o ஜும்ஆவின் பாங்கிற்குப் பிறகு வியாபாரம் செய்தல்
o விற்பனைப் பொருளின் குறைகளை மறைத்தல்
o நஜஷ் - வியாபாரத்தில் வஞ்சித்தல
o ஜும்ஆவின் பாங்கிற்குப் பிறகு வியாபாரம் செய்தல்
அல்லாஹ் கூறுகிறான்: “இறைநம்பிக்கை கொண்டோரே! ஜும்ஆ நாளில் தொழுகைக்காக அழைக்கப்படும் போது அல்லாஹ்வை நினைவு கூர்வதின் பக்கம் விரைந்து செல்லுங்கள். வியாபாரத்தை விட்டு விடுங்கள். நீங்கள் அறிந்தவர்களாக இருந்தால் இது உங்களுக்கு சிறந்ததாகும்” (62:9)
சிலர் இரண்டாம் பாங்கு கூறப்பட்ட பிறகும் கடைகளில் வியாபாரம் செய்கின்றனர். அல்லது பள்ளிகளுக்கு முன்னால் தொடர்ந்து பொருட்களை விற்கிறார்கள். அவர்களிடம் வாங்குபவர்களும் பாவத்தில் கூட்டாகின்றனர். மிஸ்வாக் குச்சியை வாங்கினாலும் சரியே. அறிஞர்களின் சரியான கூற்றின்படி இத்தகைய வியாபாரம் தவறானதாகும். ஹோட்டல்கள், பேக்கரிகள் மற்றும் தொழிற்சாலைகளின் உரிமையாளர்கள் சிலர் தங்கள் பணியாளர்களை ஜும்ஆ தொழுகையின் நேரத்தில் வேலை செய்தாக வேண்டும் என்று நிர்பந்திக்கின்றனர். வெளிப்படையில் இத்தகையோரின் இலாபம் அதிகரித்தாலும் உண்மையில் அவர்களுக்கு நஷ்டம் தான் அதிகரிக்கின்றது. ஆனால் பணிபுரியக் கூடியவர்கள் நபி (ஸல்) அவர்களின் பொன்மொழியின் தேட்டத்திற்கேற்ப செயல்படுவது அவசியமாகும். ஏனெனில்,
‘அல்லாஹ்வுக்கு மாறு செய்யும் விஷயத்தில் மனிதனுக்குக் கட்டுப்படக் கூடாது’ என்பது நபிமொழி. (அஹ்மத்)
o விற்பனைப் பொருளின் குறைகளை மறைத்தல்
‘ஒரு உணவுக் குவியலின் பக்கம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சென்றார்கள். அதில் அவர்கள் தம் கையை நுழைத்தபோது அவர்களுடைய விரல்களில் ஈரம் பட்டது. உணவு வியாபாரியே! என்ன இது? என்று வினவினார்கள். அதற்கு அவர் அல்லாஹ்வின் தூதரே! மழை நீர் பட்டு விட்டது என்று பதிலளித்தார். மக்கள் பார்க்கும் விதமாக உணவுப் பொருளின் மேற்பகுதியில் அதைப் போட்டிருக்க வேண்டாமா? யார் ஏமாற்றுகிறாரோ அவர் நம்மைச் சார்ந்தவரல்ல என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்’ அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்: முஸ்லிம்.
இறையச்சமில்லாத பெரும்பாலான வியாபாரிகள், பொருளின் குறையை மறைக்க பல விதத்திலும் முயலுகின்றனர். அதன் மீது டேப் ஒட்டி விடுகின்றனர். அல்லது அதைப் பெட்டியின் அடியில் போட்டு விடுகின்றனர். அல்லது ஏதாவது ரசாயனத்தைப் பயன்படுத்தி அழகுபடுத்தி விடுகின்றனர். வாகனத்தில் இஞ்சினின் ஆரம்ப சத்தத்தில் எழக்கூடிய குறையை மறைத்து விடுகின்றனர். குறைகளுடையப் பொருளை ஒருவன் வாங்கிச் சென்றால் அது சீக்கிரம் பழுதாகி விடுகிறது. இன்னும் சிலர் பொருள் காலாவதி ஆகக்கூடிய தேதியை மாற்றி விடுகின்றனர். அல்லது பொருளைப் பார்ப்பதற்கோ பரிசோதிப்பதற்கோ அனுமதிப்பதில்லை. வாகனங்களை அல்லது கருவிகளை விற்பவர்களில் பெரும்பாலோர் அவற்றின் குறைகளைத் தெளிவு படுத்துவதில்லை. இவை யாவும் விலக்கப்பட்டவையாகும்.
அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘ஒரு முஸ்லிம் பிற முஸ்லிமுக்குச் சகோதரனாவான். தன் சகோதரனுக்கு குறையுள்ள பொருளை விற்கின்ற எந்த முஸ்லிமுக்கும் அதைத் தெளிவு படுத்தாமலிருப்பது ஹலால் இல்லை’ அறிவிப்பவர்: உக்பா பின் ஆமிர் (ரலி) நூல்: இப்னுமாஜா.
சிலர் கருதுகின்றனர். வாகனங்களை ஏலம் விடும்போது நான் இரும்புகளை விற்கப் போகிறேன் என்று மக்களிடம் கூறி விட்டால் தம்முடைய பொறுப்பு நீங்கி விடும் என்று. (பழுதான வாகனங்களை வீற்ற குற்றம் வராது என்று) இப்படிப்பட்ட வியாபாரம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியது போல அபிவிருத்தியை – பரக்கத்தை அழித்து விடக் கூடியதாகும்.
