தமிழக முஸ்லிம்களின் பலம் ..தமிழக முஸ்லிம்களின் பலம் ..கண்டிப்பாக படித்து பகிர்ந்து கொள்ளவும்...
தமிழகத்தின் 1லட்சத்து 20 ஆயிரம் முஸ்லிம் வாக்குகளை கொண்ட நன்னிலம்    சட்டமன்றத் தொகுதி தவிர, ஏரத்தாள 60க்கும் மேற்பட்டத் தொகுதிகள் 80ஆயிரம்    முஸ்லிம் வாக்காளர்களை கொண்டவை. நன்னிலம் சட்டமன்றத் தொகுதியில் 1லட்சத்து    20 ஆயிரம் முஸ்லிம் வாக்காளர்கள் இருந்தாலும் இன்றுவரை அந்த தொகுதியில்    எந்த ஒரு முஸ்லிம் வேட்பாளரோ அல்லது 
முஸ்லிம் அரசியல் கட்சியோ    தமிழகத்திற்காக இதுவரை நடந்த சட்டமன்றத் தேர்தல்களில் போட்டியிடவேயில்லை    என்பது ஆச்சரியகரமான, அதே சமயம் வருத்தத்திற்குரிய செய்தியாகும்.    தமிழகத்தில் 1 இலட்சத்திற்கும் மேற்பட்ட முஸ்லிம் வாக்காளர்களைக் கொண்ட    தொகுதிகள் முப்பதுக்கும் அதிகமாக இருக்கின்றது.
அவைகளில் சிலவற்றை இங்கே காணலாம்:
1. நன்னிலம்
2. கடலாடி
3. கேயம்புத்தூர் மேற்கு
4. மதுரை மத்தி
5. திருச்சி
6. சேலம்
7. அரவக்குறிச்சி
8. குடியாத்தம்
9. ராணிப்பேட்டை
10. ஆற்காடு
11. சென்னை துரைமுகம்
12. சேப்பாக்கம்
13. ஆயிரம் விளக்கு
14. திருவல்லிக்கேணி
15. எக்மோர்
16. சென்னை பூங்காநகர்
17. ராயபுரம்
18. திண்டுக்கல்
19. நத்தம்
20. பெரியகுளம்
21. பாளையங்கோட்டை
22. திருச்செந்தூர்.
இதுதவிர,   தமிழகத்தில் 30 சட்டமன்றத் தொகுதிகள் என்பதாயிரத்திற்கும்  அதிகமான   முஸ்லிம் வாக்காளர்களைக் கொண்டவை. 23 சட்டமன்றத் தொகுதிகள்    அறுபதாயிரத்திற்கும் அதிகமான முஸ்லிம் வாக்காளர்களைக் கொண்டவை. தமிழக    முஸ்லிம்கள் அனவைரும் ஒரே குடையின் கீழ் ஒன்றினைந்து நமக்கு நாமே    உருவாக்கும் அரசியல் அமைப்புக்கு வாக்களிப்போம் எனில் தமிழகத்தில்    மாத்திரம் 45-55 சட்டமன்றத் தொகுதிகளிலும், 4-6 நாடாளுமன்றத் தொகுதிகளிலும்    நமக்கு வெற்றி நிச்சயம் என்பதை உறுதியாகக் கூறமுடியும். அனைத்து அரசியல்    கட்சிகளையும் நம் காலடியில் விழ வைப்பதுடன், தமிழக அரசியலைப் பொறுத்தவரை    நாம் வகுத்ததுதான் சட்டம் என்கிற நிலையையும் உருவாக்க முடியும்.
தமிழகத்தின்   6 மாநகராட்சிகளில் முஸ்லிம்களே மேயர்கள் என்பதையும்  உறுதியாகக்  கொள்ளலாம்.  சென்னையைத் தவிர தமிழத்தில் மற்றுமுள்ள  மாநகராட்சிகளில்  ஒன்றரை இலட்சம்  வாக்குகள் பெறுபவரே மேயர். மதுரை,  திருச்சி மற்றும் கோவை  மாநகராட்சிகள் 3  இலட்சம் முஸ்லிம் வாக்களர்களைக்  கொண்டவை. சேலம் மற்றும்  நெல்லை  மாநகாராட்சிகள் இரண்டரை லட்சம் முஸ்லிம்  வாக்காளர்களைக் கொண்டவை.
