கரையான் அரித்து ஒரு கோடி ரூபாய் நோட்டுகள் நாசமாகி உள்ளன. அதுவும் ஸ்டேட் பேங்க் கிளையில் என்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. உத்தர பிரதேசம் பாராபங்கியில் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கி கிளை உள்ளது. இங்குதான், கரையான் அரித்து கரன்சிகள் நாசமாகின.
இது பற்றி ஸ்டேட் வங்கி மண்டல மேலாளர் கீதா திரிபாதி நேற்று நிருபர்களிடம் கூறுகையில், ‘‘பணம் வைக்கப்பட்டிருந்த வங்கி பெட்டியில் கரையான்கள் உருவாகி உள்ளன. அவற்றை அப்புறப்படுத்தும் போது, 1 கோடி ரூபாய் நோட்டுகள் நாசமானது தெரிய வந்தது. இதுகுறித்து ரிசர்வ் வங்கிக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது’’ என்றார்.
தகவல் அறிந்ததும் 4 பேர் அடங்கிய ரிசர்வ் வங்கி குழுவினர் நேற்று பிற்பகல் வங்கி கிளைக்கு வந்து விசாரணையை தொடங்கினர். இதேபோல் கீதா திரிபாதி தலைமையிலான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கி அதிகாரிகள் குழுவும், சம்பந்தப்பட்ட கிளையில் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
வங்கி அதிகாரிகள் கூறுகையில், ‘‘வங்கி பெட்டிகளில் வைக்கப்பட்டுள்ள ரூபாயை 2 மாதத்துக்கு ஒரு முறை ஆய்வு செய்ய வேண்டும். அப்போது ரூபாய் நோட்டுகளின் தன்மை குறித்து பரிசோதித்து குறிப்பு எழுதி வைக்க வேண்டும். ஆனால், வங்கி கிளை நிர்வாகிகள், பல மாதங்களாக சோதனை செய்யாமலும், குறிப்பேடு பராமரிக்காமலும் இருந்துள்ளது தெரிய வந்துள்ளது. இதுகுறித்து விசாரணை தொடர்கிறது’’ என்றனர்.