான இவர்களில் முத்துகிருஷ்ணன் ஓய்வு பெற்றுவிட்டார்.

 

தற்போது பொள்ளாச்சி ஜோதிநகரில் வசிக்கின்றனர். சிறுமுகை இடுகம்பாளையத்தை சேர்ந்தவர் முருகேசன்(35), ஜோதிடம் பார்ப்பவர். கடந்த 2007 நவம்பரில் ரேணுகாதேவி முருகேசனிடம் ஜோதிடம் பார்த்துள்ளார். அப்போது முருகேசன், ‘ கிரக நிலை சரியில்லை என கூறி குடும்பத்தில் நிகழ உள்ள மரணத்தை தவிர்க்க பரிகாரம் செய்ய வேண்டும். சிறுமுகை நகை தொழிலாளி நாச்சிமுத்து மனைவி கீதா(40) இதற்கான பரிகாரம் செய்வார், அவரை போய் பாருங்கள்‘ என கூறினார்.

 பீதியடைந்த முத்துகிருஷ்ணன் தம்பதியினர் கீதாவை சந்தித்தனர். அவர் கேட்டபடி பரிகார பூஜையில் வைக்க ரூ.2 லட்சம், 20 பவுன் நகைகளை கொடுத்துள்ளனர். தொடர்ந்து பலமுறை பூஜையில் வைப்பதாக கூறி லட்சக்கணக்கில் பணம், நகை பெற்றனர்.  இந்நிலையில், சில மாதங்களுக்கு முன்பு ரேணுகாதேவி பஸ்சில் இருந்து விழுந்து கால்களில் அடிப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டி ருந்தார். 

அவரை சந்தித்த ஜோதிடர் முருகேசன் பூஜையை நிறுத்தியதால் விபத்து நடந்ததாக கூறி மீண்டும் பரிகார பூஜைக்கு என கூறி பணம், நகை பறித்துள்ளார். தொடர்ந்து பணம் கேட்டதால் மறுத்த ரேணுகாதேவியை கடந்த 4ம்தேதி முருகேசன் பொள்ளாச்சியில் உள்ள வீட்டில் வைத்து கத்தியை காட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். 
இதனால் பயந்துபோன ரேணுகாதேவியும், முத்துகிருஷ்ணனும் ரூ.5 லட்சமும். 10 பவுன் நகையும் கொடுத்துள்ளனர். இவ்வாறு இதுவரை 147 பவுன் நகையும், ஸீ92 லட்சமும் அவர்கள் பறித்துள்ளனர். 

இதுகுறித்து முத்துகிருஷ்ணன் புகாரின் பேரில் பொள்ளாச்சி கிழக்கு போலீசார் வழக்கு பதிந்து முருகேசன், நாச்சிமுத்து, அவரது மனைவி கீதா ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 112 பவுன் நகை, ரூ.30 லட்சத்தை மீட்டனர்.

விசாரணையில், முருகேசன் 4ம் வகுப்பு படித்துவிட்டு கட்டிட வேலை செய்வதும், ஜோதிடம் தெரியும் என கூறி ஏமாற்றியதும் தெரியவந்தது. இவருக்கு மனைவியும், ஒரு மகனும் உள்ளனர். 3 பேரும் கோவை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

முகப்பு

Related Posts Plugin for WordPress, Blogger...