‘விற்பவரும் வாங்குபவரும் (அவ்விடத்தை விட்டும்) பிரிந்து செல்லாத வரை வியாபாரத்தை ரத்து செய்ய உரிமை பெற்றவராவர். அவ்விருவரும் உண்மை கூறி (எதையும் மறைக்காது) தெளிவு படுத்தினால் அவர்களுடைய வியாபாரத்தில் அவர்களுக்கு அபிவிருத்தி அளிக்கப்படும். அவ்விருவரும் பொய் கூறி எதையேனும் மறைத்தால் அவர்களின் வியாபாரத்தில் அபிவிருத்தி அழிக்கப்படும் (நபிமொழி) அறிவிப்பவர்: ஹகீம் பின் ஹிஸாம் (ரலி) நூல்: புகாரி.
o நஜஷ் – வியாபாரத்தில் வஞ்சித்தல்
நஜஷ் என்பது பொருளை வாங்காத ஒருவர் (இவர் வியாபாரியால் நிறுத்தப் பட்டிருப்பார்) அதன் விலையை அதிகப் படுத்துவதாகும். பிறரை ஏமாற்றுவதும் படிப்படியாக அவரை அதிக விலைக்குக் கொண்டு செல்வதும் தான் இதன் நோக்கமாக இருக்கும். ‘நீங்கள் வஞ்சக வியாபாரம் செய்யாதீர்கள் என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்: புகாரி.
இது ஒரு வகையான ஏமாற்றுதலாகும் என்பதில் ஐயமில்லை. திண்ணமாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘சதி செய்வதும் ஏமாற்றுவதும் நரகிற்கு கொண்டு செல்லும் காரணிகளில் உள்ளவையாகும்’ அறிவிப்பவர்: கைஸ் பின் ஸஅத் (ரலி) நூல்: பைஹகீ.
வியாபாரச் சந்தைகளிலும் ஏலம் நடக்கின்ற இடங்களிலும் மற்றும் வாகனக் கண்காட்சிகளிலும் உள்ள பெரும்பாலான தரகர்கள் விலக்கப்பட்ட காரியங்களை அதிகம் செய்வதால் அவர்களின் சம்பாத்தியம் ஹராமானதாகும். மேலே சொன்ன நஜஷ் எனும் வஞ்சகமான வியாபாரத்திற்கு அவர்கள் உடன்படுவதும் ஹராமான சம்பாத்தியமே. மேலும் வெளியே இருந்து வரும் வாடிக்கையாளர்களிடம் அல்லது வியாபாரியிடம் ஆசை வார்த்தைக் கூறி ஏமாற்றுவதும் ஹராமானதே. (சரக்கு வியாபாரியினுடையதாக இருந்தால் அவரை ஏமாற்றி) சரக்கின் விலையை குறைத்து விடுகின்றனர். ஆனால் இந்த தரகர்களுக்கு சொந்தமான சரக்காக இருந்தால் விலையை ஏற்றி விடுகின்றனர். வாடிக்கையாளர்களையும் வியாபாரிகளையும் வஞ்சிக்கிறார்கள். ஏலத்தின் விலையை அதிகரிக்கின்றனர். இவ்வாறாக இத்தரகர்கள் மனிதர்களை ஏமாற்றி அவர்களுக்கு தீங்கிழைக்கின்றனர்.
Reference By : http://islamkural.com/
தொடர்பு உடையவை :
மக்களின் பார்வையில் சாதாரணமாகி விட்ட தீமைகள்! பகுதி -8
o பெண்கள் நறுமணத்துடன் வெளியே சுற்றுதல்
o அந்நியப் பெண்ணைப் பார்த்தல்
o மானம் இழந்திருத்தல் :http://www.facebook.com/
மக்களின் பார்வையில் சாதாரணமாகி விட்ட தீமைகள்! பகுதி -7
* அந்நியப் பெண்ணுடன் முஸாஃபஹா செய்தல்
* அந்நியப் பெண்ணுடன் தனித்திருத்தல்
* அந்நிய ஆணுடன் பெண் தனியே பயணித்தல் :http://www.facebook.com/
மக்களின் பார்வையில் சாதாரணமாகி விட்ட தீமைகள்! பகுதி -6
o காரணமின்றி பெண் விவாகரத்துக் கோரல்
o ழிஹார்
o மனைவியருக்கிடையில் அநீதமாக நடத்தல் :http://www.facebook.com/
மக்களின் பார்வையில் சாதாரணமாகி விட்ட தீமைகள்! பகுதி -5
* ஒரினப் புணர்ச்சி
* விபச்சாரம்
* கணவனின் படுக்கைக்கு வர மறுத்தல் : http://www.facebook.com/
மக்களின் பார்வையில் சாதாரணமாகி விட்ட தீமைகள்! பகுதி -4
*தொழுகை!
*வேண்டுமென்றே இமாமை முந்துவது
*வெங்காயம், பூண்டு சாப்பிட்டதோடு பள்ளிக்கு வருதல் :http://www.facebook.com/
-3
| சத்தியம் செய்தல் |
| தீயவர்களிடம் அமர்தல் |
| தொழுகையில் அமைதியின்மை | : http://www.facebook.com/
மக்களின் பார்வையில் சாதாரணமாகி விட்ட தீமைகள்! பகுதி -2
* வீணான நம்பிக்கைகள்
* வழிபாடுகளில் முகஸ்துதி
* அபசகுனம் : http://www.facebook.com/
மக்களின் பார்வையில் சாதாரணமாகி விட்ட தீமைகள்! பகுதி -1
*இணை வைத்தல்
*சமாதி வழிபாடு & சூனியம்
* ஜோதிடம், குறி பார்த்தல்