குடும்ப உறவுகள் சீர்குலைவதற்கு உளவியல் ரீதியான காரணங்கள்!
கணவன்-மனைவி இருவரில் ஒருவர் தாம்பத்திய வாழ்க்கையில் அதிகம் நாட்டம் உள்ளவராக இருந்து, மற்றொருவர் அந்த நாட்டத்துக்கு இணையான ஜோடியாக இல்லாமல் போகும்போதுதான் பிரச்னைகள் பூதாகாரமாக எழுகின்றன. விரிசல்கள் ஆழமாகின்றன. அந்தரங்கத்துக்கும் அன்புடன் நேரத்தை ஒதுக்குவது காதலை வெல்லும் வழி.]
நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம் என்பார்கள். ஆனால் அந்த குடும்பம் எனும் பல்கலைக்கழகம் இடிந்து கொண்டு இருக்கிறதோ என்கிற பயம் கலந்த வாழ்க்கையே கணவன் - மனைவி உறவுச் சிக்கல்கள்.
ஏன் இந்த உறவு சிக்கல்கள்... இத்தனை உறவுச் சிக்கல்கள்?! "பாவம், புண்ணியம் போன்றவற்றில் நம்பிக்கை குறைந்து வருவதே இந்த உறவுச் சிக்கல்களுக்குக் காரணம்"
வேதங்கள் யாவும் அன்னியப்பெண்களை பார்ப்பதை தவறென்கிறது. ஆனால். இன்றைய டி.வி, சினிமா போன்ற ஊடகங்களில் முறை தவறும் ஒழுக்கம்தான் வாழ்க்கையில் பிழைப்பதற்கான வழி என்று திரும்பத் திரும்பக் காண்பிக்கப்படுகிறது. தொடர்ந்து அதையெல்லாம் பார்ப்பவர்களின் மனநிலை, சிந்தனை என்னவாகும்?
இரண்டாவது காரணம், முந்தைய தலைமுறை மனிதர்கள் 'மானம் பெரிது' என்றார்கள். இன்றைய தலைமுறைக்கு 'பணம்தான் வாழ்க்கை' என்றாகிவிட்டது. பணத்தைத் தேடி ஒடிக்கொண்டே இருப்பதால், வீட்டுக்குள் ஒவ்வொருவரும் ஒரு தீவாக வாழ்கிறார்கள். இந்த வாழ்க்கை முறைதான், பிரச்னைகளின் மூலகாரணம். 'இப்படித்தான் வாழ வேண்டும்' என்கிற தீர்மானத்தைவிட 'எப்படியும் வாழலாம்' என்கிற மனநிலையை வளர்க்கும் சூழ்நிலைகள் பெருகி வருவதும், அதை எப்படி எதிர்கொள்வது என்பதை போதிக்கும் வழிமுறைகள் வீடு, கல்விக்கூடம் என எங்கும் இல்லாமல் இருப்பதும் ஒரு காரணம்"
குடும்ப உறவுகள் சீர்குலைவதற்கு உளவியல் ரீதியான காரணங்கள் என்ன, கணவன்-மனைவி உறவு இதயத்துக்கு இணக்கமாகவும், உறவுக்கு இறுக்கமாகவும் இருக்க வழிகள் என்ன?
"ஆண், பெண் இருபாலருமே தங்களுக்கான எல்லையைக் கடந்து வரும்போது உறவுச் சிக்கலில் மாட்டிக் கொள்கிறார்கள். ஒரு ஆணின் மனநிலையும் பெண்ணின் மனநிலையும் முற்றிலும் வேறானவை. 'என் மனைவிக்காகவும் குழந்தைகளுக்காகவும் தானே உழைக்கிறேன்' என்று நேரம் காலம் பார்க்காமல் உழைப்பதும், சம்பாதிப்பதும்தான் கௌரவம் என ஆண் நினைக்கிறான்; அதுதான் சந்தோஷம் என நம்புகிறான்.
ஆனால், ஒரு பெண், ஆணின் 'உடல்தேவை' சார்ந்த அருகாமையைவிட அவன் அன்பும், பாசமும்தான் பெரிது என்று நினைக்கிறாள். நிறைய குடும்பங்களில் பிரச்னையே, 'என் கணவர் என்கூட உட்கார்ந்து பேசுவதில்லை, எனக்காக நேரம் செலவிடுவதில்லை' என்பது தான். அந்த குறைந்தபட்ச எதிர்பார்ப்பு தொடர்ந்து நிறைவேறாமல் போக, அந்த எதிர்பார்ப்பை யார் பூர்த்தி செய்கிறார்களோ அவர்களை நம்பி எல்லை தாண்டுகிறாள்.
சம்பாதிப்பதற்காக வெளிநாடு செல்கின்றவர்கள் - முடிந்தவரை என்று சொல்வதைவிட - கட்டாயமாக மனைவியையும் அழைத்துச்செல்வதே இக்காலாதில் பாதுகாப்பு.
மனைவி என்பவள் வெறும் ஜடப்பொருள் அல்ல. அவளுக்கும் ஆசா பாசங்கள் உணர்வுகள் அனைத்தும் இருக்கவே செய்யும் என்பதை ஆண்கள் நினைவில் கொள்ள வேண்டும். அதுவும் இலவசமாக வேறு டி.வி. பெட்டிகள் வந்துவிட்ட பிறகு டி.வி. பெட்டிகள் இல்லாத வீடே இல்லை எனலாம். உணர்வுகளைத்தூண்டக்கூடிய தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் நிறைந்த காலத்தில் மனைவியை தனியே விட்டுவிட்டு ஆண்டுக்கணக்கில் பிரிந்திருப்பது சரியானதல்ல.
அடுத்த காரணம், ஆண், பெண் இருவருக்கும் நடக்கும் அவசரத் திருமணங்கள். பொருத்தமில்லாத ஒருவரை கல்யாணம் செய்து கொள்கிறார்கள். ஆனால், அவர்களது ஆழ்மன விருப்பத்துக்கு ஏற்ற ஒருவரைப் பார்க்கும்போது மனம் தடுமாறுகிறார்கள். அதேபோல் அதீத எதிர்பார்ப்புடன் திருமண பந்தத்தை உருவாக்கி, அந்த எதிர்பார்ப்பில் பலன் பூஜ்யமாகிப் போகும்போது அடுத்த உறவை நாடுகிறார்கள். உளவியல் ரீதியாக இந்த காரணங்கள் உறவுச் சிக்கலை எண்ணெய் ஊற்றி வளர்க்கின்றன. இதைத் தொடர்ந்து விவாகரத்துகள் அதிகரிக்கும், தனித்து வாழும் பெண், ஆண் எண்ணிக்கை அதிகரிக்கும். பிரச்னைகளும் அதிகரிக்கும்.
இல்லற வாழ்க்கை இனிக்க
மனைவிக்கு என்ன தேவை என்பதை கணவன் தெரிந்து வைத்திருக்க வேண்டும். கணவனுக்கு என்ன தேவை என்பதி மனைவி புரிந்து வைத்திருக்க வேண்டும்.