சட்டசபை   தொகுதிகளில் உள்ள முஸ்லிம் வாக்காளர்கள் ஒருங்கிணைந்து தமது   வாக்குகளையும்  முஸ்லிம் வேட்பாளர்களுக்கே அளிப்பார்கள் எனில், தமிழக   சட்சடசபையில்  மூன்றில் ஒரு பங்கு உறுப்பினர்கள் முஸ்லிம்களே என்கிற நிலை   ஏற்படும்.  முஸ்லிம்களின் சம்மதம் இல்லாமல் எந்த ஒரு சட்டமும்   நிறைவேற்றப்பட முடியாது  என்கிற நிலையை தமிழக சட்டசபையிலும்   உருவாக்கமுடியும். தமிழகத்தில்  மட்டுமில்லாது, ஆந்திரா, கர்நாடகா, கேரளா,   மஹாராஷ்டிரா என இந்தியாவின்  பெரும்பான்மையான மாநிலங்களில் உள்ள   சட்டசபைகளிலும் இந்நிலையே உருவாகும்.  இதே நிலை தொடருமெனில்   நாடாளுமன்றத்திலும் முஸ்லிம் உறுப்பினர்களின்  எண்ணிக்கை பெரும்பான்மை   நிலைக்கு உயரும்.
தமிழகத்தில்  உள்ள ஒவ்வொரு மாவட்டத்திலும் 400  முதல் 800 பள்ளிவாயில்களை  ஒன்றிணைப்பது  மிகவும் எளிதான காரியம்.  தமிழகத்தில் உள்ள 8000  பள்ளிவாயில்களைச் சார்ந்த  1ஒன்றரை கோடி  முஸ்லிம்களும் ஒரு பொது நலனுக்காக  ஒன்றிணைவார்கள் எனில், நாம்  நினைக்கும்  எதையும் சாதிப்பது எளிது என்பதை  முஸ்லிம்கள் அனைவரும் உணர  வேண்டும்.
இது  நேர்த்தியான, அதேசமயம் யாருக்கும்  எந்தவித ஆபத்தும் இல்லாத அமைதியான   முடிவு என்பதையும் முஸ்லிம்கள் அனைவரும்  உணர வேண்டும். தமிழகம்   மட்டுமல்லாது இந்தியா முழுவதும் இஸ்லாமியர்கள்  அரசியல் செல்வாக்கு மற்றும்   ஆட்சி அதிகாரம் பெற வேண்டும் என்பதற்கு  இதைத்தவிர ஒரு சரியான தீர்வு   இல்லையென்றே சொல்ல வேண்டும். அரசியல்  செல்வாக்கு மற்றும் ஆட்சி அதிகாரம்   இன்றி இந்த பூமியில் நாம் எதையுமே  சாதிக்க முடியாது என்பது உறுதி.
இதுபோன்ற  பிற அரசியல்  கட்சிகளுக்காக கொடி தூக்கி அவர்களை வெற்றிபெற செய்ய   வேண்டுமா? அவர்கள்  வெற்றி பெற்று ஆட்சிபீடம் ஏறிய பின்பு நம்முடைய   அடிப்படை உரிமைகளுக்காக  அவர்களிடம் கையேந்தி நிற்க வேண்டிய நிலை தேவைதானா?
