காருக்குள்ளேயே இன்டர்நெட் ?
எதிர் வரும் காலங்களில் சந்தைக்கு விடப்படும் வாகனங்களில் இணையத்தள வசதியும், இணையத்தள விளையாட்டுக்களுக்கான வசதிகளும் உள்ளடக்கப்படுவது தொடர்பில் மைக்ரோசொப்ட் மற்றும் டொயோட்டா நிறுவனம் என்பன புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றில் கைச்சாத்திட்டுள்ளன.
உலகின் மிகப் பெரும் வாகன உற்பத்தி நிறுவனமும், மிகப் பெரும் கணணி மென்பொருள் நிறுவனமும் இணைந்து கொண்டுள்ளமையானது எதிர்காலத்தில் வாகனங்களில் பல முற்போக்கான அம்சங்களும், வசதிகளும் உள்ளடக்கப்படுவதற்கான வாய்ப்பாக அமையும் என்று சந்தை ஆய்வு நிபுணர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.
இந்த செயற்திட்டத்துக்காக இரண்டு நிறுவனங்களும் இணைந்து பன்னிரண்டு மில்லியன் அமெரிக்க டொலர்களை முதலீடு செய்துள்ளன. இச்செயற்திட்டத்தின் கீழ் இணையத்தள வசதி மற்றும் மேம்படுத்தப்பட்ட வசதிகளுடனான புதிய வண்டிகள் எதிர்வரும் ஆண்டில் சந்தையில் அறிமுகப்படுத்தப்படும்.
2015ம் ஆண்டளவில் அனைத்து வாகனங்களிலும் இணையத்தள வசதிக்கான கருவிகளை அறிமுகப்படுத்தவும் பிரஸ்தாப செயற்திட்டம் மூலமாக இரண்டு நிறுவனங்களும் எதிர்பார்க்கின்றன.