கணவனுக்கும் மனைவிக்கும் ஏதோ ஒரு பிரச்னையின் காரணமாக கருத்து வேறுபாடு வந்தால், 'யார் சரி?' 'யார் தவறு'? என்ற போட்டி மனப்பான்மையில் சண்டையை நீட்டிக்கொண்டே இருக்காமல், யாராவது ஒருவர் உடனே முற்றுப்புள்ளி வைப்பது, வாழ்க்கையை இனிமையான தொடர்கதையாக்கும்!
நம் சமூகத்தில், மனைவி தன்னை 'ஸ்பெஷலாக' கவனிக்க வேண்டும் என்று எல்லா ஆண்களும் எதிர் பார்க்கிறார்கள். குழந்தை, தாய் வீட்டுப் பிரச்னைகள், அலுவலக வேலைகள் என்று மனைவி பிஸியாக இருந்துவிட்டு, கணவருக்கு ஸ்பெஷல் கவனிப்பு தராதபோது... கணவர் கண்ணியம் மீறுகிறார். அதற்கு வாய்ப்புத் தராமல் இருந்து விடுவதே 'வாழும் கலை'.
கணவன்-மனைவி இருவரில் ஒருவர் தாம்பத்திய வாழ்க்கையில் அதிகம் நாட்டம் உள்ளவராக இருந்து, மற்றொருவர் அந்த நாட்டத்துக்கு இணையான ஜோடியாக இல்லாமல் போகும்போதுதான் பிரச்னைகள் பூதாகாரமாக எழுகின்றன. விரிசல்கள் ஆழமாகின்றன. அந்தரங்கத்துக்கும் அன்புடன் நேரத்தை ஒதுக்குவது காதலை வெல்லும் வழி.
நம் குடும்ப அமைப்பில், கணவரின் குடும்பத்தில் உள்ள உறுப்பினர்களை புண்படுத்துவதை ஒரு கணவரால் தாங்கிக் கொள்ள இயலாது. குறிப்பாக, அவரின் அம்மாவை இன்சல்ட் செய்து விட்டால், அவர் மனரீதியாக மிகவும் பாதிப்படைகிறார். அது, இல்லற வாழ்க்கையில் வன்முறையாக எதிரொலிக்கும் என்பதை மனைவி புரிந்து கொள்ள வேண்டும்.
அதுபோல மனைவியின் குடும்பத்தாரை கணவன் குறை சொல்லும்போது அங்கு பூகம்பமே கூட வெடிக்கலாம்.
குடும்ப உறவுகள் சீர்குலைவதற்கு உளவியல் ரீதியான காரணங்கள்!
[ ஒரு பெண், ஆணின் 'உடல்தேவை' சார்ந்த அருகாமையைவிட அவன் அன்பும், பாசமும்தான் பெரிது என்று நினைக்கிறாள். நிறைய குடும்பங்களில் பிரச்னையே, 'என் கணவர் என்கூட உட்கார்ந்து பேசுவதில்லை, எனக்காக நேரம் செலவிடுவதில்லை' என்பது தான். அந்த குறைந்தபட்ச எதிர்பார்ப்பு தொடர்ந்து நிறைவேறாமல் போக, அந்த எதிர்பார்ப்பை யார் பூர்த்தி செய்கிறார்களோ அவர்களை நம்பி எல்லை தாண்டுகிறாள். கணவன்-மனைவி இருவரில் ஒருவர் தாம்பத்திய வாழ்க்கையில் அதிகம் நாட்டம் உள்ளவராக இருந்து, மற்றொருவர் அந்த நாட்டத்துக்கு இணையான ஜோடியாக இல்லாமல் போகும்போதுதான் பிரச்னைகள் பூதாகாரமாக எழுகின்றன. விரிசல்கள் ஆழமாகின்றன. அந்தரங்கத்துக்கும் அன்புடன் நேரத்தை ஒதுக்குவது காதலை வெல்லும் வழி.]
நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம் என்பார்கள். ஆனால் அந்த குடும்பம் எனும் பல்கலைக்கழகம் இடிந்து கொண்டு இருக்கிறதோ என்கிற பயம் கலந்த வாழ்க்கையே கணவன் - மனைவி உறவுச் சிக்கல்கள்.
ஏன் இந்த உறவு சிக்கல்கள்... இத்தனை உறவுச் சிக்கல்கள்?! "பாவம், புண்ணியம் போன்றவற்றில் நம்பிக்கை குறைந்து வருவதே இந்த உறவுச் சிக்கல்களுக்குக் காரணம்"
வேதங்கள் யாவும் அன்னியப்பெண்களை பார்ப்பதை தவறென்கிறது. ஆனால். இன்றைய டி.வி, சினிமா போன்ற ஊடகங்களில் முறை தவறும் ஒழுக்கம்தான் வாழ்க்கையில் பிழைப்பதற்கான வழி என்று திரும்பத் திரும்பக் காண்பிக்கப்படுகிறது. தொடர்ந்து அதையெல்லாம் பார்ப்பவர்களின் மனநிலை, சிந்தனை என்னவாகும்?
இரண்டாவது காரணம், முந்தைய தலைமுறை மனிதர்கள் 'மானம் பெரிது' என்றார்கள். இன்றைய தலைமுறைக்கு 'பணம்தான் வாழ்க்கை' என்றாகிவிட்டது. பணத்தைத் தேடி ஒடிக்கொண்டே இருப்பதால், வீட்டுக்குள் ஒவ்வொருவரும் ஒரு தீவாக வாழ்கிறார்கள். இந்த வாழ்க்கை முறைதான், பிரச்னைகளின் மூலகாரணம். 'இப்படித்தான் வாழ வேண்டும்' என்கிற தீர்மானத்தைவிட 'எப்படியும் வாழலாம்' என்கிற மனநிலையை வளர்க்கும் சூழ்நிலைகள் பெருகி வருவதும், அதை எப்படி எதிர்கொள்வது என்பதை போதிக்கும் வழிமுறைகள் வீடு, கல்விக்கூடம் என எங்கும் இல்லாமல் இருப்பதும் ஒரு காரணம்"
குடும்ப உறவுகள் சீர்குலைவதற்கு உளவியல் ரீதியான காரணங்கள் என்ன, கணவன்-மனைவி உறவு இதயத்துக்கு இணக்கமாகவும், உறவுக்கு இறுக்கமாகவும் இருக்க வழிகள் என்ன?
"ஆண், பெண் இருபாலருமே தங்களுக்கான எல்லையைக் கடந்து வரும்போது உறவுச் சிக்கலில் மாட்டிக் கொள்கிறார்கள். ஒரு ஆணின் மனநிலையும் பெண்ணின் மனநிலையும் முற்றிலும் வேறானவை. 'என் மனைவிக்காகவும் குழந்தைகளுக்காகவும் தானே உழைக்கிறேன்' என்று நேரம் காலம் பார்க்காமல் உழைப்பதும், சம்பாதிப்பதும்தான் கௌரவம் என ஆண் நினைக்கிறான்; அதுதான் சந்தோஷம் என நம்புகிறான்.