தேர்தல்   காலங்களில் ஒரு குறிப்பிட்ட அரசியல் கட்சிக்கு முஸ்லிம்கள்  வாக்களிக்க   வேண்டும் என வேண்டுகோள் வைக்கிறோமே. ஏன்? முஸ்லிம்கள் முஸ்லிம்    வேட்பாளருக்கே வாக்களிக்கட்டும். முஸ்லிம் வேட்பாளர்கள் வெற்றிபெற்று  வந்த   பின்புள்ள நிலைமையை ஆய்ந்தறிந்து, முஸ்லிம்களுக்கு நல்லது    செய்யக்கூடியவர்களுக்கு நம்முடைய ஆதரவை வழங்கலாம். மானம் மற்றும்    சுயமரியாதை ஈமானின் ஒரு பகுதி என்பதை முஸ்லிம்கள் அனைவரும் நினைவில் கொள்ள    வேண்டும்.
இக்கட்டுரையை மீண்டும் மீண்டும் படியுங்கள்.   முஸ்லிம்களுக்கு நன்மை  செய்யாத எந்த ஒரு அரசியல் கட்சியையும்  நம்பாதீர்கள்.  முஸ்லிம்களே!  அனைவரும் ஒரே குடையின் கீழ் ஒன்றிணைவோம்.  நமது ஒற்றுமையின்  மூலம் நாம்  விரும்பியவைகளை உடனடியாகப் பெற முடியும்.  இந்த முடிவை  சிந்தித்து  செயல்படுத்துவது முஸ்லிம்களாகிய நம்மீது  கடமையாக்கப்பட்டுள்ளது.   முஸ்லிம்களாகிய நாம் அனைவரும் ஒன்றிணைவோம். நம்  அன்றாட வாழ்க்கை எளிதாக   அமையும். நாம் நமது அடிப்படை உரிமையான  இறைவழிபாட்டு உரிமைகளை தங்கு   தடையின்றி தொடரலாம். நம் வருங்கால  தலைமுறையும் பாதுகாப்பான வாழ்வைத்   தொடரும்.
தேர்தலில் நாம்  வாக்களிக்காமல்  புறக்கணிப்போம் எனில் நஷ்டம் நமக்குத்தான்.  ஒவ்வொரு  வாக்கும்  விலைமதிப்பற்றது. நாம் அளிக்கும் ஒவ்வொரு வாக்கும்  ஏராளமான  மாற்றங்களை  கொண்டுவரும். அரசை எதிர்க்கிறோம் என்ற பெயரில் நம்மில்  சிலர்   வாக்களிக்காமல் தேர்தலைப் புறக்கணிக்கிறார்கள். அதனால் ஏற்படும்  நஷ்டம்   நமக்கே! மற்ற அரசியல் கட்சிகள் நம்மை எள்ளி நகையாடுவதுடன், அதிக  பயனடைவது   அவர்களே என்பதை நினைவில் கொள்ளுங்கள். எனதருமை முஸ்லிம்  சொந்தங்களே!   நமக்கென ஒரு தனி அரசியல் அமைப்பு காண்பதும், அந்த அமைப்பின்  மூலம் நமக்காக   பாடுபடக்கூடிய முஸ்லிம் சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற  பிரதிநிதிகளை   தேர்ந்தெடுத்து அனுப்புவதுமே இனி நம்முடைய தலையாய பணியாக  இருக்க வேண்டும்.
நாளைய உலகம் நம் கையில் என்பதை தெளிவாக தெரிந்த நாம், மரணித்த பிணம் போல் நடமாட வேண்டுமா?
நாம்   நம்முடைய குறிக்கோளில் தெளிவாக இருப்போம். அனைத்து அரசியல்  கட்சிகளையும்   நம் பின்னால் கைகட்டி நிற்க வைப்போம். அமைதியாக நாம்  நம்முடைய  குறிக்கோளை  எட்டுவோம். நமது உறுதிமொழி நம் வருங்கால தலைமுறையின்   வாழ்வுரிமைக்கு  அடிப்படையாக அமையட்டும். எந்த காரணம் கொண்டும்   முஸ்லிம்களின் ஒற்றுமை  என்னும் அடிப்படை குறிக்கோளை விட்டு நம் கவனம்   சிதறாமல் இருக்கட்டும்.  எல்லாம் வல்ல அல்லாஹ் இதற்கு அருள் புரியட்டும்!
நன்றி : ஷாகுல் ஹக்  அஜமி