தேர்தலில் யாருக்கு ஆதரவு!! TNTJஅறிவிப்பு!!


ஏப்ரல் 8,: தமிழகம் மற்றும் புதுவை சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஆதரவு என்று முடிவு செய்யப்பட்டது.

முஸ்லிம் சமுதாய வாக்காளப் பெருமக்களே!!! முஸ்லிம் சமுதாயம் கல்வியிலும், வேலை வாய்ப்பிலும் மற்ற சமுதாயத்துக்கு நிகராக முன்னேற வேண்டுமானால் கல்வியிலும் வேலை வாய்ப்புகளிலும் முஸ்லிம்கள் தனி இட ஒதுக்கீட்டைப் பெற்றாக வேண்டும்;


எனவே அதையே முதன்மையான கோரிக்கையாக வைத்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஒவ்வொரு தேர்தலையும் சந்திக்கிறது அனைவரும் அறிந்ததே! முஸ்லிம்களுக்கு வழங்கப்பட்ட 3.5 சதவிகித இட ஒதுக்கீடு போதுமானதல்ல என்ற மனக் குறை பரவலாக முஸ்லிம் சமுதாயத்தில் இருக்கும் நிலையில் இப்ப்பொது சட்ட மன்றத் தேர்தல் வந்துள்ளது.

இதனிடையே திமுக தேர்தல் அறிக்கையில் “கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் சிறுபான்மை சமுதாயத்தினர் உரிய பங்கினைப் பெறுவதற்கு ஏதுவாக நீதியரசர் ரங்கநாத் மிஸ்ரா ஆணையத்தின் பரிந்துரைகளை விரைவில் செயல்படுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மத்திய அரசை வலியுறுத்துவோம்.

சிறுபான்மையினர் நடத்தும் கல்வி நிலையங்களுக்கும், வழிபாட்டுத் தலங்களுக்கும் தேவையான பாதுகாப்பினை வழங்குவோம். இஸ்லாமிய மக்களின் நீண்ட கால கோரிக்கையான இட ஒதுக்கீட்டுக் கொள்கையை ஏற்று 3.5 சதகிவிதம் அளித்தது திமுக ஆட்சிதான்.

இந்த ஒதுக்கீட்டு அளவினை மேலும் உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கை குறித்து பரிசீலிப்போம்…” என்று திமுக தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர். முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீட்டை அதிகப்படுத்தி நம் வருங்கால சந்ததிகள் பயன்பெற உங்கள் பொன்னான வாக்குகளை திமுக கூட்டனிக்கு அளித்து நம் சமுதாயம் கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் தன்னிறைவு அடைய நீங்களும் உதவி செய்யுங்கள்.

முகப்பு

Related Posts Plugin for WordPress, Blogger...