ஆனால், ஒரு பெண், ஆணின் 'உடல்தேவை' சார்ந்த அருகாமையைவிட அவன் அன்பும், பாசமும்தான் பெரிது என்று நினைக்கிறாள். நிறைய குடும்பங்களில் பிரச்னையே, 'என் கணவர் என்கூட உட்கார்ந்து பேசுவதில்லை, எனக்காக நேரம் செலவிடுவதில்லை' என்பது தான். அந்த குறைந்தபட்ச எதிர்பார்ப்பு தொடர்ந்து நிறைவேறாமல் போக, அந்த எதிர்பார்ப்பை யார் பூர்த்தி செய்கிறார்களோ அவர்களை நம்பி எல்லை தாண்டுகிறாள்.
சம்பாதிப்பதற்காக வெளிநாடு செல்கின்றவர்கள் - முடிந்தவரை என்று சொல்வதைவிட - கட்டாயமாக மனைவியையும் அழைத்துச்செல்வதே இக்காலாதில் பாதுகாப்பு.
மனைவி என்பவள் வெறும் ஜடப்பொருள் அல்ல. அவளுக்கும் ஆசா பாசங்கள் உணர்வுகள் அனைத்தும் இருக்கவே செய்யும் என்பதை ஆண்கள் நினைவில் கொள்ள வேண்டும். அதுவும் இலவசமாக வேறு டி.வி. பெட்டிகள் வந்துவிட்ட பிறகு டி.வி. பெட்டிகள் இல்லாத வீடே இல்லை எனலாம். உணர்வுகளைத்தூண்டக்கூடிய தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் நிறைந்த காலத்தில் மனைவியை தனியே விட்டுவிட்டு ஆண்டுக்கணக்கில் பிரிந்திருப்பது சரியானதல்ல.
அடுத்த காரணம், ஆண், பெண் இருவருக்கும் நடக்கும் அவசரத் திருமணங்கள். பொருத்தமில்லாத ஒருவரை கல்யாணம் செய்து கொள்கிறார்கள். ஆனால், அவர்களது ஆழ்மன விருப்பத்துக்கு ஏற்ற ஒருவரைப் பார்க்கும்போது மனம் தடுமாறுகிறார்கள். அதேபோல் அதீத எதிர்பார்ப்புடன் திருமண பந்தத்தை உருவாக்கி, அந்த எதிர்பார்ப்பில் பலன் பூஜ்யமாகிப் போகும்போது அடுத்த உறவை நாடுகிறார்கள். உளவியல் ரீதியாக இந்த காரணங்கள் உறவுச் சிக்கலை எண்ணெய் ஊற்றி வளர்க்கின்றன. இதைத் தொடர்ந்து விவாகரத்துகள் அதிகரிக்கும், தனித்து வாழும் பெண், ஆண் எண்ணிக்கை அதிகரிக்கும். பிரச்னைகளும் அதிகரிக்கும்.
இல்லற வாழ்க்கை இனிக்க
மனைவிக்கு என்ன தேவை என்பதை கணவன் தெரிந்து வைத்திருக்க வேண்டும். கணவனுக்கு என்ன தேவை என்பதி மனைவி புரிந்து வைத்திருக்க வேண்டும்.
கணவனுக்கும் மனைவிக்கும் ஏதோ ஒரு பிரச்னையின் காரணமாக கருத்து வேறுபாடு வந்தால், 'யார் சரி?' 'யார் தவறு'? என்ற போட்டி மனப்பான்மையில் சண்டையை நீட்டிக்கொண்டே இருக்காமல், யாராவது ஒருவர் உடனே முற்றுப்புள்ளி வைப்பது, வாழ்க்கையை இனிமையான தொடர்கதையாக்கும்!
நம் சமூகத்தில், மனைவி தன்னை 'ஸ்பெஷலாக' கவனிக்க வேண்டும் என்று எல்லா ஆண்களும் எதிர் பார்க்கிறார்கள். குழந்தை, தாய் வீட்டுப் பிரச்னைகள், அலுவலக வேலைகள் என்று மனைவி பிஸியாக இருந்துவிட்டு, கணவருக்கு ஸ்பெஷல் கவனிப்பு தராதபோது... கணவர் கண்ணியம் மீறுகிறார். அதற்கு வாய்ப்புத் தராமல் இருந்து விடுவதே 'வாழும் கலை'.
கணவன்-மனைவி இருவரில் ஒருவர் தாம்பத்திய வாழ்க்கையில் அதிகம் நாட்டம் உள்ளவராக இருந்து, மற்றொருவர் அந்த நாட்டத்துக்கு இணையான ஜோடியாக இல்லாமல் போகும்போதுதான் பிரச்னைகள் பூதாகாரமாக எழுகின்றன. விரிசல்கள் ஆழமாகின்றன. அந்தரங்கத்துக்கும் அன்புடன் நேரத்தை ஒதுக்குவது காதலை வெல்லும் வழி.
நம் குடும்ப அமைப்பில், கணவரின் குடும்பத்தில் உள்ள உறுப்பினர்களை புண்படுத்துவதை ஒரு கணவரால் தாங்கிக் கொள்ள இயலாது. குறிப்பாக, அவரின் அம்மாவை இன்சல்ட் செய்து விட்டால், அவர் மனரீதியாக மிகவும் பாதிப்படைகிறார். அது, இல்லற வாழ்க்கையில் வன்முறையாக எதிரொலிக்கும் என்பதை மனைவி புரிந்து கொள்ள வேண்டும். அதுபோல மனைவியின் குடும்பத்தாரை கணவன் குறை சொல்லும்போது அங்கு பூகம்பமே கூட வெடிக்கலாம்.
உடலில் சிறுநீரகக் கல் எவ்வாறு உருவாகின்றது?
'கிட்னி ஸ்டோன்’ என்பதால், அது சிறுநீரகத்தில் மட்டும் தான் ஏற்படும் என்று கருதக் கூடாது. சிறுநீரை வெளியேற்றக் கொண்டு செல்லும் பாதையில் ஏற்படலாம். சிறுநீரைத் தேக்கி வைக்கும் பையில் ஏற்படலாம். சிறுநீரை வெளியேற்றும் இறுதி உறுப்பில் ஏற்படலாம். மிகச்சிறிய கல்லாகவும் தோன்றலாம்; ஒரு எலுமிச்சை அளவுக்கும் ஏற்படலாம். கல்லின் அளவு பொறுத்து, வலியின் தீவிரம் இருக்கும் எனக் கருதுவது தவறு. பெரிய கல், வலியே இல்லாமல் வளரலாம். கண்ணுக்கே தெரியாத சிறிய கல், அதிக வலி கொடுக்கலாம். கல் உருவாவதால் ஏற்படும் வலியை, பிரசவ வலியோடு ஒப்பிடலாம். எவ்வளவு பெரிய பலசாலியையும் ஆட்டிப் போட்டு விடும் இந்த வலி.
சிறுநீர் செல்வதில் சிரமம் ஏற்படுவதில் துவங்கி, இருபக்க இடுப்பின் பின் பக்கத்திலிருந்து அலை போல வலி உருவாகி, பிறப்புறுப்பு வரை பரவும். சிரமப்பட்டு வெளியேற்றப்படும் சிறுநீர் அதிக மஞ்சள் நிறத்துடன் காணப்படும். சிலருக்கு சொட்டு சொட்டாகவும் வெளியேறும். இதனால் தொற்று ஏற்பட்டால், காய்ச்சல் உண்டாகும். வெப்ப பகுதிகளில் வசிப்போருக்கு, உடலில் நீர்சத்து குறையும் போது, இதுபோன்று கற்கள் அடிக்கடி ஏற்படும். 40 – 60 வயதுள்ள ஆண்களிடையே இந்த உபாதை அதிகம் காணப்படுகிறது.
பரம்பரையாகவும் இது ஏற்படலாம். கல் உருவாகி, சிகிச்சை எடுத்து கொண்டோரில் 50 சதவீதத்தினருக்கு, 10 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் கல் தோன்ற வாய்ப்பு உண்டு. உடலில் உள்ள மொத்த ரத்தமும், சிறுநீரகம் வழியே செல்கிறது. ரத்தத்திலிருந்து நீரையும், ரசாயனங்களையும், சிறுநீரகம் பிரிக்கிறது. ரசாயனங்கள் கல் ஆகாமல் இருக்க, சிறுநீரகமும் சில கரைப்பான்களை சுரக்கிறது. அதையும் மீறி தோன்றும் சிறு கல்கள், ஒன்றாகச் சேர்ந்து பெரிய கல்லாக உருவாகி விடுகின்றன. சிறுநீரகத்தில் கரைப்பான்கள் சுரப்பதில், பரம்பரையாகத் தடை கொண்டவர்களுக்கு, கல் உருவாவது சகஜம். அடிக்கடி தொற்று ஏற்பட்டாலோ, சிறுநீர் அடர்த்தியாக இருந்தாலோ, அடிக்கடி வெகுநேரம் சிறுநீரை அடக்குபவர்களுக்கோ கூட, கரைப்பான்கள் சுரப்பதில் பிரச்னை ஏற்படும். மூட்டு வீக்கத்தால் பாதிக்கப்படுபவர்களின் உடலில் உப்பு அதிகம் சுரப்பதாலும், சிறுநீரகத்தில் கல் உருவாகும்.
எந்த அறிகுறியும் தெரியாத சிறுநீரகக் கல்லை, அல்ட்ரா சவுண்டு ஸ்கேன் அல்லது எக்ஸ்-ரே எடுத்து பார்த்து அறிந்து கொள்ளலாம். வலி போன்ற பொதுவான அறிகுறிகளைச் சொன்னாலே, கல் இருக்கிறதா என்பதை பரிசோதிக்க, இது போன்ற பரிசோதனைகளை எடுக்குமாறு, டாக்டர் பரிந்துரைப்பார். சில நேரங்களில், ஐ.வி.பி., என்ற, நரம்பில் சாயம் ஏற்றி, கல் இருக்கும் இடத்தையும், அதன் அளவையும் கண்டறியும் பரிசோதனையும் செய்யப்படுகிறது. கற்களை நீக்க, பெரும்பாலான நேரங்களில் கடுமையான சிகிச்சை முறைகள் மேற்கொள்ளப்படுவதில்லை. நாள் ஒன்றுக்கு, நான்கைந்து லிட்டர் தண்ணீர் குடிப்பவருக்கு, சிறுநீரகத்தில் கல் இருந்தாலும், சிறுநீர் மூலம் வெளியேறி விடும். வலி ஏற்பட்டால், வலி நிவாரணி மாத்திரைகள் சாப்பிடலாம். கல்லில் உள்ள ரசாயனங்கள் குறித்து அறிந்து கொண்டால், அதை வைத்து, மருந்து, உணவுக் கட்டுப்பாடுகளை டாக்டர் பரிந்துரைப்பார். தொடர்ந்து கடும் வலி, மிகப்பெரிய கல் ஆகியவை இருந்தால், அறுவை சிகிச்சை மூலம் மட்டுமே அதை அகற்ற முடியும். கல் வளர்ந்து கொண்டே இருப்பது, தொடர் தொற்று ஆகியவை, சிறுநீரகத்தை பாதிக்கும் என்பதால், இதுபோன்ற நிலைகளில், அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது. சிறுநீரகத்தை திறந்து, அறுவை சிகிச்சை மேற்கொள்வது இல்லை. கல் இருக்கும் இடத்தில், உடலின் மேற்புறம், மின் அலைகள் உருவாக்கப்படுகிறது. இந்த அதிர்வலைகள், கல்லைத் தாக்கி, அதை உடைக்கின்றன. பொடியான கற்கள், சிறுநீர் வழியே வெளியேறி விடும். சிறுநீர் பாதையை கல் அடைத்து கொண்டால், செயற்கை குழாய் பொருத்தி கல்லை அகற்றலாம். வேறு சிகிச்சை முறைகளும் உள்ளன. இந்த உபாதை, 21ம் நூற்றாண்டைச் சேர்ந்தது எனக் கருத வேண்டாம். 7,000 ஆண்டுக்கு முன்னால் இறந்த மனிதர்களிடமும் இது காணப்பட்டது. தற்போது சிறு வயதினர், குறிப்பாக குழந்தைகளிடம் இந்த உபாதை காணப்படுகிறது. சீனாவில், பால் பவுடரில் உள்ள மெலாமைன் என்ற பொருளால், குழந்தைகளுக்கு சிறுநீரகக் கல் உருவாவதாகக் கண்டறியப்பட்டுள்ளது. மற்ற நாடுகளில், குழந்தைகள் அதிக உடல் எடையுடன் இருப்பது, உடல் பயிற்சி இல்லாமல் இருப்பது, காற்றூட்டப்பட்ட குளிர்பானங்களை குடிப்பது போன்ற காரணங்களால், கல் உருவாகிறது.
சிறுநீரகக் கல் உருவாவதை தடுக்க இயற்கை வழிமுறைகள் உள்ளன.
* பச்சை டீ அல்லது பால் கலக்காத டீ குடிப்பது நல்ல பலனைத் தரும். அதில் உள்ள ஆன்டியாக்சிடன்ட் தன்மை, சிறுநீரகத்தில் தொற்று ஏற்படாமல் தடுக்கும். சிறுநீர் உற்பத்தியை அதிகரிக்கும்.
* சாத்துக்குடி, எலுமிச்சை சாறு குடிப்பது நல்லது. அவற்றில் உள்ள அமிலம், சிறுநீரில் கலப்பதால், கல் உருவாகும் வாய்ப்பைத் தடுக்கிறது.
* வாழைத் தண்டு சாப்பிடுவது, அதன் சாறை வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை குடிப்பது ஆகியவை நல்ல பலனைத் தரும்.
* மட்டன், மீன் சாப்பிடுவதைக் குறைப்பதும் கல் உருவாவதை தடுக்கும்.
* தினமும் இரண்டரை முதல் மூன்று லிட்டர் தண்ணீர் பருகுவது மிக மிக நல்லது. கூடவே, தினமும் உடற்பயிற்சியும் செய்ய வேண்டும். தூங்க செல்வதற்கு முன், ஒரு கிளாஸ் தண்ணீர் குடித்து விட்டு தூங்குவ துநல்லது
செல்வங்களில் மிகவும் மேலானது நல்ல மனைவியே!!!
''அல்லாஹ்வின் திருப்தியை மட்டுமே நாடி நீர் எதைச் செலவு செய்தாலும் அதற்காகக் கூலி வழங்கப்படுவீர். உமது மனைவியின் வாயில் நீர் ஊட்டும் உணவு உட்பட'' என்று அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: ஸஃத் பின் அபீவக்காஸ் ரளியல்லாஹு அன்ஹு,
''உண்ணும் போதும், உடுத்தும் போதும் மனைவியை விட்டு விடாதீர்கள். மனைவியிடம் வெறுப்பை வீட்டிலே தவிர வேறெங்கும் வெளிப்படுத்தாதீர்கள்.'' (அறிவிப்பாளர்: முஆவியா ரளியல்லாஹு அன்ஹு. நூல்: அஹ்மத் 19160)
''இறை நம்பிக்கை கொண்ட ஓர் ஆண் இறை நம்பிக்கையுள்ள ஒரு பெண்ணை (முழுமையாக) வெறுத்து ஒதுக்க வேண்டாம். அவளிடமிருந்து அவர் ஒரு குணத்தை வெறுத்தாலும் மற்றொரு குணத்தைக் கண்டு திருப்தி கொள்ளட்டும்'' என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல்: முஸ்லிம் 2915)
''பெண் (வளைந்த) விலா எலும்பிலிருந்து படைக்கப்பட்டிருக்கிறாள். ஒரே (குண) வழியில் உனக்கு அவள் ஒருபோதும் இணங்கமாட்டாள் அவளை நீ அனுபவித்துக்கொண்டே இருந்தால் அவளின் கோணல் இருக்கவே அனுபவிக்க வேண்டியது தான். அவளை நீ (ஒரேயடியாக) நிமிர்த்தப்போனால் அவளை ஒடித்தே விடுவாய். அவளை ஒடிப்பது என்பது அவளை மணவிலக்கச் செய்வதாகும்'' என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல்: முஸ்லிம் 2913)
''நீங்கள் உங்கள் மனைவியரை அடிமையைப் போல் அடிக்க வேண்டாம். பிறகு அதே நாளின் இறுதியில் அவர்களுடனேயே உறவு கொள்வீர்கள்'' என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் ஸம்ஆ ரளியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரி 5204)
ஒரு மனிதர் நபியவர்களிடம் ''மனைவிக்குக் கணவன் செய்ய வேண்டிய கடமைகள் என்ன?'' என்று கேட்டார் அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், ''நீ உண்ணும் போது அவளுக்கு உணவளிப்பதும் நீ அணியும் போது அவளுக்கு அணிவிப்பதும் (கண்டிக்கும் போது) முகத்தில் அடிக்காதிருப்பதும் கெட்ட வார்த்தைகளைப் பயன்படுத்தாமல் இருப்பதும் வீட்டில் தவிர மற்ற இடங்களில் வெறுக்காமல் இருப்பதும் ஆகும்'' என்று கூறினார்கள். (அறிவிப்பவர்: முஆவியா பின் ஹைதர் ரளியல்லாஹு அன்ஹு, நூல்கள்: அபூதாவூத் 1830, அஹ்மத் 19162)
''இறை நம்பிக்கை கொண்ட வர்களில் முழுமையான நம்பிக்கை கொண்டவர் அவர்களில் நற்குணம் கொண்டவரே! உங்களில் சிறந்தவர் உங்கள் மனைவியரிடம் நற்பண்பால் சிறந்து விளங்குபவரே!'' என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல்: திர்மதி 1082)
''தன் பொறுப்பில் உள்ளவர்களை (கவனிக்காமல்) வீணாக்குவது அவன் பாவி என்பதற்குப் போதுமானதாகும்'' என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னார்கள். (அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் இப்னு அம்ர் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: அபூதாவூத் 1442)
''உங்களில் ஒவ்வொருவரும் பொறுப்பாளர் ஆவார். தன் பொறுப்புக்கு உட்பட்டவை பற்றி அவர் விசாரிக்கப்படுவார்.
ஆட்சித் தலைவரும் பொறுப்பாளரே! தன் தன் குடிமக்கள் பற்றி அவர் விசாரிக்கப்படுவார். ஆண்மகன் (குடும்பத் தலைவன்) தன் மனைவி மக்களின் பொறுப்பாளன் ஆவான். தன் பொறுப்புக்கு உட்பட்டவர்கள் பற்றி அவன் விசாரிக்கப்படுவான்.
பெண் (மனைவி) தன் கணவனின் வீட்டிற்கும் அவனுடைய குழந்தைகளுக்கும் பொறுப்பாளி ஆவாள். தன் பொறுப்புக்கு உட்பட்டவை குறித்து அவள் விசாரிக்கப்படுவாள்.
பணியாள் தன் எஜமானின் உடமைகளுக்குப் பொறுப்பாளியாவான். அவனும் தன் பொறுப்புக்கு உட்பட்டவை குறித்து விசாரிக்கப்படுவான்'' என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் பின் உமர் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரீ 5200)
''நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தமது மனைவியர்களில் ஒருவரிடம் இருந்தார்கள். மூமின்களின் அன்னையரில் ஒருவர் பணிப்பெண் ஒருவரிடம் உணவுள்ள தட்டு ஒன்றைக் கொடுத்தனுப்பினார்கள்.
வீட்டிலிருந்த நபி அவர்களின் (மற்றொரு) மனைவி அந்தப் பணிப் பெண்ணின் கையைத் தட்டி அதை உடைத்து விட்டார்கள். நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் அந்த உடைந்த தட்டை ஒன்று சேர்த்து உணவை அதில் எடுத்து வைத்து (தம் தோழர்களிடம்) உண்ணுங்கள் என்று கூறினார்கள்.
அவர்கள் உண்டு முடிக்கும் வரை தட்டையும் அதைக் கொண்டு வந்த பணிப் பெண்ணையும் அங்கேயே நிறுத்திக் கொண்டார்கள். (அனைவரும் உண்டு முடித்த பின்பு) உடைந்த தட்டைத் தம்மிடமே வைத்துக் கொண்டு (உடையாத) நல்ல தட்டைக் கொடுத்து விட்டார்கள்.'' (அறிவிப்பாளர்: அனஸ் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரீ 2481)
திருமணமாகாத இளம்பெண்கள் செல்ஃபோன் உபயோகிக்கத் தடை !
முஸஃபர் நகர் மாவட்டத்திலுள்ள லன்க் என்ற கிராமத்தில் அனைத்து சாதி மற்றும் மத பஞ்சாயத்தைச் சேர்ந்த பொதுமக்கள் அனைவரும் சேர்ந்து செல்ஃபோனால் இளம்பெண்களுக்கு ஏற்படும் தீய விளைவுகள் குறித்து விவாதித்து இந்த உத்தரவை பிறப்பித்துள்ளனர்.
திருமணமாகாத இளம்பெண்கள் காதல் வலையில் சிக்கி தங்கள் வாழ்க்கையை சீரழித்துக் கொள்வதைத் தடுக்கும் முகமாகவே இந்த தடை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக கிராம பஞ்சாயத்தின் செய்தித் தொடர்பாளர் ராஜேந்திர் கூறினார்.
திருமணமாகாத இளம்பெண்களையும், கணவனை இழந்த விதவைப் பெண்களையும், வெளிநாட்டில் பணிபுரியும் கணவன்மார்களின் மனைவிகளையும் குறி வைத்து தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் சமூக விரோத கும்பல்கள் செயல்பட்டு வருகின்றன. இது போன்ற பெண்களுக்கு தவறவிட்ட செல்பேசி அழைப்பு (மிஸ்டு கால்) கொடுப்பது, பின்னர் அதன் மூலம் ஏற்படும் தொடர்பை பயன்படுத்தி அவர்களை தங்கள் காம வலையில் சிக்க வைத்து அவர்களது வாழ்வை சீரழிப்பது, அதன் பிறகு அவற்றை வீடியோக்களில், நிழற்படங்களில் பதிவு செய்து அவர்களை மிரட்டி அவர்களது பணம், நகைகளை சூறையாடுவது, இவை எல்லாவற்றிற்கும் மேலாக தன் நண்பர்களுக்கும் அவர்களை இரையாக்குதல், விபச்சார விடுதிகளில் அவர்களை விற்று விடுதல் போன்ற சமூக விரோத செயல்களில் சிலர் ஈடுபடுவதை அன்றாடம் செய்திகளில் பார்க்க நேரிடுவது குறிப்பிடத்தக்கது.
வெளிநாடு வாழ்க்கையில்
வளைகுடா நாடுகளில் இவர்கள் வாழும் சூழல் ரெம்ப கொடுமையான ஒன்று. தங்கியிருக்கும் ரூம்களில் இவர்களுக்கு சொந்தம் என்று சொல்லும் இடம் ஒரு கட்டில் போடுவதற்கான இடம் தான். அந்த கட்டிலில் தான் இவர்களின் வாழ்க்கையே முடிகிறது. அந்த கட்டிலின் தலை பகுதியில் ஒரு சிறிய ஷெல்ப் இருக்கிறது. அதில் அவருக்கு தேவையான சில அத்தியாவசிய பொருட்கள் இருக்கின்றன. அத்துடன் ஒரு தொலைகாட்சி பெட்டியும் இருக்கிறது.
தங்களுடைய ஆடைகள் அனைத்தும் கட்டிலின் அடியில் அட்டை பெட்டியில் வைத்து கொள்கிறார்கள். தனியாக தட்டு, டம்ளர், போன்ற பொருட்களும் இருக்கின்றன். இதே போல் ஐந்துக்கும் மேற்பட்ட படுக்கைகள் ஒவ்வொரு அறையிலும் காணப்படுகின்றன. பக்கத்தில் ஒரு சமையல் அறையும் இருக்கின்றது.
அவரவர் கம்பெனிகளை பொறுத்து வேலை நேரம் இருக்கிறது. குறைந்தது பத்தில் இருந்து பனிரெண்டு மணி நேரம் வேலை செய்கிறார்கள். மாலையில் தான் தங்களுடைய அறைகளுக்கு வருகிறார்கள். வந்தவுடன் குளித்துவிட்டு தங்களுடைய சமையல் வேலைகளை பார்கிறார்கள். சில அறைகளில் தங்கியிருக்கும் நண்பர்கள் ஒன்றாக சேர்ந்து சமையல் செய்கிறார்கள். சில அறைகளில் இருப்பவர்கள் தனி தனியாக சமையல் செய்து தங்களில் ஷெல்பில் வைத்து கொள்கிறார்கள்.
சமையல் வேலைகள் முடிந்தவுடன் தங்களின் கட்டிலில் உள்ள தொலைகாட்சியில் அவரவர் விருப்பத்திற்கு ஏற்றவாறு நிகழ்ச்சிகளை பார்கின்றனர். பார்த்து முடித்துவிட்டு அப்படியே அந்த கட்டிலில் படுத்து தூங்கி விடுகின்றனர்.
வாரத்தின் ஏழு நாட்களில் ஆறு நாட்கள் இப்படி தான் போகின்றது. வெள்ளி கிழமை விடுமுறை நாளாக இருந்தாலும் சிலர் அன்றும் வேலைக்கு சென்று விடுகிறார்கள். சிலர் தனது நண்பர்கள அல்லது உறவினர்களின் அறைகளுக்கு சென்று அவர்களுடன் உறவாடி அன்றைய பொழுதை கழிக்கிறார்கள். இவ்வாறு தான் பெரும்பாலான குடும்ப தலைவர்களின் வாழ்க்கை கழிகின்றது.
இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை தங்களுடைய சொந்த ஊர்களுக்கு செல்கிறார்கள். தான் வெளிநாட்டில் படும் கஷ்டங்களை தனது மனைவியிடமும், குழந்தைகளிடமும் மறைக்கிறார்கள். இதனால் குழந்தைகளுக்கு அப்பாவின் மேல் எந்தவித ஈடுபாடும் இருப்பது இல்லை. பண தேவைகளுக்கு மட்டும் அப்பாவை நாடுகின்றனர்.
அப்பாவின் கண்டிப்புகள் இல்லாததால் இவர்கள் வாழ்க்கையில் ஏதாவது ஒரு வழியில் திசை மாறி விடுகிறார்கள். எங்கள் ஊரில் இது போல் நிறைய பேரை பார்க்க முடியும். தனது இளமைகளை வெளி நாட்டில் தொலைத்து விட்டு, இனிமேல் குழந்தைகள் தான் உலகம் என்று வரும் தந்தைகளுக்கு பெருத்த ஏமாற்றங்களே!!
உங்கள் உழைப்புகளை குழந்தைகளுக்கு எடுத்து சொல்லுங்கள். பணத்தின் மதிப்பை அவர்களுக்கும் தெரிய படுத்துங்கள். காலம் கடந்த அறிவுரைகளும், படிப்பினைகளும் குப்பைகளில் தான். விழித்து கொள்ளுங்கள்!!!!
சமீபத்தில் நான் பணம் அனுப்புவதற்கு வங்கிக்கு சென்றிருந்தேன். அங்கு ஒருவர் தனது பணத்தை இரண்டு வங்கி கணக்குகளுக்கு அனுப்பி கொண்டிருந்தார். நான் அவரிடம் "ஏன் இரண்டு வங்கி கணக்குக்கு அனுப்புகிறீர்கள் ? ஒன்றில் அனுப்பினால் உங்களுக்கு சர்வீஸ் சார்ஜ் குறையுமே என்று கேட்டேன் " அதற்கு அவர் " ஒன்று என்னுடைய மனைவியின் வங்கி கணக்கு, மற்றொன்று என்னுடைய மகனுடையது, மகன் கல்லூரியில் படிக்கிறான். அம்மாவிடம் பணம் கேட்டால் அவன் அம்மா ஏன்? ஏதற்கு என்று கேட்பதால், இரண்டு பேருக்கும் அடிக்கடி தகறாறு வருகின்றது என்று என்னிடம் புலம்பினான். அதனால் தான் இரண்டு பேருக்கும் தனிதனியாக போடுகிறேன்" என்றார்.
அவருக்கு என்ன சொல்வது என்று எனக்கு தெரியவில்லை.
ஸலாம் கூறுவதன் சிறப்பு
இஸ்லாத்தில் சிறந்தது:
இந்த உலகத்தைப் படைத்து அதில் பலவகையான உயிரினங்களைப் உருவாக்கி அவற்றிலே மிகச்சிறந்த படைப்பாக மனிதனைப் படைத்த இறைவன் அவர்கள் எவ்வாறு வாழவேண்டும் என்ற அழகிய வழிமுறைகளையும் அவனது இறுதிதூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் மூலமாகத் தந்துள்ளான். அவற்றில் ஒன்று தான் முகமன் (ஸலாம்) கூறுதல் ஆகும்.
இன்றைய காலக்கட்டங்களில், நம்மிடையே ஒருவரை ஒருவர் சந்திக்கும் போது ஸலாம் கூறுதல் என்பது மிக அரிதாகிவிட்டது. அப்படியே சொன்னாலும் தெரிந்தவர், தெரியாதவர் என்ற பாகுபாடு பார்த்து ஸலாம் கூறி வருகிறோம். நபி (ஸல்) அவர்கள் தெரிந்தவர்கள், தெரியாதவர்கள் என அனைவருக்கும் ஸலாம் கூறுவதை வலியுறுத்திக் கூறியுள்ளார்கள்.
ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம், ‘இஸ்லாமி(யப் பண்புகளி)ல் மிகவும் சிறந்தது எது?’ என்று கேட்டார். நபி(ஸல்) அவர்கள், ‘(பசித்தவருக்கு) உணவளிப்பதும், உமக்கு அறிமுகமானவருக்கும் உமக்கு அறிமுகமற்றவருக்கும் ஸலாம் சொல்வதுமாகும்’ என்று பதிலளித்தார்கள்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி),
ஆதாரம்: ஸஹீஹூல் புகாரி 6236
1. இஸ்லாத்தில் மிகச் சிறந்த விஷயங்களில் ஒன்று அறிந்தவருக்கும் , அறியாதவருக்கும் ஸலாம் கூறுவதாகும்.
2. ஒரு முஸ்ம் மற்றொரு முஸ்முக்கு செய்ய வேண்டிய கடமைகளில் ஒன்றும் ஸலாம் கூறுதலாகும்.
3. ஒரு சகோதரரை சிரித்த முகத்துடன் சந்திப்பதும். நற்காரியங்களில் உள்ளதாகும்.
4. முஸாஃபஹா என்பது ஒருவரைச் சந்திக்கும்போது அவருடைய வலது கரம் பற்றுவதாகும். ஒரு கையினால் மட்டுமே முஸாஃபஹா செய்ய வேண்டும். இரு கரம் பற்றிக் குலுக்குவது நபி வழிக்கு மாற்றமானதாகும்.
5. இருவர் சந்திக்கும் போது முதல் ஸலாம் கூறுபவரே இறைவனிடத்தில் நெருக்கத்திற்குரியவராவார்.
6. நபி (ஸல்) அவர்கள் கூறியவாறு ஸலாம் கூறுவதினால் கிடைக்கும் நன்மைகளை நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.
7. சிறியவர் பெரியவருக்கும் , நடந்து செல்பவர் உட்கார்ந்திருப்பவருக்கும் சிறிய கூட்டம் பெரிய கூட்டத்திற்கும் ஸலாம் கூறவேண்டும். ஒரு கூட்டத்தாரின் சார்பாக ஒருவர் மட்டுமே ஸலாம் கூறினால் போதுமானதாகும். ஒரு கூட்டத்தாருக்கு ஸலாம் கூறப்படும் போது அவர்களின் சார்பாக ஒருவர் மட்டும் பதில் ஸலாம் கூறினால் போதுமானதாகும். பெரியவரும் சிறியவருக்கு ஸலாம் கூறலாம்.
8. ஒவ்வொரு சந்திப்பிற்கும் ஸலாம் கூறுவது சிறப்பிற்குரியதாகும்.
9. ”அஸ்ஸலாமு அலைக்க” என்று கூறுவது கூடாது., இது இறந்தவர்களுக்குரியதாகும்.
10. வார்த்தைகள் இல்லாமல் ஒருவரைச் சந்திக்கும் போது முன்கைகளாலும் தலையைத் தாழ்த்தியும் சைக்கினையின் மூலமும் ஸலாம் கூறக்கூடாது. இது யூதர்கள் மற்றும் கிறிஸ்தவர்களுடைய கலாச்சாரம் ஆகும்.
11. தூரத்தில் உள்ளவர்களுக்கு ”அஸ்ஸலாமு அலைக்கும் ” என்று வார்த்தைகளைக் கூறி கைகளை அசைத்து ஸலாம் கூறலாம்.
12. ஒருவருக்கு ஸலாம் கூறும் பொழுது அவருக்கு மற்றொரு முறை ஸலாம் கூறலாம். இவ்வாறு மூன்று முறை கூறிக்கொள்ளலாம்.
மற்ற முகமன் கூறுவதிலுள்ள சிக்கல்கள்: -
இன்றைய காலக்கட்டத்தில் வழக்கத்தில் வணக்கம், நல்ல காலை பொழுது அல்லது நல்ல மாலைப் பொழுது, காலை, மாலை வணக்கம் போன்ற பலவிதமான முகமன்கள் இருக்கின்றன. அவைகளை எல்லா நேரங்களிலும் அல்லது எல்லா சூழ் நிலைகளிலும் பொருந்தக் கூடியதா என்றால் நிச்சயமாக இல்லை. ஒருவருடைய மனைவியோ அல்லது வேறு உறவினரோ இறந்து அவர் சோகத்தில் ஆழ்ந்திருக்கின்ற வேளையில் அவரிடம் சென்று Good Morning அல்லது Good Evenining என்று கூறினால் அது எப்படி அவரை கேலிக்குரியதாக்கும் என நாம் சிந்திக்கக் கடமைப்பட்டுள்ளோம். இவ்வாறு மனிதர்களால் உருவாக்கப்பட்ட முகமன்கள் அனைத்தும் குறையுடைதாகவே இருக்கிறது.
ஆனால் அனைத்தும் அறிந்தவனான அல்லாஹ் நமக்கு கற்றுத்தந்த இந்த அஸ்ஸலாமு அலைக்கும் (உங்கள் மீது இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக) என்ற இந்த முகமன் காலை, மாலை, இரவு போன்ற எந்த நேரத்திலும், துக்கம், இன்பம் போன்ற எல்லா சூழ்நிலைகளிலும் ஒருவருக்கு கூறுவதற்கு மிகப் பொருத்தமானதாக இருக்கிறது.
எனவே சகோதர சகோதரிகளே! அல்லாஹ்வால் அருளப்பட்டு முஹம்மது நபி (ஸல்) அவர்களால் நடைமுறைப்படுத்தப்பட்ட சலாத்தை நாம் ஒவ்வொருவரும் மற்றவரிடம் பரப்பி நம்முடைய உள்ளங்களிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்த வல்ல அல்லாஹ் அருள்புரிவானாகவும்.
மறக்க முடியா பாடகர் முஹம்மத் ரஃபி, நௌஷாத் அலியுடன்.
மறக்க முடியா பாடகர் முஹம்மத் ரஃபி, நௌஷாத் அலியுடன்.
மறக்க முடியா பாடகர் முஹம்மத் ரஃபி, நௌஷாத் அலியுடன்.
பழைய ஆசாமிகளுக்கே இவரை நன்கு தெரியும்,என்றாலும் நான் பழைய ஆசாமி அல்ல.
நன்றி:- தினமணி ஈகைப்பெருநாள் மலர்.
சினிமா உலகிற்குச் செல்பவர்கள் ஒழுக்கமாக இருப்பது கடினம் என்ற கருத்தைப்
பொய்யாக்கியவர் முஹம்மத் ரஃபி.
பஞ்சாப் மாநிலம் கோட்லா சுல்தான்பூருல் 1924-ல் பிறந்தார். பள்ளிக்கூட நிழல்
கூட இவர் மீது படவில்லை. ஆனால், தொமுகை, குர்ஆன் உள்ளிட்ட மார்க்கக் கல்வியைத்
தமது எட்டு வயதில் முழுமையாகக் கற்றார்.
சிறு வயதில் தந்தையுடன் மசூதிக்குச் செல்லும் போது மசூதி அருகில் மார்க்கம்
தொடர்பான பாடல்களைப் பாடும் முதியவரை ரஃபி தினமும் சந்திப்பார்.
முதியவரின் பாடலை வீட்டுக்கு வந்து ரஃபி முணுமுணுப்பார். ரஃபியின் குரலுக்கு
வீட்டுக்குள் கிடைத்த வரவேற்பும் பாராட்டும் அவருக்குள் பின்னணிப் பாடகராகும்
ஆசையைத் தூண்டின. ஆனால் தந்தை முஹம்மத் அலீம், தாய் அல்லா ரக்காஹ் இதற்குச்
சம்மதிக்கவில்லை. இதற்கிடையே தமது சகோதரர் ஹாமீதின் உதவியுடன் மும்பைக்கு
வந்தார். திரைப்பட வாய்ப்பைத் தேடிப் பல்வேறு இசையமைப்பாளர்களைச் சலிக்காமல்
சந்தித்தார்.
ஒரு பஞ்சாபிப் படம்தான் அவருக்குப் பின்னணிப் பாடகர் என்ற அடையாளத்தைத் தந்தது.
இதையடுத்து பல்வேறு ஹிந்திப் படங்களில் பாடத் தொடங்கினார்.
மேலா, ஆன், தீதார், பைஜு பாவரா, தோஸ்தி, தோஸ்த், தோ ராஸ்தே, கீத், ஷாகிருத்,
மேரே மெஹபூப் உள்ளிட்ட படங்கள் அவரது புகமுக்கு மகுடம் சூட்டின.
“ஓ துனியா கே ரக்வாலே’ (படம்: பைஜு பாவரா), “யா ஹு’ (ஜங்லி), “கைசெ ஜீதே ஹைன்
பஹ்லா’ (தோஸ்த்), “சாஹுவ்கா துஜேஹ்’ (தோஸ்தி), மேரே மித்வா (கீத்) எனத்
தொடங்கும் பாடல்களை மென்மையான குரலால் பாடி இசைப் பித்தர்களைத் தம் பக்கம்
வளைத்துக் கொண்டவர் ரஃபி.
திரைப்படத் துறையில் இருந்தும் ஐந்து வேளைத் தொமுகையாளியாகத் திகழ்ந்ததுதான்
முஹம்மத் ரஃபி மீது இன்றும் கூட முஸ்லிம்கள் மதிப்பும் மரியாதையும்
வைத்திருக்கக் காரணம். திரைப்படத்துறையில் இருந்தும் திரைப்படங்கள் பார்க்காத
ஒரே கலைஞர் முஹம்மத் ரஃபி. தாம் பாடிய பாடல்களுக்கான காட்சிகளையும் அவர்
பார்த்ததில்லை என்கின்றனர் அவரது குடும்பத்தினர்.
1972-ல் புனித ஹஜ் பயணம் மேற்கொண்டார். அந்த ஹஜ் முடிந்ததும் இந்தியாவுக்குத்
திரும்பாமல் மெக்காவிலேயே ஓராண்டு தங்கியிருந்து அடுத்த ஹஜ்ஜையும்
நிறைவேற்றினார்.
தாம் வசிக்கும் மும்பை பாந்த்ரா பகுதியில் மசூதி ஒன்றைக் கட்ட வேண்டும் என தனது
கடைசி காலத்தில் விருப்பப்பட்டார். 1980 ஜூலை 31-ம் தேதி அவர் காலமானார். பின்
அவரது மகன்கள் பாந்த்ராவில் மசூதியைக் கட்டினர்.
அவரது இரண்டு மகள்கள், 5 மகன்களையும் திரைப்படத் துறையின் நிழல் கூட படாதவாறு
வளர்த்தார். அவரது மனைவி பல்ஃகஸ் பேகமும் ரஃபியின் நற்செயல்களுக்கு உற்ற
துணையாக இருந்தார்.
ஹிந்தி உள்பட பல்வேறு மொழிகளில் 36 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களைப்
பாடியுள்ள ரஃபி, பிலிம்பேர் உள்பட பல விருதுகளைப் பெற்றுள்ளார்.
இஸ்லாமிய நெறிமுறைகளின்படி வாழ்ந்த முஹம்மத் ரஃபி, திரைப்படத்துறையில் உள்ள பிற
முஸ்லிம் கலைஞர்களுக்கு ஓர் அழகிய முன்மாதிரி.